மறுஅறிமுகம்: ஆண்கள் ஆடை பிராண்ட் டபுள் புல் Double Bull
இன்றைய நவீன ஃபேஷன் உலகிற்கு
ஏற்ற வகையில் புதுமைமிக்க தோற்றத்துடன் அதன் மறு அறிமுகத்தை அறிவித்துள்ளது
இந்தியாவின் புகழ்பெற்ற ஆண்கள் ஆடை பிராண்டான டபுள் புல்
·
நிதியாண்டு 31-க்குள் 100 கோடி ரூபாய்
வருவாய் இலக்கை அடைய வலுவான வளர்ச்சித் திட்டங்களை தொடங்குகிறது
·
டபுள் புல், இந்த ஆண்டு
இறுதிக்குள் பிரத்யேக இ-காமர்ஸ் தளத்துடன் D2C சந்தையில்
நுழைய திட்டமிட்டுள்ளது.
சென்னை, 11 மார்ச், 2025: ஃபேஷன் துறையில் தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து
வைக்கும் டபுள் புல், 90களில்
துணிச்சலான, துடிப்பான பார்ட்டி உடைகளை அறிமுகப்படுத்திய இந்தியாவின்
புகழ்பெற்ற ஆண்கள் ஆடை பிராண்டாகும். இப்போது மிகப்பெரிய வளர்ச்சித்
திட்டங்களுடன் இந்திய ஆடைகளுக்கான ரீடெய்ல் பிரிவில்
தனது மறுநுழைவை அறிவித்துள்ளது. நிதியாண்டு
FY31க்குள் 100 கோடி ரூபாயை வருவாயாக அடைய வேண்டுமென்ற இலக்குடன், நாடு
முழுவதும் தனது வீச்செல்லையை மேலும் வலுப்படுத்தும் விதத்தில்,
இந்தியாவின் இளைஞர்களுக்கு காலத்தால் அழியாத ஃபேஷன் ஆடைகளை
வழங்கும் வலுவான வளர்ச்சித் திட்டத்தை இந்த பிராண்டு தொடங்கியிருக்கிறது.
அதன் முக்கியமான எதிர்காலத்
திட்டங்களின் ஒரு பகுதியாக இந்நிறுவனம், மல்டி பிராண்டு அவுட்லெட்களில் (MBOs) அதன் இருப்பை
அதிகரிப்பதன் மூலம் தனது ரீடெய்ல் செயல்பாட்டை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த
ஆண்டு இறுதிக்குள் 14 மாநிலங்களில் கிராமப்புற
மற்றும் நகர்ப்புற சந்தைகளில் 50-க்கும்
மேற்பட்ட பிரத்யேக பிராண்டு அவுட்லெட்களையும் (EBOs) இந்நிறுவனம்
நிறுவவிருக்கிறது. இந்த குறிக்கோளுக்கு இணக்கமாக, இந்த ஆண்டு
இறுதிக்குள் பிரத்யேக இ-காமர்ஸ் தளத்துடன், வளர்ந்து
வரும் D2C சந்தையில் நுழையவும் தனது திட்டங்களையும்
டபுள் புல் அறிவித்துள்ளது. தனது புதிய
தொலைநோக்கு குறிக்கோளை முன்னெடுக்க தனது நிறுவனத்தில் தலைமைத்துவ பொறுப்புகளுக்கான முக்கியமான
நியமனங்களையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டபுள் புல், 1974 ஆம் ஆண்டில்
துணிச்சலான, புதுமையான பார்ட்டி-வேர் கலெக்ஷனுடனும், நிகரற்ற
படைப்பாக்கத்திறனுடனும் இந்திய ரீடெய்ல் தொழில் பிரிவில் கால்பதித்தது. பல
தசாப்தங்களாக நாடெங்கிலும் அனைத்து இல்லங்களிலும் நன்கு அறிந்த ஒரு பிராண்டாக புகழ்பெற்றதுடன்
அதன் பார்ட்டி-வேர் ஷர்ட்கள் அப்போதைய
இளம் இந்தியாவின் கற்பனையை மிகப்பெரிய அளவில் கவர்ந்திருந்தது.
இன்று, ஒரு புதிய
பார்வையுடன், உயர்நிலை தரம் மற்றும்
மலிவு விலை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியை நிரப்ப இலக்குடன் களமிறங்கியிருக்கிறது.
பிரீமியம் ஃபேஷன் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பதே
இதன் நோக்கமாகும். அதன் 50-வது ஆண்டில், இப்போது இருக்கும்
டபுள் புல், 14 மாநிலங்களில்
EBO மற்றும் MBO முழுவதிலும் சமநிலை
இருப்பைக் கொண்டு தனது அடித்தளத்தை விரிவுபடுத்தவிருக்கிறது.
