சிபிசிஎல் மற்றும் ஹெச்எம்ஏ தொடங்கும் திங்கல் (THINKAL) செயல்திட்டத்தின் கீழ் M-Cup விநியோக திட்டம்
சென்னை: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் வளம் குன்றா நிலைப்புத்தன்மை மீதான தனது அர்ப்பணிப்பை
மேலும் வலுப்படுத்தும் வகையில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம்,
ஹெச்.எல்.எல் மேனேஜ்மெண்ட் அகாடெமி (HMA) என்ற அமைப்பின் ஒத்துழைப்போடு திங்கல் (THINKAL)
செயல்திட்டத்தின் கீழ் M-Cup விநியோகத்தை மணலியில் அமைந்துள்ள சி.பி.சி.எல் பாலிடெக்னிக்
கல்லூரியில் தொடங்கியது. மணலி, எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும்
சமூகங்களை சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டு இந்த முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விநியோக செயல்நடவடிக்கையை சி.பி.சி.எல்-ன் துணை பொது
மேலாளர் (நிர்வாகம்) திரு. கோமுராஜ் தொடங்கி வைத்தார். பாலிடெக்னிக் கல்லூரியின் பெண்
பயனாளிகளுக்கு இந்நிகழ்வின்போது M-Cup -களை அவர் வழங்கினார். அத்துடன் மாதவிடாயின்
போது பயன்படுத்துகிற M-Cup -கள் பற்றி விரிவான தகவலை வழங்கும் ஒரு சிற்றேட்டையும் அவர்
அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மாதவிடாயின் போது பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும்
தூய்மையை பேணும் நடைமுறைகளை பின்பற்றுவது மீது பெண்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி கற்பிப்பதே
இந்த சிற்றேடு வெளியிடப்படுவதன் நோக்கமாகும்.
ஹெச்.எல்.எல் மேனேஜ்மெண்ட் அகாடெமியின் ஒரு சிறந்த முன்னெடுப்பான
பிராஜெக்ட் திங்கல், மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வை பரப்புவது மற்றும் மாதவிடாய்
கப்கள் போன்ற நிலைப்புத்தன்மையுள்ள மாற்று வழிமுறைகளை
ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. சி.பி.சி.எல் பாலிடெக்னிக் கல்லூரியில்
நடைபெற்ற இச்செயல்திட்ட அறிமுக நிகழ்வானது, சுற்றுச்சூழலுக்கு தோழமையான மற்றும் குறைந்த
செலவிலான மாதவிடாய் கால தூய்மை தீர்வுகளை வழங்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற
நடவடிக்கையாக அமைந்தது.
இந்நிகழ்வின்போது உரையாற்றிய திரு. கோமுராஜ், மாதவிடாய் சார்ந்த
தூய்மை குறித்த கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் சார்ந்த
கழிவுகளை குறைப்பதிலும் மற்றும் பெண்களுக்கு திறனதிகாரம் வழங்குவதில் நிலைப்புத்தன்மையுள்ள
தயாரிப்புகளின் பங்கையும் அவர் வலுவாக சுட்டிக்காட்டினார். “பிராஜெக்ட் திங்கல் போன்ற
முன்னெடுப்புகள், தங்களது மாதவிடாய் சார்ந்த ஆரோக்கியத்தை கண்ணியத்தோடும், பாதுகாப்போடும்
மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வோடும் பெண்கள் செயல்படுகிற ஒரு சமூகம்
என்ற இலக்கை நோக்கி நெருக்கமாக முன்னேறிச் செல்ல நமக்கு உதவுகின்றன” என்று தனது உரையில்
அவர் குறிப்பிட்டார்.
பிராஜெக்ட் திங்கல் என்பதன் கீழ் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான
முயற்சிகளின் மூலம் தமிழ்நாட்டில் இன்னும் அதிக பகுதிகளில் மாதவிடாய் தூய்மை குறித்த
விழிப்புணர்வு திட்டங்களை நடத்துவதையும் மற்றும் M-Cup விநியோக செயற்பரப்பை விரிவாக்குவதையும்
தங்களது இலக்காக கொண்டிருக்கிறது, சி.பி.சி.எல் மற்றும் ஹெச்.எம்.ஏ நிறுவனங்கள். இதன்
மூலம் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான மாதவிடாய் தூய்மை பராமரிப்பிற்கான அணுகுவசதியை
உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நிழற்பட தலைப்பு
1: மணலி, சி.பி.சி.எல் பாலிடெக்னிக் கல்லூரியில் பிராஜெக்ட்
திங்கல் தொடக்க நிகழ்வின் போது பயனாளிகளுக்கு M-Cup-களை சிபிசிஎல்-ன் துணை பொது மேலாளர்
(நிர்வாகம்) திரு. கோமுராஜ் வழங்கினார்.
About HLL Lifecare
Limited
HLL Lifecare Limited (HLL) is a 59-year-old Government of India enterprise under the Ministry of Health and Family Welfare, committed to delivering innovative and affordable healthcare solutions. Established in 1966 and headquartered in Thiruvananthapuram, Kerala, HLL has grown into a leading manufacturer and provider of healthcare products and services. Its diverse portfolio includes contraceptives, hospital products, pharmaceuticals, in-vitro diagnostic kits, and blood bags.
HLL also operates an extensive diagnostic network and retail
outlets, ensuring greater accessibility to quality healthcare. Additionally,
the company plays a pivotal role in healthcare infrastructure development,
hospital consultancy, and social marketing initiatives, contributing to
national programs on family planning, HIV/AIDS prevention, and maternal and
child health. As a Mini Ratna public sector undertaking, HLL remains dedicated
to enhancing healthcare accessibility and quality across India and beyond.