வங்கிக் கணக்கு:
வாரிசு நியமனம் ஏன் அவசியம்?
பல வங்கி முதலீட்டுக் கணக்குகளுக்கு வாரிசு விவரம் இல்லை, அதனால்,கணக்குதாரர் காலமானால் அவர்களின் வாரிசுகள் முதலீட்டுத் தொகை யைப் பெறுவதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே, கணக்குதாரர்களிடம் வாரிசு விவரத்தைப் பெற வேண்டும்' என்று வங்கிகள், பதிவு பெற்ற வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிக்கை அனுப்பியுள்ளது.
சேமிப்புக் கணக்கு, வைப்புத்தொகை வைத்திருக் கிற, பாதுகாப்பு பெட்டக வசதி பெற்றிருக்கிற அனைத்து பழைய, புதிய வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவித்திருக்கிறது.
மேலும், வாரிசுதாரர் நியமனத்தின் நன்மை குறித்து கணக்குதாரர்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும், அதற்கான வழிகாட்டலை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
வாரிசு என்பவர் யார்?
ஒரு கணக்குதாரர் அல்லது முதலீட்டாளர், தான் இறக்க நேரிட்டால் தனது கணக்கில் உள்ள பணம் அல்லது முதலீடு யாருக்கு மாற்றப்பட வேண்டும் என்று விரும்பி அறிவிக்கிறாரோ, அவர்தான் வாரிசு.
ஒரு வங்கிக் கணக்கு தொடங்கும்போதே . அதற்கான படிவத்தில் வாரிசு விவரத்தை பூர்த்தி செய்யலாம் அல்லது பின்னர் வங்கிக்கு தெரி விக்கலாம்.
அவ்வாறு வாரிசாக அறிவிக்கப்படும் நபர் அல்லது நிறுவனம்தான் குறிப்பிட்ட கணக்குதாரரின் காலத்துக்குப் பிறகு அவரது பணத் தைப் பெற சட்டப்பூர்வ உரிமை பெற்றவர்
ஆவார். அதேநேரம், கணக்குதாரரின் விருப்பப்படி அவரது நிதியை பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது 'வாரிசின்' கடமை.
வாரிசு நியமனம் ஏன் அவசியம்?
முறையாக வாரிசு நியமனம் செய்யாதநிலையில் கணக் குதாரர் காலமானால், அவரது குடும்பத்தினர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள், கணக்குதாரரின் பணத்தைப் பெற ஒரு நீண்ட, சிரமமான நடைமுறையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மிகுந்த தாமதம் ஏற்படுகிறது.
கணக்குதாரரின் வாரிசு தாம்தான் என்பதை நிரூபிக்க அது சார்ந்த ஆவணங்கள், உயில் போன்றவற்றைச் சமர்ப் பிக்க வேண்டியிருக்கிறது.
இது, முறையாக அறிவிக்கப்படாத வாரிசுகளுக்கு தேவையற்ற கஷ்டத்தையும், மன உளைச்சலையும் ஏற் படுத்தும்.
அதேநேரம் ஒருவர் வாரிசு என்று ஏற்கனவே முறையாக தெரிவிக்கப்பட்டிருந்தால், வங்கியில் தனது அடையாள அட்டை, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு விவரத்தை தெரிவித்தால் போதும். மிக எளிதாக அவரது கணக்குக்கு பணம் மாற்றப்பட்டு விடும்.
இதனால்தான்,வாரிசு நியமனம் என்பது அவசியமாகிறது.
எத்தனை கணக்குதாரர்களின் வாரிசு நியமன விவரம் பெறப்பட்டிருக்கிறது என்று வங்கி வாடிக்கையாளர் சேவைக் குழு அல்லது வங்கி இயக்குனர்கள் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அது குறித்து காலாண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Src DT