ஜி
ஸ்கொயர் ஆரண்யா’ - போரூரில் அபார்ட்மெண்ட் விலையில் இடத்துடன் கூடிய வில்லா: ஜி
ஸ்கொயர் அறிமுகம்
சென்னை, 01 ஏப்ரல்
2025. இந்தியாவில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜி
ஸ்கொயர் நிறுவனம் தனது சிறந்த வீட்டு மனை மற்றும் குடியிருப்பு திட்டங்கள் மூலம்
வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்நிறுவனம்
தற்போது போரூரில் உயர்தர குடியிருப்பு மனைகள், வில்லா
மற்றும் வணிக
பயன்பாட்டிற்கான மனைகள்
உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ‘ஜி ஸ்கொயர் ஆரண்யா’ என்னும் திட்டத்தை
அறிவித்துள்ளது. 19.35 ஏக்கரில் அமைய உள்ள இந்த திட்டத்தில் அவரவரின் தேவைக்கு
ஏற்ப 800 சதுர அடி முதல் 3,800 சதுர அடி
வரை மனைகள் உள்ளது.
அடுக்குமாடி
குடியிருப்பு விலையில், ஜி
ஸ்கொயர் ஆரண்யாவில் ஒரு சதுர அடி ரூ.4,290 முதல்
ரூ.6000 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இது
முதலீட்டிற்கான இடமாக இருப்பதோடு, உடனே வீடு
கட்டி குடியேறுவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. சென்னை பைபாஸ் சர்வீஸ்
சாலையில் அமைந்துள்ள இந்த இடத்தில் இருந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும்
செல்வதற்கான போக்குவரத்து வசதி உள்ளது. இதன் அருகில் முக்கிய கல்வி நிறுவனங்கள், டிஎல்எப், ஆர்எம்இசட், எல் & டி, ஏஎஸ்வி
டெக் பார்க், காமர்சோன், தாமரை
டெக் பார்க் மற்றும் ஒலிம்பியா டெக் பார்க் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்களும் பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவையும் உள்ளன.
மேலும்
போரூர் ஜங்ஷன், பல்லாவரம் ரயில்
நிலையம், சென்னை சர்வதேச
விமான நிலையம் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து
வசதியும் உள்ளது. மருத்துவமனைகளை பொறுத்தவரை இதன் அருகில் மியாட் இன்டர்நேஷனல், ஸ்ரீ
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சவீதா
மருத்துவக் கல்லூரி மற்றும் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி
போன்ற புகழ்பெற்ற மருத்துவமனைகளும், ஐடி நிறுவனங்கள் பொறுத்தவரை
டிஎல்எப் ஐடி மற்றும் வரவிருக்கும் ஐடி பூங்காக்கள், பின்டெக் சிட்டி,
டபிள்யூஎஸ்ஐ – பிரெஸ்டீஜ்
ரெயின்ட்ரீ பார்க், எல்&டி
இன்னோவேஷன் கேம்பஸ் பார்க் மற்றும் சென்னை வர்த்தக மையம் உள்ளிட்டவையும் உள்ளன.
மேலும்
போரூரில் வரவிருக்கும் மெட்ரோ ரெயில் சேவை மற்றும் சிறப்பான சாலை வசதிகள்
ஆகியவற்றின் காரணமாக பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்கள் இதனைச் சுற்றி பிரமாண்ட கட்டிடங்களை கட்டத் தயாராகி வருகின்றன. இது
அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் காரணமாக குடியிருப்பு மற்றும் வணிகத்
தேவைகளுக்காக மக்கள் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்குவார்கள்.
ஆவடி-போரூர் சாலை, சென்னை-பெங்களூர்
நெடுஞ்சாலை, சென்னை பைபாஸ், விரைவுச்சாலை, டிரங்க்
சாலை மற்றும் வெளிப்புற ரிங் ரோடு ஆகியவை நகரின் எந்த பகுதிக்கும் செல்வதற்கான
வசதியை கொண்டு இருப்பதால் சென்னை நகர மக்கள் மிகவும் விரும்பும் இடமாக போரூர்
தற்போது மாறி வருகிறது. மேலும் இந்தப் பகுதியில் சிறப்பான பொது போக்குவரத்தோடு, சென்னை
மெட்ரோவின் இரண்டாம் கட்ட காரிடார் 4 திட்டமும்
இந்தப் பகுதிக்கான போக்குவரத்தை மேலும் மேம்படுத்த உள்ளது.
ஜி
ஸ்கொயர் ஆரண்யா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன வசதிகளைக்
கொண்டுள்ளது. உதாரணமாக, பூமிக்கு
அடியில் செல்லும் மின்சார இணைப்பு, புயல்
நீர் வடிகால், குடிநீர் இணைப்பு,
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் சிசிடிவி கேமரா, குடியிருப்பாளர்களுக்கு
தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வழங்க ஒரு வருட இலவச பராமரிப்பு சேவை, மேலும்
தெருவிளக்குகளுடன் கூடிய தார் சாலைகள்,
வில்லாக்கள் கட்டுவதற்கான உதவி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
இது
குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், எங்களின்
‘ஜி ஸ்கொயர் ஆரண்யா’ அதன் குடியிருப்பாளர்களுக்கு ஆடம்பர வாழ்க்கைக்கு
உறுதியளிக்கிறது, உலகத்தரம்
வாய்ந்த குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான இடங்கள் இங்கு உள்ளன. மேலும்
இங்கிருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதற்கான போக்குவரத்து வசதி, பிரீமியம்
வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்டவற்றுடன் இந்த திட்டம் குடும்பங்கள்
மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒப்பிடமுடியாத சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று
தெரிவித்தார்.