₹ 525 கோடி வருவாயுடன்
ரியல் எஸ்டேட் துறையில் பெருநிறுவனமாக உருவெடுக்கும் டிஆர்ஏ DRA Homes
● புத்தாக்கம் மற்றும் நேர்மறை தாக்கத்தின் மூலம் ரியல் எஸ்டேட் தளத்தில்
சிறப்பான 10+ ஆண்டுகளை கொண்டாடி மகிழ்கிறது
சென்னை: 24 ஏப்ரல் 2025: சென்னையின் வளர்ச்சி வரலாற்றை மறுவரையறை செய்யும் ஒரு சிறப்பான சாதனையாக நிதியாண்டு 2024-25-ல் பிரமிக்கத்தக்கவாறு ₹525 கோடி வருவாயுடன் ₹500 கோடி கிளப்பில் டிஆர்ஏ நுழைந்திருக்கிறது.
இந்த மைல்கல்லை இம்மாநகரில் மிக விரைவாக எட்டியிருக்கும் டெவலப்பர் என்ற பெருமையை இதன்மூலம் டிஆர்ஏ பெற்றிருக்கிறது. இந்த வெற்றியானது, டிஆர்ஏ 2.0 என்ற உயிரோட்டமான புதிய அத்தியாயம் தொடங்கப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. தொழில்நுட்பத்தால் ஏதுவாக்கப்படும் தீர்வுகள், வாடிக்கையாளரை மையமாக கொண்ட சிந்தனை மற்றும் உருவாக்கத்திற்கு உள்ளூரை அதிகம் சார்ந்த அணுகுமுறை ஆகிய அம்சங்கள் இந்த புதிய அத்தியாயத்தில் இடம்பெறுகின்றன.
சென்னையின் பெருமை என்ற கோட்பாட்டை அடித்தளமாக கொண்ட டிஆர்ஏ –
ன் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட பயணமாக இது இருந்து வந்திருக்கிறது. இல்லங்களை
வாங்குகின்ற நகர்ப்புறங்களைச் சேர்ந்த நவீன வாடிக்கையாளர்கள் குறித்த ஆழமான
புரிதலும் மற்றும் பணிகளை நிறைவுசெய்து உரிய நேரத்தில் தவறாமல் டெலிவரி செய்யும்
திறனும் டிஆர்ஏ – ன் பயணத்தில் எப்போதும் முதன்மை அம்சமாக இருந்து வருகிறது.
₹500 கோடி என்ற மைல்கல்லை கடந்திருக்கும் இச்சாதனையை நினைவுகூரும் வகையில், ஒரு மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வை டிஆர்ஏ ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறது. இந்த பிராண்டின் குறிக்கோளை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியிருக்கின்ற பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், கூட்டாளிகள், வங்கிகள், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் என பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்த நிகழ்வாக இது அமைந்தது. டிஆர்ஏ – ன் நிர்வாக இயக்குனர் திரு. ரஞ்சித் ரத்தோட், அவருக்கு தணை நிற்கும் தலைமைத்துவ நிர்வாகக் குழுவினரோடு இணைந்து ₹500 கோடி வருவாய் ஈட்டிய நிறுவனங்கள் பட்டியலில் வெற்றிகரமாக நுழைந்திருக்கும் சாதனை பற்றி பெருமையுடன் எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து, ஃபின்டெக் யூனிகார்ன் நிறுவனமான யூபி - ன்
நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான திரு. கௌரவ் குமார் வழங்கிய
சிறப்புரை இடம்பெற்றது. புத்தாக்கம், நம்பிக்கை மற்றும் நீண்டகால வெற்றி ஆகிய அம்சங்களின்
ஒருங்கிணைப்பு குறித்து பேரார்வத்துடன் சுவாரஸ்யமாக அவர் உரையாற்றினார்.
மேலும்
இத்தொழில்துறையில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் புத்தாக்க செயல்பாடுகளின்
ஒரு தொகுப்பையும் டிஆர்ஏ இந்நிகழ்வில் காட்சிப்படுத்தியது. நிகழ்நேர
கட்டுமானப்பணி தகவல்களுக்காக டைம்லைன் மீட்டர், திருப்தி அளவுகள் பற்றிய கருத்தை
அறிய வாடிக்கையாளர் டிலைட் மீட்டர் மற்றும் முற்றிலும் தாள் பயன்பாடற்ற ஆன்லைன் வாடிக்கையாளர் இணையவாசல்
ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன. வெளிப்படைத்தன்மை மீதும் மற்றும் வீடுகளை வாங்குவதில் சிரமமற்ற, தொழில்நுட்பத்தால்
முன்னெடுக்கப்படும் அனுபவத்தை வழங்குவதிலும் டிஆர்ஏ கொண்டிருக்கும் தளராத
அர்ப்பணிப்பை இந்த முன்னெடுப்புகள் பிரதிபலிக்கின்றன.
