அங்கீகரிக்கப்படாத மனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு..!
நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மலையிடப்பகுதிகளில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழு எண்ணிக்கையிலான மனைகள் விற்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு வசதியாக, அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அர சாணை எண்.66, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள்.30.3.2020-ல் விதி திருத்தத்தை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப் பிக்க மேலும் வாய்ப்பை வழங்கி விண்ணப்பங்களுக்கான கால வரம்பை 30.11.2025 வரை நீட்டித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள்.
இதன்மூலம், மலையிடப்பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.