புதுமையான வடிவமைப்புகளிலும், வேகமான
ஃபேஷனிலும் கவனம் செலுத்துவது மற்றும் அதன் முத்திரை பதித்த
பார்ட்டி-வேர் ஷர்ட்களை மீண்டும்
அறிமுகப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் மீண்டும்
நாடு தழுவிய முதன்மை பிராண்டாக மாறும் இலக்கினை கொண்டிருக்கிறது.
இதுகுறித்து கருத்து
தெரிவித்த டபுள் புல் நிறுவனத்தின் தலைமை
நிர்வாக அதிகாரி திரு. ஜதின் மனோத்ரா, " இந்திய ரீடெய்ல் தொழில்துறையில்
டபுள் புல் நுழைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.
நாங்கள் எங்கள் பயணத்தில் ஒரு
குறிப்பிடத்தக்க மைல்கல்லை மட்டுமன்றி, அதனை வரையறை செய்த மீள்திறன் மற்றும்
அர்ப்பணிப்பையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். புதிய தலைமையின் வழிகாட்டலோடு
நாங்கள் எங்களது தொலைநோக்கு பார்வைக்கு புத்துயிர்
ஊட்டியிருக்கிறோம்; தெளிவான வளர்ச்சிக்கான உத்தியை
நிறுவியுள்ளோம். தற்போதைய 35 கோடி ரூபாய்
வருவாயிலிருந்து, FY2031க்குள் 100 கோடி ரூபாய் என்ற இலக்கை
அடைவது எங்களது இலக்காகும். எங்கள்
வளமான பாரம்பரியத்தை புதுமையான உத்திகளுடன் கலப்பதன் மூலம், பார்ட்டி ஆடைகள் மற்றும் அதையும் கடந்த
ஆடைகளுக்கான பிராண்டாக டபுள் புல் அதன் அந்தஸ்தை மீண்டும் வலுவாக நிலைநாட்டவிருக்கிறது. துணிச்சலான, புதுமையான
வடிவமைப்புகளுடன் பிரீமியம் தரத்தில் ஆடைகளை மிதமான விலையில்
வழங்க நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். இது வெறுமனே எமது
கடந்த கால சாதனையின் கொண்டாட்டம் மட்டுமல்ல. துடிப்பும், உற்சாகமுமிக்க வளமான எதிர்காலத்தின்
தொடக்கமாகவும் இது இருக்கிறது” என்று கூறினார்.
நவீன நுகர்வோரின் வளர்ந்து
வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய டபுள் புல் தனது தயாரிப்பு அணிவரிசையை விரிவுபடுத்துவதில்
கவனம் கொண்டிருக்கிறது. பார்ட்டி ஆடைகளுக்கும் அப்பால், பல்வேறு நிகழ்வுகளுக்கும்,
சூழல்களுக்கும் ஏற்றவாறு சௌகரியத்தையும், பேஷனையும் ஒருங்கிணைக்கிறவாறு
பல்வேறு உயர்தர ஆடைகளின் புதிய அணிவரிசையை இந்த பிராண்டு அறிமுகப்படுத்த
உள்ளது. கூடுதலாக, நீடித்துழைப்பு மற்றும் நிலைப்புத்தன்மையை
மேம்படுத்த புதுமையான துணி தொழில்நுட்பங்களையும் இந்த பிராண்டு
ஆராய்ந்து வருகிறது; அதே
நேரத்தில் அனைவரும் வாங்கி பயன்படுத்துமாறு மிதமான விலை நிர்ணயத்தையும் இந்த பிராண்டு
உறுதி செய்யும்.
டபுள் புல் குறித்து – 1974-ல்
நிறுவப்பட்ட டபுள் புல் மென்’ஸ் ஃபேஷன், 50 ஆண்டுகளாக
ஆண்களுக்கான பிரீமியம் ஆடைகளில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. நேர்த்தியுடன்
அன்றாட சௌகரியத்தை இணைக்கும் துணிச்சலான, சமகால செயல்களுக்கு
பெயர் பெற்ற இந்த பிராண்டு, நம்பிக்கை
மற்றும் நேர்த்தியின் ஒரு அடையாளமாக தன்னை நிலைநிறுத்திக்
கொண்டிருக்கிறது. மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஃபார்மல்
உடைகள் முதல் ஸ்டைலான கேஷுவல் உடைகள் வரை பல்வேறு ஆடைகளை
வழங்கும் டபுள் புல், தரமான கைவினைத்திறன் மற்றும் மிக நவீன வடிவமைப்புகளைக் கொண்டு தரஅளவுகோல்களை தனிச்சிறப்புடன்
நிறுவி வருகிறது. தனது பொன்விழாக் கொண்டாட்டத்தைக்
குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்மகனும் எந்தவொரு நிகழ்ச்சியானாலும்,
சூழலானாலும் தனது ஃபேஷனை அறிவிக்கும் வகையில் புத்தாக்கத்தோடும், நேர்த்தியோடும் உருவாக்கப்பட்ட
ஆடைகளை வழங்குவதில் இநத பிராண்டு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.