DRA Team with Dr. C. N. Gangadaran, Managing Partner, CNGSN & Associates, Honorary Consul of Mongolia, Tamilnadu & Mr. Gaurav Kumar, Founder and CEO of fintech unicorn Yubi.
டிஆர்ஏ – ன் பயணத்தில் இந்த பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தைக் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் திரு, ரஞ்சித் ரத்தோட் கூறியதாவது: “₹525 கோடி என்ற அளவை கடந்திருப்பதென்பது வெறுமனே ஒரு நிதிசார் மைல்கல் மட்டுமல்ல; எமது பயணத்தை வடிவமைத்திருக்கின்ற மதிப்பீடுகள், குறிக்கோள் மற்றும் ஆழமான நம்பிக்கையின் கொண்டாட்டம் இது. டிஆர்ஏ – ல், வீடுகளை கட்டுவது என்ற வரம்பெல்லைக்கும் அப்பால் நாங்கள் எப்போதும் தீவிரமாக செயலாற்றி இருக்கிறோம்; சென்னையின் நவீன இல்ல உரிமையாளர்களின் மாற்றம் கண்டு வரும் விருப்பங்களை பிரதிபலிக்கிறவாறு நேர்த்தியான வாழ்விட அனுபவங்களை நாங்கள் உருவாக்குகிறோம். நாங்கள் கட்டும் ஒவ்வொரு வீடும் ஆழமான சிந்தனையில் பிறந்த வடிவமைப்பை நுண்ணறிவான செயல்திறனோடு சிறப்பாக கலக்கிறது; வாடிக்கையாளரது விருப்பங்களுக்கு இணக்கமாகவும், உள்ளூர் தேவைகளுக்குப் பொருத்தமானதாகவும் இது வடிவமைக்கப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான ஆனால், அதிக செயல்திறன் கொண்ட குழுவினரின் ஆதரவோடு அர்ப்பணிப்பு மற்றும் நெகிழ்வுத்திறனுடன் தொழில்துறையின் அளவுகோல்களையும் பல நேரங்களில் கடந்து நாங்கள் பணிகளை நிறைவுசெய்து, வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்திருக்கிறோம்.
இந்த
மைல்கல் சாதனை என்பது, கூட்டு முயற்சியின் மூலம் கிடைத்த வெற்றியாகும். எமது
வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, எமது பணியாளர்களின் பேரார்வம் மற்றும் எமது
கூட்டாளிகள் மற்றும் அக்கறைப்பங்காளர்களின் அசைக்க முடியாத ஆதரவின் காரணமாக இந்த
வெற்றி சாத்தியமாகிருக்கிறது. இனிவரும் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள இச்சாதனை எங்களுக்கு
ஊக்கமளிக்கிறது.”
தனது
சிறப்பான முன்னேற்றப் பயணத்தை டிஆர்ஏ தொடரும் நிலையில் வளர்ச்சியடைந்து வரும்
நுண்-சந்தைகள் மீது இது கொண்டிருந்த கூர்நோக்கமே வளர்ச்சியை முன்னெடுக்கும்
முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. மேடவாக்கம், சோழிங்கநல்லூர், மாதவரம், ஆவடி மற்றும் நாவலூர் போன்ற
சென்னையில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் இந்த பிராண்டு சிறப்பான
வரவேற்பையும், மக்களின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறது. சென்னை
மாநகரின் தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் டிஆர்ஏ கொண்டிருக்கும்
வலுவான புரிதலை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது.
அதிக சாத்தியத்திறனுள்ள
அமைவிடங்களில் புதிய கட்டுமான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
சென்னையின் குடியிருப்புக்கான செயல்தளத்தை மேம்பட உருவாக்குவதிலும் மற்றும் தனது
பணியை இன்னும் அதிக அர்த்தமுள்ள விதத்தில் செயல்படுத்துவதிலும் டிஆர்ஏ தொடர்ந்து
பொறுப்புறுதி கொண்டிருக்கிறது. சந்தை மீதான சரியான உள்நோக்கு கண்ணோட்டங்களை எதிர்காலத்தை கூர்நோக்கமாக
கொண்ட அணுகுமுறையுடன் கலப்பதன் வழியாக மில்லேனியல்ஸ் மற்றும் ஜென் Z நபர்களுக்கு
சொந்த வீட்டின் மீதான உரிமைத்துவம் என்பதை டிஜிட்டல் வசதி, கட்டிடக்கலையில்
நேர்த்தி மற்றும் நீடித்த நிலைப்புத்தன்மை ஆகியவற்றின் மீதான வலியுறுத்தலுடன் இந்த
பிராண்டு மறுவரையறை செய்கிறது.
