ரியல் எஸ்டேட்
மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராக திருமதி அபூர்வா நியமனம்..!
சென்னை, மார்ச்.17- 2025
ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் இருந்து வீடு மற்றும் இடம் வாங்கும் விவகாரத்தில் வாடிக்கையாளர்கள் ஏதேனும் பிரச்னையை சந்திக்க நேரிட்டால் அதனை அவர்கள் சட்டரீதியாக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் எதிர் கொள்ளலாம்.
வீடு,இடம் தொடர்பான பிரச்சனைக்காக வாடிக்கையாளர்கள் இந்த ஆணையத்தில்
வழக்குதொடர்ந்து தீர்வு காண்கிறார்கள். இந்த ஆணையத்தின் முடிவுகள்,
வழிகாட்டுதல்கள், உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறை செய்வதற்காக ரியல் எஸ்டேட்
ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு ரியல் எஸ்டேட்
மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பாயத்தின் நிர்வாக உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருமதி.
அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.