மியூச்சுவல்
ஃபண்ட் எஸ்.ஐ.பி. கணக்குகள் மூடுவது அதிகரிப்பு
மியூச்சுவல்
பண்ட் முதலீடுகளில் எஸ்.ஐ.பி. எனப்படும் முறையான முதலீட்டு திட்டம், சிறு
முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. கடந்த 2022-ம் ஆண்டு,
ரஷியா-உக்ரைன் போர் வெடித்த போதுகூட எஸ்.ஐ.பி. கணக்குகள் தொடங்குவது சீராக சென்று
கொண்டிருந்தது.
ஆனால், நடப்பு
2025 ம் ண்டு தொடங்கியதில் இருந்து எஸ்.ஐ.பி. முதலீட்டு கணக்குகள் மூடப்படுவது
அதிகரித்து வருகிறது. தொடங்கப்படும் கணக்குகளை விட மூடப்படும் கணக்குகள் *அதிகமாக
உள்ளன.
பங்குச் சந்தை
நிலவரம் குறித்து முதலீட்டாளர்களிடையே எச்சரிக்கை அதிகரித்து இருப்பதே இதற்கு
காரணம். 'மேலும், மியூச்சுவல் ஃபண்ட்களில் பெரும்தொகை முதலீடு செய்வதும்
குறைந்துள்ளது.