ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பொது பங்கு வெளியீடு மார்ச் 22, 2018 ஆரம்பம். மார்ச் 26, 2018 நிறைவு. விலைப் பட்டை ரூ.519 - ரூ.520
ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் லிமிடெட் , பொது பங்கு வெளியீடு வியாழக் கிழமை மார்ச் 22, 2018 ஆரம்பமாகிறது. ரூ. 5 முக மதிப்பு கொண்ட 77,249,508 பங்குகளை விற்பனை செய்கிறது. ஐசிஐசிஐ பேங்க் மூலம் ஆஃபர் பார் சேல் 77,249,508 பங்குகள் விற்பனை செய்யப்படும்.
ஐசிஐசிஐ பேங்க் பங்கு முதலீட்டாளர்களுக்கு 3,862,475 பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பங்கு ஒன்றின் விலைப் பட்டை ரூ.519 முதல் ரூ.520 என நிர்ணயக்கப்பட்டு உள்ளது. குறைந்த பட்சம் 28 பங்குகளுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் 28 மடங்குகளில் விண்ணப்பம் செய்ய வேண்டும். பங்கு வெளியீடு திங்கள் கிழ்மை மார்ச் 26 2018 நிறைவு பெறுகிறது.
ஆங்கர் முதலீட்டாளர்கள் ஒரு நாள் முன்னதாகவே மார்ச் 21 ஆம் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த நிறுவனப் பங்குகள் பிஎஸ் இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.புக் ரன்னிங் லீடு மேனேஜர்களாக டிஎஸ்பி மெரில் லிஞ்ச் லிமிடெட், சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா பிரைவேட் , சிஎல் எஸ்ஏ இந்தியா பிரைவேட் லிமிடெட் , எடில் வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், ஐ ஐ எஃப் எல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் எஸ் பி ஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட் ஆகியவை உள்ளன.
தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் பிரிவில் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 60 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் 5 சதவிகிதம் மியூச்சுவல் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிறு முதலீட்டாளர்களுக்கு 10 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கு 15 சதவிகிதம் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். அஸ்பா முறையில் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். இது ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு அனுமதிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக