எல்
அண்ட் டி ஃபைனான்ஸ் லிட், மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில் வரிக்குப்பிந்தைய
லாபமாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2644 கோடியை ஈட்டியுள்ளது இது, கடந்த ஆண்டைவிட
14% உயர்வு ஆகும். அதேபோல, 31 மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டின் வரிக்குப்பிந்தைய
லாபம் ரூ.636 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இறுதி காலாண்டுடன் ஒப்பிடுகையில்
இது 15% வளர்ச்சி
2024-25
ஆம் நிதியாண்டுக்கான இறுதி பங்காதாயமாக இதுவரை
இல்லாத உயர்வாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.75 வழங்க
இயக்குநரவை பரிந்துரைத்துள்ளது.
சென்னை 26, ஏப்ரல்
2025, நாட்டின் முன்னணி
வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான எல் அண்ட் டி ஃபைனான்ஸ் லிட், மார்ச் 31,
2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.2644 கோடியை ஒட்டுமொத்தமாக
ஈட்டியுள்ளது. இது, இதுவரை இல்லாத உயர்வு ஆகும். மேலும், முந்தைய ஆண்டைவிட 14% வளர்ச்சியும்
ஆகும். மார்ச் 31, 2025 உடன் முடிந்த 4 ஆவது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.636 கோடியை
வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியிருக்கிறது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 15% வளர்ச்சியாகும்.
கடந்த 2024 மார்ச் 31 உடன்
முடிவடைந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் தற்போது சில்லரை கடன்கள் 19% உயர்ந்து, ரூ.95,180
கோடியாக ஆகியிருக்கின்றன. வருடாந்திர சில்லரைக் கடன் வழங்கல், ரூ.60,040 கோடியாக (அதாவது
முந்தைய ஆண்டைவிட 11% வளர்ச்சி) உயர்ந்திருக்கிறது. அதேபோல மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த
காலாண்டில் வழங்கிய சில்லரைக் கடன்களின் அளவு ரூ.14,889 கோடியாக நிலைபெற்று இருந்தது.
எல் அண்ட் டி ஃபைனான்ஸ்
நிறுவனத்தின் இயக்குநரவைக் கூட்டம் ஏப்ரல் 25, 2025 அன்று கூடியது. அந்த அவை,
2024-25 ஆம் நிதியாண்டுக்கான பங்காதாயமாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.75 ஐ (பங்கு ஒன்றின்
முகமதிப்பு ரூ.10 ) அறிவித்தது. இந்நிறுவனம்
இதுவரை அறிவித்ததிலேயே இதுதான் அதிகபட்சம் ஆகும். நிறுவனத்தின் பொதுக்குழுவால் ஒப்புதல்
தரப்பட்டவுடன் பொதுக்குழுகூட்டம் நிறைவடைந்த 30 நாட்களுக்குள் பங்காதாயம் வழங்கப்பட்டுவிடும்.
மேலும், இந்நிறுவனத்தின்
வாடிக்கையாளர்களுக்காக செயல்படுத்தப்படும் பிளானட் 3.0 (பீட்டா) செயலி (PLANET app
3.0 -Beta) எல் அண்ட் டி ஃபைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வலுவான டிஜிட்டல் சானலாக ஆகியிருக்கிறது.
இன்றைய தேதியில் அந்த செயலியை 1.72 கோடிபேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் 16 லட்சம்
பேர் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இன்றைய நிலவரப்படி 6.85 கோடி விண்ணப்பங்களின்
அடிப்படையில் ரூ.3800 கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது.
மொத்தம் ரூ.12,700 கோடிக்கு கடன்கள் (இணைய வழி உட்பட) வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும்
இந்நிறுவனம், அதிவிரைவான, நேர்த்தியான, வாடிக்கையாளர்களை முன்னிறுத்திய சிறப்பான இணையதளத்தை
அறிமுகம் செய்திருக்கிறது.
எல் அண்ட் டி ஃபைனான்ஸ்
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச்செயல் அலுவலருமான திரு.சுதிப்தா ராய் தற்போதைய
நிதிநிலை முடிவுகளைப்பற்றிப் பேசுகையில், “பல்வேறு சவால்கள் இருந்த போதிலும் எங்கள்
சிறப்பான திறமை மிக்க செயல்பாடுகள் தொடர்ந்தன.
எங்களது எல்லா வணிகங்களிலும் சிறப்பான வசூலை மேற்கொள்வதற்கு எமது தங்கு தடையற்ற அர்ப்பணிப்புணர்வே
அடித்தளமாக அமைந்தது. 2024 25 ஆம் நிதியாண்டு, மற்றும் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவதற்கு
ஒரு முக்கிய படிக்கல்லாக அமைந்துள்ளது எனலாம்.
ப்ராஜெக்ட் சைக்ளோப்ஸ்
2.0 என்ற பெயரில் நாங்கள் அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை இருசக்கர
வாகன கடன்களுக்காக உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறோம் விரைவில் இது வேளாண் இயந்திரங்களுக்கும்
கடன் வழங்க பயன்படுத்தப்படும். இது ஒரு புறம்
இருக்க போன் பே, க்ரெட், அமேசான் பே ஆகிய நிறுவனங்களுடன் கடந்த 2024 2025 காலகட்டத்தில் தொடங்கப்பட்ட கூட்டு செயல்பாடு
நல்ல விளைவைத் தந்திருக்கிறது. இவ்வாண்டில் எமது இடர் மேலாண்மை மற்றும் கடன் வழங்குதல்
செயல்பாடுகளில் எங்கள் பலத்தை மென்மேலும் வலுப்படுத்தியிருக்கிறோம். இது தொழில்நுட்பம்
மற்றும் வாடிக்கையாளர்-என்று இரு தரப்பிலும் சாத்தியமாகியிருக்கிறது. இது எதிர்காலத்திலும்
சிறப்பாக செயல்படும்.
இந்நிலையில் எங்களது இலக்கானது
எமது வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவதே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. சிறப்பான செயல்பாடுகள் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட செயல்முறைகள், வலுவான நிர்வாகம் சிறப்பான இடர் மேலாண்மை, இணைய வழி அணுகுமுறைக்கு முக்கியத்துவம் ஆகியவை எங்களது வளர்ச்சிப் பாதையில் எங்களுக்கு
கை கொடுக்கும் என்பதுடன் எமது நிறுவனத்தை வாடிக்கையாளரை
இலக்காகக் கொண்ட, டிஜிட்டல் உலகில் ஜாம்பவானாக
எங்களை உருவாக்கும் என்று நம்புகிறோம்“ என்றார்.