ஒவ்வொருவரின் தனித்துவமான தேவைக்கேற்ப இந்தியாவின் முதல் தனிபயனாக்கப்பட்ட ‘பெஸ்போக் லிப்ட்’:
எலைட் எலிவேட்டர்ஸ் நிறுவனம்
அறிமுகம்
அதிநவீன தொழில்நுட்பத்தில்
தனித்துவமான வாழ்க்கை முறையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை
வழங்குகிறது
சென்னை, ஏப்ரல் 8,2025: இந்தியாவில் மாடி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான லிப்ட் தேவை என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதைப் பூர்த்தி செய்யும் விதமாக, உலக அளவில் வீடுகளுக்கான பிரீமியம் லிப்ட்கள் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமாக திகழும் எலைட் எலிவேட்டர்ஸ், வீட்டு உரிமையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவின் முதல் தனிப்பயனாக்கப்பட்ட ‘பெஸ்போக்’ சொகுசு லிப்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் இதன் தலைமை
அலுவலகத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும்
ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவைப் பொறுத்தவரை வீடுகளுக்கான லிப்ட் தேவை
என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒப்பிடமுடியாத
தனிப்பயனாக்கத்துடன் கூடிய லிப்ட்கள் தயாரிப்பில் எலைட் எலிவேட்டர்ஸ் நிறுவனம்
முன்னணியில் இருந்து வருகிறது. இதன் தற்போதைய பெஸ்போக் லிப்ட் ஒவ்வொரு வீடுகளுக்கு
ஏற்ப தனித்துவமான முறையில் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு கட்டிடக்கலை பாணிகளுக்கு
ஏற்ற வகையில் அதிநவீன மற்றும் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இது குறித்து எலைட்
எலிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விமல் பாபு
கூறுகையில், உலகத்தர கண்டுபிடிப்புகளுடன், வீடுகளுக்கான லிப்ட்கள்
பயன்பாட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம்
ஆகும். மேம்படுத்தப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட சிறப்பு அம்சங்கள் மூலம், எங்கள் பெஸ்போக் லிப்ட்கள்
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரும் நாளும் தடையில்லாத மகிழ்ச்சியை அளிக்கும்
வகையில் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பர
அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த
லிப்ட்கள், ஆடம்பரத்துடன் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளன
என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஆடம்பரமான, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும்
பாதுகாப்புடன் பயன்பாட்டிற்கு எளிதான இந்த லிப்ட்டை நாங்கள் அறிமுகம்
செய்திருப்பதன் மூலம் வீடுகளுக்கான லிப்ட்கள் பயன்பாட்டு துறையில் புதியதொரு
புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
எலைட் பெஸ்போக் லிப்ட், ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையை
அறிந்து அவர்களின் விருப்பத்தை அறிந்து தனித்துவமான முறையில் தயாரிக்கப்படுகிறது.
இதன் கதவுகள் பல்வேறு வண்ணங்களில் வாடிக்கையாளரின் விரும்பும் வகையில் நடுவில்
அல்லது பக்கவாட்டில் திறக்கும் வசதியுடன் தீ தடுப்பு அம்சத்துடன் முழுமையாக
கண்ணாடி அல்லது முழுமையாக மறைக்கப்பட்ட வகையில் தயாரிக்கப்படுகிறது. லேண்டிங் ஆப்பரேட்டிங் பேனல்
தொடுதல் அல்லது பட்டன் அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற
வண்ணம் மற்றும் உட்புற காட்சி பின்னணிகளுடன் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன.
இதன் உட்புறத்தின் கீழ் பகுதி மற்றும் மேற்புறம் ஆகியவையும் வாடிக்கையாளர்களின்
விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படுகிறது. மேலும் தளங்களை தேர்வு செய்யும்
பட்டன்களையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தனித்துவமான முறையில் வைத்துக்
கொள்ளலாம். முன்னணி ஐரோப்பிய நிபுணர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட எலைட்
எலிவேட்டர்ஸ் பெஸ்போக், ஐரோப்பிய சி.இ. சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக்
கொண்டுள்ளது, இது சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு உறுதி
அளிக்கிறது. இந்த லிப்ட் கியர் இல்லாத, சத்தமில்லாத தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த புதிய
லிப்ட் சமீபத்திய மற்றும் பாரம்பரிய வீடுகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.
எலைட் எலிவேட்டர்ஸ் நிறுவனம்
அதன் லிப்ட்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இது குறித்து அறிந்து கொள்ள
வாடிக்கையாளர்கள் அதன் 7845039222 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம் அல்லது www.eliteelevators.com/bespoke
என்ற அதன் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
About Elite Elevators: Founded in 2013 and headquartered
in Chennai, Tamil Nadu, Elite Elevators is a premier Indian home elevator
company committed to revolutionizing residential mobility solutions. Partnering
with Germany's TK Access Solutions, a global leader in home elevator
technology, Elite Elevators brings German-engineered and Italian-made lifts
that are internationally acclaimed for their safety, performance, and design.
These high-end, safety-certified elevators have set benchmarks in the industry,
offering unparalleled luxury and comfort to Indian homeowners. Elite Elevators
operates with five manufacturing facilities and two R&D centres in Chennai,
alongside assembling units in Malaysia and Australia, ensuring global reach and
operational efficiency. The company’s current product portfolio includes the
Elite E Series—E50, E200, and E300—offering a range of home lift solutions
manufactured in Italy. Elite Elevators has now launched Elite Bespoke, its
latest product exclusively manufactured in India. Expanding its horizons, Elite
Elevators has established a significant presence in over 40 locations across
India, including regional offices and exclusive experience centres. With a steadfast
commitment to innovation and excellence, Elite Elevators is redefining luxury
and safety in home elevators globally.