·
தங்க நகைக் கடன் வாங்கும் அளவு இரு மடங்காக ரூ.60,000
ஆக உயர்வு SFL
Q3FY25
– ல் தமிழ்நாட்டில் தங்க நகைக் கடன் செயல்திட்டத்தை வலுப்படுத்தியிருக்கும் ஸ்ரீராம்
ஃபைனான்ஸ்
·
தங்க நகைக் கடன் டிக்கெட் அளவு ஏறக்குறைய இரு மடங்காகியிருக்கிறது.
·
தங்க கடன் திட்டம் செயல்படுத்தப்படும் தற்போதைய
கிளைகளின் அளவை 300 – லிருந்து, அடுத்த சில மாதங்களில் 400 ஆக்க விரிவாக்க திட்டமிட்டிருக்கிறது.
சென்னை, 18.03.2024 – ஸ்ரீராம்
குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (SFL), தமிழ்நாட்டில் அதன்
தங்க நகைக்கடன் செயல்திட்டத்தில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியை கண்டு வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட
தங்க நகைக்கடன் சந்தையானது இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறத்தில் முறைப்படுத்தப்பட்ட தங்க நகைக்கடன்
சந்தையில் நாடு முழுவதிலும் காணப்படுகிற அதி விரைவான விரிவாக்கப் போக்கையொட்டி, தனிநபர்களும்
மற்றும் சிறு பிசினஸ் நிறுவனங்களும் நிதிக்கு விரைவான அணுகுவசதியை பெற விரும்புவதால்
இதற்கான தேவை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் (வடக்கு) தங்க நகைக்கடன் பிசினஸ்
குறித்து ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் – ன் துணை நிர்வாக இயக்குனர் திரு. அன்புச்செல்வம்
பேசுகையில்,
“Q3FY25 – ல் வடக்கு கடற்கரை மாவட்டங்கள் காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர்
மண்டலங்களில் உள்ள தமிழ்நாட்டின் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் – ன் கிளைகளில் தங்க
நகைக்கடன் அளவானது, கணிசமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. இனிவரும் காலாண்டுகளிலும், எமது சந்தைப் பங்கினை
வலுவாக நிலைநிறுத்துவதும் மற்றும் வளர்ச்சியடையுமாறு செய்வதும் எமது தற்போதைய செயல்
திட்டமாக இருக்கிறது. இன்னும் அதிக கிளைகளில்
தங்கக்கடன் செயல்பாட்டை அறிமுகம் செய்வதும் எமது திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கும்.”
என்று குறிப்பிட்டார்.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் – ன் தங்க நகைக்கடன்
பிரிவில் பிரதான வாடிக்கையாளர் அடித்தளத்தில் நடுத்தர வகுப்பு குடும்பங்கள் பெரும்பாலும்
இருக்கின்றன. ஊதியம் வாங்கும் தனிநபர்கள்,
சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் இதில் உள்ளடங்குவார்கள். தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்திருப்பதும், தங்க
நகைக்கடனின் சராசரி டிக்கெட் அளவு உயர்ந்திருப்பதற்கு வழி வகுத்திருக்கிறது. கடந்த ஆண்டு ₹0.33
லட்சம் என இருந்த இந்த டிக்கெட் அளவு நடப்பு கால அளவின்போது ₹0.60
லட்சமாக அதிகரித்திருக்கிறது. அதாவது, ஏறக்குறைய
இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. கூடுதலாக, சராசரி
கடன் காலஅளவானது, முன்பிருந்த 10 மாதங்களிலிருந்து, 7-8 மாதங்கள் என குறைந்திருக்கிறது;
கடன்தாரர்கள் மத்தியில் அதிகரித்த பணப்புழக்கத்தை இது சுட்டிக்காட்டுகிறது.