செங்கல், சிமெண்ட் என்ற வழக்கமான கட்டுமானப் பணிகளையும் கடந்து டிஆர்ஏ – ன் வெற்றி என்பது, செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்கும் கலாச்சாரம், திறமையான தலைமைத்துவம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை தேவைகளைப் பூர்த்தி செய்கிறவாறு குடியிருப்பு வளாக திட்டங்களை உரிய நேரத்திற்குள் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் செயல்பாடு ஆகியவற்றில்தான் அடங்கியிருக்கிறது.
சென்னை மாநகரம் மேலும் வளர்ச்சியடையும்போது, இந்நகரின் உயிரோட்டமான உணர்வைப்
பிரதிபலிக்கின்ற மற்றும் உத்வேகமளிக்கின்ற இல்லங்களை உருவாக்குவதில் டிஆர்ஏ தன்னை
முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. ₹525 கோடி
என்ற மைல்கல் சாதனையானது, நகர்ப்புற வாழ்க்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான
டிஆர்ஏ – ன் இலட்சியத்திற்கும், குறிக்கோளுக்கும் ஊக்கமளிக்கிறது.
DRA குறித்து – 40 ஆண்டுகள் என்ற செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் டிஆர்ஏ, சென்னை எங்கும் உலகத் தரத்திலான செயல்திட்டங்களை வழங்கி ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான பிராண்டாக உருவெடுத்திருக்கிறது. 12,000 – க்கும் அதிகமான எண்ணிக்கையில் திருப்தியடைந்த வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் டிஆர்ஏ, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய நேரத்திற்குள் டெலிவரி என்ற அதன் பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. டிஆர்ஏ – ன் நிர்வாக இயக்குனர் திரு. ரஞ்சித் ரத்தோட் அவர்களின் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ், அபார்ட்மென்ட்களை கட்டுவது என்பதையும் கடந்து, வாடிக்கையாளர்களுக்கு “பெருமை மிகு இல்லங்களை” வழங்கி வருகிறோம். சாதித்த உணர்வையும் மற்றும் நமது வீடு என்ற உணர்வையும் வழங்கி, சிறப்பான லைஃப்ஸ்டைலுக்கு ஏற்ற வாழ்விட அமைவிடங்களை நேர்த்தியான சிந்தனையோடு வடிவமைத்து நாங்கள் வழங்கி வருகிறோம்.
குடியிருப்பு வளாக செயல்திட்டம் மீதான நிகழ்நிலைத் தகவலுக்கு ‘டைம்லைன் மீட்டர்’ மற்றும் ‘கஸ்டமர் டிலைட் மீட்டர்’ போன்றவை வாடிக்கையாளர் திருப்தி மீது கொண்டிருக்கும் எமது அக்கறையைப் பிரதிபலிக்கின்றன; புராஜெக்ட் விவரங்களுக்கும் மற்றும் ஆவண செயல்பாடுகளுக்கும் எளிதான அணுகுவசதியை இதன் ஆன்லைன் வாடிக்கையாளர் இணையவாசல் உறுதி செய்கிறது.
டிஆர்ஏ பிரிஸ்டின் பெவிலியன், டக்ஸிடோ, அஸ்காட், ஸ்லைலான்டிஸ், எலிட், இன்ஃபினிக் மற்றும் போன்ற புராஜெக்ட்களும் நவீனத்துவத்தோடு மதிப்பை உயர்த்துகின்ற முதலீடுகளுடன் ஒருங்கிணைப்பதில் டிஆர்ஏ – ன் பொறுப்புறுதியை எடுத்துக்காட்டுகிறது. FICCI – ன் ரெய்சா மற்றும் டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸ் போன்ற சிறப்பான விருதுகளின் அங்கீகாரம் பெற்ற டிஆர்ஏ, கிரிஸில் – ன் 7 நட்சத்திர தரநிலையைப் பெற்றிருக்கின்ற சென்னையில் முதல் டெவலப்பர் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புறுதி முன்னெடுப்புகளில் குளம் போன்ற நீர்நிலைகளின் சீரமைப்பும் மற்றும் இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி ஆகியவையும் உள்ளடங்கும். சமூகத்தின் நலன் மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை முன்னிலைப்படுத்துவதாக இவைகள் இருக்கின்றன.
“காலத்தைக் கடந்து நிற்கும் இல்லம்”, “உரிய நேரத்திற்குள் டெலிவரி” என்ற தனது விருதுவாக்கை செயல்படுத்தி வரும் டிஆர்ஏ, அது உருவாக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் தொடர்ந்து பெருமையையும், நம்பிக்கையையும் இடம்பெறச் செய்கிறது. இங்கு கனவுகள், நிலைத்து நிற்கும் பாரம்பரியங்களாக மாறுகின்றன.