டாஃபே
துணைத் தலைவராக டாக்டர். லட்சுமி வேணு நியமனம்
இந்தியா, 17 மார்ச்
2025: உலகளவில் டிராக்டர் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக
புகழ்பெற்ற பெரு நிறுவனமான டாஃபே – டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்யூப்மெண்ட்
லிமிடெட்-ன் இயக்குநரான டாக்டர். லட்சுமி வேணு, டாஃபே குழுமத்தின் துணைத் தலைவராக (வைஸ்
சேர்மன்) நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வேளாண் பணிகளை எந்திரமயமாக்கல் மற்றும் ஆட்டோமொபைல்,
உதிரிபாகங்கள், பிசினஸ் பிரிவில் நிகழ்த்திய சாதனைகளுக்காக பெரிதும் மதிக்கப்படும்
ஒரு சிறப்பான தலைவராக டாக்டர். லட்சுமி புகழ் பெற்றிருக்கிறார்.
டாஃபே துணைத் தலைவராக டாக்டர். லட்சுமி வேணு
டாக்டர். லட்சுமி அவர்களின் உத்திவாய்ந்த
சிந்தனை, வாடிக்கையாளர் நலனை மையமாகக் கொண்ட அணுகுமுறை, தரத்தின் மீது உறுதியான
கூர்நோக்கம், டாஃபே-ன் மாஸே பெர்குஸன் மற்றும் ஐஷர் டிராக்டர்ஸ் பிசினஸ் பிரிவில்
ஆழமான ஈடுபாடு ஆகியவை அவரது தலைமைத்துவ பண்புகளை பிரதிபலிக்கின்றன; பணியாளர்கள்,
வாடிக்கையாளர்கள், புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்நேர்த்தி ஆகியவற்றில்
அவரது ஆழமான பொறுப்புறுதிக்கு எடுத்துக்காட்டாக அவரது பண்புகள் அறியப்படுகின்றன. இவரது
சிறப்பான தலைமைத்துவ பண்புகளின் அங்கீகாரமாக டாஃபே இயக்குநர்கள் குழுவின் (போர்டு)
துணைத் தலைவராக டாக்டர். லட்சுமி வேணு அவர்களை டாஃபே நியமனம் செய்திருக்கிறது.
டாஃபே
குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திருமதி. மல்லிகா ஶ்ரீனிவாசன் இது தொடர்பாக
கூறியதாவது: “எமது நிர்வாக தலைமைத்துவ குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராகவும் மற்றும்
டாஃபே -ன் இயக்குநர்கள் குழுவின் ஒரு அங்கத்தினராகவும் டாக்டர். லட்சுமி இருந்து வருகிறார்.
இவரது தாக்கம் ஏற்படுத்தும் சிறந்த பங்களிப்பை பாராட்டி அங்கீகரிக்கும் விதத்தில் துணைத்
தலைவராக அவரை நியமனம் செய்வதில் இயக்குநர்கள் குழு மகிழ்ச்சியடைகிறது. எதிர்காலத்திற்காக
நிறுவனத்தை கட்டமைப்பது மீது சிறப்பு கவனம் கொண்டிருக்கிற அவரது தலைமைத்துவ பண்பு மற்றும்
பாங்கின் மூலம், “உலகை பண்படுத்துவோம்” (Cultivating the World’) என்ற குறிக்கோளை நோக்கிய
டாஃபே -ன் ஒத்துழைப்புமிக்க மதிப்பு அடிப்படையிலான அணுகுமுறையை அவர் இன்னும் திறம்பட
பயன்படுத்துவார் என்று நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். இயக்குநர்கள் குழு மற்றும்
நிர்வாகத்தின் சார்பாக அவரை வாழ்த்தி நாங்கள் வரவேற்கிறோம்.”
டாக்டர்.
லட்சுமி அவர்களின் நியமனம் குறித்து டாஃபே -ன் இயக்குநர் திரு. P B சம்பத் பேசுகையில்,
“டாக்டர் லட்சுமி, அவரது வலுவான கல்விசார் பலத்தோடும் மற்றும் டிராக்டர்கள், ஆட்டோ
உதிரிபாகங்கள் தொழில்துறையில் பெற்றிருக்கும் செழுமையான அனுபவத்தாலும் நல்ல பிசினஸ்
செயல்திறன், அனுபவம் மற்றும் உயர் மதிப்பீடுகளின் நேர்த்தியான கலவையாக திகழ்கிறார்.
டாஃபே குழுமத்தின் நிறுவனரது குடும்பத்திலிருந்து மரபியல் ரீதியாக அவர் பெற்ற மதிப்பீடுகளின்
வளமான பாரம்பரியம், எதிர்காலத்தில் டாஃபே -ன் வலுவான முன்னேற்ற பயணத்திற்கு செழுமையான
ஊக்கத்தையும், உத்வேகத்தையும் வழங்குமென்று நிச்சயமாக நம்புகிறோம்” என்று கூறினார்.
