சொத்து வரி: சதுர அடிக்கு எவ்வளவு? Property Tax
தமிழக சட்டசபையில் நகராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கி ரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்கு மார் (கிள்ளியூர்) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
மீண்டும் சொத்து வரி உயர்வு..!
ராஜேஷ்குமார் (கிள்ளியூர்):- தமிழ்நாடு முழுவதும் மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப் புக்கு உள்ளாகி உள்ளனர்.
பொதுவாக மாநில அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்தால், அவற்றை மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள் ளாட்சி மன்றத்தில் வைத்து, விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி வைத்து, அதற்கு பின்னரே அமல்படுத்துவது வழக்கம்.
ஆனால், அந்த நடைமுறை பின்பற்றப்படாமல், மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையைத் /தொடர்ந்து, இவ்வளவு பெரிய வரிச் சுமையை விதிக்கும் முடிவினை தமிழக அரசு எடுத்துள்ளது.
விளக்கம்
அமைச்சர் கே.என்.நேரு:-
15-வது நிதிக் குழு ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை. 600 சதுர அடிக்குக்கு குறைவாக வைத்திருப்பவர்களுக்கு வரியில் எந்த மாற்றமும் இல்லை. 600 சதுர அடி முதல் 1,000 சதுர அடி வரையில் வைத்திருப்ப வர்களுக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டது.
1,000 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரை வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதமும், 2,400 சதுர அடிக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 100 சதவீதம் என்ற வகையிலும் உயர்த்தப்பட்டது.
இந்தச் சட்டம் எதற்கு என்றால், சென்னை போன்ற பகு திகளிலும், பிற பகுதிகளிலும், 18 ஆண்டுகள், 20 ஆண்டுகள் வரி உயர்த்தப்படாமல் அப்படியே இருந்தபோது, அவற்றை சமச்சீர் செய்து கொண்டு வருகிறபோது, ஒரு வரி நிர்ணயம் செய்யப்பட்டது. அது, ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் கூடுதலாக்கப்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது.