ஒவ்வொரு குழந்தையும் ஓர் அன்பான குடும்பத்திற்கு உரிமையானது
தத்தெடுத்தல் என்பது பராமரித்து கவனிப்பதற்கு உயிரியல் ரீதியாக பெற்றோர்/பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைக்கான மாற்றுக் குடும்பப் பராமரிப்பு முறையின் சிறந்த வடிவமாகும்.
யார் தத்தெடுக்க முடியும்?
குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் இந்தியாவில் வசிக்கும் வருங்கால தத்தெடுப்பு பெற்றோர்கள் (PAPS)
மற்றும் *NRI/OCI/வெளிநாட்டு PAPs ஆகியோர் CARINGS போர்ட்டலில் (carings.wcd.gov.in) 'Parents' விவரத்தின் கீழ் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
NRI -வெளிநாடு வாழ் இந்தியர்கள்
'OCI- இந்திய வெளிநாட்டு குடிமக்கள்
தத்தெடுப்பு வகைகள்
உள்நாட்டில் தத்தெடுப்பு (OAS குழந்தைகள்)
நாடுகளுக்கிடையே தத்தெடுப்பு (OAS குழந்தைகள்)
உள்நாட்டில் உறவினர் தத்தெடுப்பு
நாடுகளுக்கு இடையேயான உறவினர் தத்தெடுப்பு
மாற்றாந்தாய் மூலம் தத்தெடுப்பு
வளர்ப்பு தத்தெடுப்பு
மூத்த குழந்தைகளுக்கான குடும்பம் அடிப்படையிலான பராமரிப்பு
வளர்ப்பு பராமரிப்பு:
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் (CNCP) தற்காலிக, குடும்ப அடிப்படையிலான பராமரிப்பு.
குழந்தைகளின் தகுதி:
6-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வளர்ப்பு பராமரிப்புக்கு தகுதியுடையவர்கள்.
பெற்றோரின் தகுதி:
ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பும் இந்திய குடிமக்கள் தங்களை ஆன்லைனில் CARINGS போர்ட்டலில் (carings.wcd.gov.in) பதிவு செய்து கொள்ளலாம்.
வளர்ப்பு தத்தெடுப்பு:
வளர்ப்பு பராமரிப்பை தத்தெடுப்பாக மாற்றலாம். அதற்கு பின்வரும் நிபந்தனைகள் பொருந்தும்:
வளர்ப்புப் பராமரிப்பில் குழந்தை இரண்டு வயதை நிறைவு செய்திருத்தல்,
தத்தெடுப்பதற்கு குழந்தை சட்டப்பூர்வமாக தகுதி பெற்றிருத்தல்,
குழந்தை மற்றும் பெற்றோர் இருவரும் தத்தெடுப்பதற்கு ஒப்புதல் கொடுத்திருத்தல்.
சட்டவிரோத தத்தெடுப்புக்கு "NO' சொல்லுங்கள்
சிறார் நீதிச் சட்டம், 2015 இன் விதிகளைப் பின்பற்றாமல், அனாதை, கைவிடப்பட்ட அல்லது ஒப்படைக்கப்பட்ட குழந்தையைத் தத்தெடுப்பதில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ தண்டனைக்கு ஆளாக நேரிடும்
மேலும் தகவலுக்கு: CARA உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும் - 1800-11-1311 | பார்வையிடவும் - www.cara.wcd.gov.in