டாஃபே -ன் தலைமை செயலாக்க
அதிகாரி திரு. சந்தீப் சின்ஹா கூறியதாவது: “இயக்க ரீதியிலான செயல்திறனையும், சந்தை
ஈடுபாட்டையும் சமமாக பாதிப்பதில் டாக்டர். லட்சுமி அவர்களின் தனித்துவமான நிபுணத்துவத்துடன்,
தயாரிப்பு பொருட்கள் மீதான வலுவான அறிவு, இந்திய மற்றும் உலகளாவிய சந்தைகள் மீது
ஆழமான புரிதல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தீவிர ஆர்வம் ஆகிய
பண்புகளும் ஒருங்கிணைந்து டாஃபே -ஐ வழிநடத்துவதற்கு மிகப் பொருத்தமான நபராக அவரை
நிலைநிறுத்துகிறது”.
டாஃபே -ன் துணைத் தலைவராக தான்
நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து டாக்டர். லட்சுமி கூறியதாவது: “என் மீது வலுவான
நம்பிக்கையை வைத்திருப்பதற்காக இயக்குநர்கள் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன். எமது நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த எமது மிக முக்கியமான
இலக்குகளை அடைவதற்கு தொடர்ச்சியான வெற்றியை முன்னெடுக்கவும் இயக்குநர்கள்
குழுவோடும் மற்றும் டாஃபே மற்றும் ஐஷர் டிராக்டர்ஸ்களின் நிர்வாக குழுவினருடன் இணைந்து
நெருங்கி பணியாற்றுவதை நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.”
2023-ம் ஆண்டில் “பிசினஸில்
அதிக சக்திவாய்ந்த பெண்மணிகள்” ஒருவராக பிசினஸ் டுடே இதழின் அங்கீகார விருது உட்பட
பல விருதுகளையும், பாராட்டுகளையும் டாக்டர். லட்சுமி அவர்களின் பங்களிப்புகள்
அவருக்கு பெற்று தந்திருக்கின்றன. “40 வயதிற்கு கீழ்ப்பட்ட இளம் தலைவர்கள்” என்ற
விருதையும் எக்னாமிக்ஸ் டைம்ஸ் இதழ் இவருக்கு வழங்கியிருக்கிறது. இந்நாட்டில் முன்னணி
ஆட்டோமோட்டிவ் பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான சுந்தரம்-கிளேடன் லிமிடெட்-ன் நிர்வாக
இயக்குநராகவும் டாக்டர். லட்சுமி திறம்பட செயலாற்றி இருக்கிறார். யேல்
பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் யுகே-ன் வார்விக் பல்கலைக்கழகத்திலிருந்து
பொறியியல் மேலாண்மையில் முனைவர் பட்டத்தையும் இவர் பெற்றிருக்கிறார்.
***
டாஃபே
குறித்து:www.tafe.com
டாஃபே - டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்யூப்மெண்ட் லிமிடெட், இந்தியாவில் சென்னையில் 1960 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு டிராக்டர் துறையில் இயங்கி வரும் ஒரு பெருநிறுவனமாகும். உலகளவில் டிராக்டர் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாகவும் மற்றும் எண்ணிக்கையின்படி இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் திகழும் டாஃபே, ஒவ்வொரு ஆண்டும் 180,000-க்கும் அதிகமான டிராக்டர்களை விற்பனை செய்து வருகிறது.
சிறப்பான தரம் மற்றும் குறைவான இயக்கச் செலவு ஆகிய அம்சங்களுக்காக பரவலான அங்கீகாரம் பெற்றிருக்கும் தனது தயாரிப்புகளது விரிவான அணிவரிசை வழியாக வாடிக்கையாளர்களின் ஆழமான நம்பிக்கையை டாஃபே பெற்றிருக்கிறது. டாஃபே, மேஸி பெர்குசன், ஐஸர் மற்றும் ஐஎம்டி என்ற டாஃபே- ன் பிரபலமான பிராண்டுகளுக்கு 1600-க்கும் அதிகமான டீலர்களின் வலுவான விநியோக வலையமைப்பு ஆதரவளித்து வருகிறது.
இந்தியாவிலிருந்து 80-க்கும் அதிகமான நாடுகளுக்கு டிராக்டர்களை ஏற்றுமதி
செய்து வரும் டாஃபே, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவற்றில்
வேளாண் துறைக்கு தனது தயாரிப்புகள் மூலம் ஆற்றலை வழங்கி வருகிறது.
