அங்கீகாரம் இல்லாத மனை பிரிவு வரன் முறைப்படுத்தும் திட்டம்:
2024 பிப்ரவரி 29 - ம் தேதி வரை நீட்டிப்பு..!
வீட்டு மனை வரன்முறை சட்டம் 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து அரசாணையும் (அரசாணை (நிலை) எண். 188/2023) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மனை பிரிவுகளுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற வரும் 2024 பிப்ரவரி 29 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகாரம் இல்லாத மனை பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி அல்லது அதற்கு முன்பு
பதிவு செய்யப்பட்ட மனைப் பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனை பிரிவுகளை வரன் முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்த ஆண்டு 2024 பிப்ரவரி மாதம் 29- ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதனால் எஞ்சிய அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
அதாவது, http://www.tnlayoutreg.in/ என்கிற இணைய தள முகவரிக்கு சென்று இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு விண்ணப்பம் அதாவது ஒரு மனைக்கு ரூ.500 ஆகும்.
கூடுதல் தகவல்களுக்கு..!
ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் மனை வரை முறைக்கு விண்ணப்பித்திருந்த அவர்கள் கூடுதல் தகவல்களுக்கு சி.எம்.டி.ஏ எல்லை என்றால்
044-28414855 Extn. 341, 346
இ மெயில் முகவரி : mscmda@tn.gov.in ,
டி.டி.சி.பி எல்லைக்குள் என்றால் 044-29585229, 044-29585161
இமெயில் : egovdtcp@gmail.com தொடர்பு கொள்ளலாம்.