நடுத்தர வர்க்கத்தினருக்கான முக்கிய வருமான வரி சலுகைகள்
ரூ12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது
சம்பளம் பெறும் வகுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ 12.75 லட்சம் வரை வருமான வரி இல்லை (ரூ75,000 நிலையான கழிவு உட்பட)
வரி செலுத்துவோர் இனிமேல் தாங்கள் குடியிருக்கும் இரண்டு வீடுகளுக்கு சொத்து மதிப்பை எந்த நிபந்தனையும் இன்றி பூஜ்ஜியமாக காட்டலாம்.
வாடகை மீதான TDSக்கான ஆண்டு வரம்பு ரூ2.4லட்சம் ரூ6 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது
• மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான வரி கழிவு வரம்பு தற்போதைய ரூ50,000 லிருந்து ரூ1 லட்சமாக இரட்டிப்பாக அதிகரிக்கப்படுகிறது.
. வரி செலுத்துவோர் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த, புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் இருந்து 24 மாதங்களில் இருந்து 48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
• தேசிய சேமிப்புத் திட்டம் (என்எஸ்எஸ்) திரும்பப் பெறுதலுக்கு ஆகஸ்ட் 29, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வரி கிடையாது.