2005- ம் ஆண்டில் ஜெர்மன் வேர்களைக் கொண்ட பிரபல ஐஷர் பிராண்டின் டிராக்டர்ஸ், இன்ஜின்ஸ் மற்றும்
டிரான்ஸ்மிஷன்ஸ் பிசினஸ் பிரிவை தனது துணை நிறுவனமான டாஃபே மோட்டார்ஸ் மற்றும்
டிராக்டர்ஸ் லிமிடெட் (TMTL) வழியாக டாஃபே கையகப்படுத்தியது. டிராக்டர்ஸ்களுக்கும் கூடுதலாக, வேளாண் இயந்திரங்கள், டீசல் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள், வேளாண்-தொழில்துறைக்கான
இன்ஜின்கள், பொறியியல் சார்ந்த பிளாஸ்டிக்குகள், கியர்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்கள், ஹைட்ராலிக் பம்ப்கள் மற்றும் சிலிண்டர்கள், வாகனங்களுக்கான ஃபிரான்சைஸ்கள் மற்றும் தோட்டங்கள் உட்பட, பல்வேறு துறைகளில் வேறுபட்ட பல பிசினஸ் நிறுவனங்களை டாஃபே மற்றும் அதன் துணை
நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன.
2018-ம் ஆண்டில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டிராக்டர் மற்றும் வேளாண் சாதன பிராண்டான
IMT
– ஐ டாஃபே வாங்கியது. அதற்கும் கூடுதலாக, ஃபிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த உலகளாவிய ஆட்டோமோட்டிவ் சப்ளையர் நிறுவனமான குரூப்
ஃபோர்வியாவின் இந்திய இன்டீரியர் (உள் அலங்கார) பிசினஸ் பிரிவான FAURECIA – ஐ டாஃபே 2022-
ம் ஆண்டில் வாங்கியது.
முழுமையான தர மேலாண்மையில்
(TQM) டாஃபே வலுவான பொறுப்புறுதியுடன் இயங்கி வருகிறது. சமீப ஆண்டுகளில் டாஃபே -ன்
பல்வேறு உற்பத்தி ஆலைகள், ஜப்பான் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாண்ட் மெய்ன்டனன்ஸ் (JIPM)
அமைப்பிடமிருந்து எண்ணற்ற ‘TPM Excellence’ விருதுகளை வென்றிருக்கின்றன. அத்துடன் TPM
செயல்பாட்டில் நேர்த்தி நிலைக்காக பிராந்திய அளவில் பல விருதுகளையும் இந்த
உற்பத்தி ஆலைகள் பெற்றிருக்கின்றன. 2023-ம் ஆண்டில் இதன் ஐஷர் பிரைமா G3 டிராக்டர்
அணிவரிசைக்காக ‘ஆண்டின் மிகச்சிறந்த அறிமுகம்’ என்ற விருதை டாஃபே வென்றிருக்கிறது.
2023-ம் ஆண்டின் சிறந்த இந்திய டிராக்டர் விருதுகள் நிகழ்வின் நான்காவது பதிப்பில்
ஜேஃபார்ம் சர்வீசஸிற்காக ‘சிறந்த CSR முன்னெடுப்பு’ என்ற விருது மற்றும்
சுங்கத்துறை ஆணையரிடமிருந்து முதன்மையான ஏற்றுமதியாளர் விருது உட்பட இன்னும்
மூன்று கௌரவமிக்க விருதுகளை டாஃபே பெற்றிருக்கிறது.
2018-ம் ஆண்டில், பிராஸ்ட்
& சுலிவன் குளோபல் மேனுஃபேக்சரிங் லீடர்ஷிப் அவார்டு என்ற முதல் இந்திய
டிராக்டர் தயாரிப்பாளர் என்ற பெருமையை டாஃபே பெற்றது. அத்துடன் எண்டர்பிரைஸ்
ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப தலைமைத்துவ விருது மற்றும் சப்ளை செயின்
லீடர்ஷிப் பிரிவில் இரு விருதுகள் ஆகியவற்றையும் டாஃபே பெற்றிருக்கிறது. பொறியியல்
ஏற்றுமதியில் இதன் மிகச்சிறப்பான பங்களிப்பின் அங்கீகாரமாக தொடர்ந்து 23 தடவையாக இந்திய
பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் – தென் பிராந்தியத்தின் ‘நட்சத்திர
செயற்பாட்டாளர் – பெரு நிறுவனம் (வேளாண் டிராக்டர்கள்)’ என்ற விருதும் டாஃபே -க்கு
வழங்கப்பட்டிருக்கிறது.
உயர்தரம் மற்றும் குறைவான இயக்கச்செலவு
ஆகிய பண்பியல்பிற்கான பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் தனது தயாரிப்புகளது தொகுப்பின்
மூலம் வாடிக்கையாளர்களின் வலுவான நம்பிக்கையை டாஃபே பெற்றிருக்கிறது. தொடக்க காலத்திலிருந்தே சமூக நலன் மீதான டாஃபே – ன் கூர்நோக்கம் அதிகமாக
இருந்திருக்கிறது. விவசாயம், கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு, பேரிடர் நிவாரணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினர் நலன் ஆகிய
பொருள் பதிந்த நோக்கங்களுக்காகவும் மற்றும் நம் நாட்டிற்கே உரிய பாரம்பரியமான கலை
வடிவங்களுக்கு ஆதரவளிக்கவும் தனது உறுதியான பங்களிப்பை டாஃபே வழங்கி வருகிறது.