தனது வாடிக்கையாளர்களின் மாறுபட்ட நிதிசார் தேவைகளை
எதிர்கொள்வதற்கென வடிவமைக்கப்பட்ட தங்க நகைக்கடன் திட்டங்களின் விரிவான தொகுப்பை
SFL வழங்குகிறது. இவற்றுள், ஒற்றை அளவில் மொத்தமாக
பணம் செலுத்தும் திட்டங்கள், மாதாந்திர / காலாண்டு அளவில் வட்டி செலுத்தும் திட்டங்கள்
மற்றும் மாதாந்திர அளவில் இஎம்எஐ (சம மாத தவணை) செலுத்தும் திட்டங்கள் ஆகியவை உள்ளடங்கும். கடனுக்கான ஆவண செயல்முறைகளை இந்நிறுவனம் நெறிப்படுத்தியிருக்கிறது. விரைவாகவும் மற்றும் எளிதாகவும் கடன்தொகை வினியோகிக்கப்படுவதை
உறுதிசெய்ய கடன் பரிசீலனை மற்றும் வழங்கல் அமைப்பினை முற்றிலும் தானியக்க செயல்பாடாக
அது மாற்றியிருக்கிறது.
சௌகரியமான மற்றும் திறன்மிக்க நிதிசார் தீர்வுகளை
வழங்குவதன் மூலம், தனி நபர்களும், பிசினஸ் நிறுவனங்களும் திறனதிகாரம் பெறுமாறு உதவுவதில்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பொறுப்புறுதியுடன் இயங்கி வருகிறது. உரிய நேரத்தில் நிதியுதவி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு
அதிக நம்பிக்கைக்குரிய நிதிசார் பார்ட்னராக தனது அந்தஸ்தை இந்நிறுவனம் உறுதி செய்திருப்பதை
தங்க நகைக்கடன் பிரிவில் இதன் தொடர்ச்சியான வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் குறித்து
:
ஸ்ரீராம் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், நுகர்வோருக்கான நிதியுதவி, ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு, பங்குச்சந்தை தரகு மற்றும் விநியோகம் ஆகிய பிரிவுகளில் குறிப்பிடத்தக்க செயலிருப்பைக் கொண்டுள்ளது. ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், இந்தியாவின் மிகப்பெரிய ரீடெய்ல் சொத்து நிதியளிக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFC) ஒன்றாகும். இதன் நிர்வாகத்தின் கீழ் சொத்துக்களின் மதிப்பு (AUM) ரூ. 2.54 டிரில்லியன் ஆகும்.
1979 இல் நிறுவப்பட்ட ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சிறிய சாலைப் போக்குவரத்து ஆபரேட்டர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முழுமையான நிதி வழங்குநராகும். மேலும் முன்பு பயன்படுத்தப்பட்ட வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு நிதி வழங்கலில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது. இது செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்ட வணிக மாதிரியைக் கொண்டு மற்றும் பயணிகளுக்கான வணிக வாகனங்கள், குறு மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்கள் (MSMEகள்), டிராக்டர்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள், தங்கம், தனிநபர் கடன்கள் மற்றும் செயல்பாட்டு மூலதனக் கடன்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்களின் வழியாக நிதியை வழங்கி வருகிறது.
கடந்த 45 ஆண்டுகள் காலஅளவில் கடனைத் தோற்றுவித்தல், பயன்படுத்திய வணிக வாகனங்கள்
மற்றும் பிற சொத்துகளின் மதிப்பீடு மற்றும் வசூல் போன்ற துறைகளில் வலுவான செயல்திறன்களை இது உருவாக்கியுள்ளது.
3,196 கிளைகள்
மற்றும் 94.36 லட்சம்
வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் 79,405 பணியாளர்களின்
வலையமைப்புடன் இந்தியா முழுவதும் செயல்பாடுகளை கொண்ட மாபெரும் தொழில்
நிறுவனமாக ஸ்ரீராம் ஃபைனான்ஸ் இயங்கி வருகிறது.