பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட எல்ஐசி ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்..! LIC’s Smart Pension
எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர் திரு எம். நாகராஜு மத்திய நிதி சேவைகள் துறையின் உதவி செயலர் டாக்டர் எம்.பி டாங்கிராலா மற்றும் இணை செயலர் ஸ்ரீ பர்ஷாந்த் குமார் கோயல், எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு சித்தார்த்த மொஹந்தி மற்றும் எல்ஐசியின் பிற மேலாண்மை இயக்குநர்கள் முன்னிலையில்
18.02.2025 அன்று புது தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம்..!
எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் லாபத்தில் பங்கு பெறாத பங்குச் சந்தை சாராத தனிநபர்/குழு சேமிப்பு மற்றும் உடனடி பென்ஷன் திட்டம் ஆகும்.
இது ஒற்றை ஆயுள் மற்றும் இணை ஆயுள் வகை பென்ஷன் திட்டங்களுக்கு பல்வேறு விருப்ப தேர்வுகளை வழங்குகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
*ஒற்றை பிரீமிய, உடனடி பென்ஷன் திட்டம்
* தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு பென்ஷன் விருப்ப தேர்வுகள் உள்ளன.
*குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 65 முதல் 100 ஆகும். பென்ஷன் விருப்பத்தைப் பொறுத்து இது மாறுபடும்.
*ஒற்றை ஆயுள் பென்ஷன் மற்றும் கூட்டு ஆயுள் பென்ஷன் விருப்பங்களிலிருந்து தேர்வுசெய்யும் நெகிழ்வுத்தன்மை உள்ளது.
*ஏற்கனவே உள்ள பாலிசிதாரர் மற்றும் பாலிசியில் இறப்புரிமை பெற்ற நாமினி /பயனாளிகளுக்கு அதிக பென்ஷன் தொகை
*பாலிசி விதிமுறைகளின்படி பாலிசி தோகையை பகுதியாக / முழுவதுமாக திரும்பப் பெறுவதற்கு பல விருப்ப தேர்வுகள்
* குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் முதலீடு அதிக முதலீட்டு தொகைகளுக்கு ஊக்கத்தொகைகளுடன் கூடிய பென்ஷன்
*பென்ஷன் தொகை ஆண்டு, அரை ஆண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர தொகையாக விருப்பத்திற்கேற்ப பெறலாம்.
*NPS சந்தாதாரர் உடனடியாக இந்த திட்டத்தில் சேரும் வாய்ப்பு ஒரு சிறப்பு அம்சமாகும்.
*மாற்றுத்திறனாளி சார்ந்த நபரின் நலனுக்காக திட்டத்தை எடுக்கும் வசதி இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கிறது.
* பாலிசி துவங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு (அதாவது பாலிசி வழங்கப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்கள்) அல்லது மீள் ஆய்வு காலத்திற்கு பிறகு குறிப்பிட்ட பென்ஷன் விருப்பங்களின் கீழ் எந்த தேதி பின்னர் வருகிறதோ அந்த தேதிக்கு பிறகு பாலிசி கடன் பெறும் வசதி உண்டு.
வாழ் நாள்
பயன்கள்
*பாலிசிதாரர் தொடக்கத்தில் தேர்ந்தெடுத்த பென்ஷன் தொகை/தவணை விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும்.
*இறப்புரிமை தொகை(தனிநபர் / இணையர்).
*இறப்பு பலன் மொத்த தொகையாகவோ, பகுதி தொகைகளாகவோ, மேம்படுத்தப்பட்ட பென்ஷன் தொகையாகவோ, பென்ஷன் சேமிப்பு திரட்டு தொகையாகவோ பெறும் வசதி.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு
தொடர்பு கொள்ளவும்
திரு. சிவகாசி மணிகண்டன்
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் வெளியாகி உள்ள திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
தலைமை அலுவலகம்
சிவகாசி மணிகண்டன், MBA
(F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing
Director - AISMONEY
No.
21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet - 632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com
பொறுப்புத் துறப்பு: காப்பீடு என்பது கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். .