கரூர் வைஸ்யா வங்கி 6 புதிய கிளைகளை துவங்கியுள்ளது
சென்னை, பிப்ரவரி 27, 2025: கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்
பிரதேசத்தில் இன்று 6 புதிய கிளைகளை துவங்கியுள்ளது. இப்புதிய
கிளைகள் வைப்புத்தொகைகள், சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள், கடன் பெறும் வசதி போன்ற விரிவான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.
நடப்பு நிதியாண்டில் (2024-25) கேவிபி 35 புதிய கிளைகளைச் திறந்துள்ளது. மேலும் வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 877 ஆக உயர்ந்துள்ளது.
இன்று துவக்கப்பட்ட புதிய கிளைகள்:
872வது
கிளை: சேலம் (செர்ரி ரோடு) - திரு.பாலசுப்ரமணியன், துணை ஆணையர், சேலம்
மாநகராட்சி அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது
873வது கிளை: புரோட்டாட்டூர் (ஆந்திரப் பிரதேசம்) – திரு.மல்லிகார்ஜூனா, நகராட்சி ஆணையர், புரோட்டாட்டூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
874வது
கிளை: திருவள்ளூர் (மணவாள நகர்) – திரு.திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையர், திருவள்ளூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
875வது
கிளை: திருச்சி (மேலசிந்தாமணி) – டாக்டர்.குமாரவேல்,
டீன், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை,
திருச்சி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
876வது
கிளை: சென்னை (சிட்லப்பாக்கம்) – திருமதி. சசிகலா, துணை ஆணையர், தாம்பரம் நகராட்சி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
877வது
கிளை: திருப்பூர் (நெருப்பெரிச்சல்) – திரு.சிக்கண்ணன், அறங்காவலர், சிக்கண்ணா
செட்டியார் அறக்கட்டளை, திருப்பூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
இக்கிளைகள்
அனைத்து அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளையும், வாடிக்கையாளர்களின் வங்கி தொடர்பான தேவைகளையும்
பூர்த்தி செய்யும். மேலும் சில்லறை, நிறுவன மற்றும் நுகர்வோர் கடன்களை உள்ளடக்கிய முழுமையான வங்கி, நிதி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.
இணையதளம் மற்றும் மொபைல் மூலமாகவும், கேவிபி பல்வேறு சேவைகளை வழங்குகிறது. KVB DLite என்ற மொபைல் பேங்கிங் செயலியின் மூலம் 150க்கும் அதிகமான நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கேவிபி வழங்குகிறது. இந்த செயலி வாடிக்கையாளர்களுக்கு மேலும் உதவும் வகையில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கி பற்றி:
கரூர் வைஸ்யா
வங்கிக்கு நாடு முழுவதும் 877
கிளைகள் மற்றும் 2200+ ஏடிஎம்கள் மற்றும்
பணத்தை மறுசுழற்சி செய்யும் வகையில் டச் பாயின்ட்கள் உள்ளன. கேவிபி அதன் வலுவான
நிதி ஆதாரத்துடன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 31.12.2024 அன்று வங்கியின் மொத்த வணிகம் ரூ. 1,81,993 கோடி ஆகவும், வைப்புத் தொகை ரூ. 99,155 கோடி ஆகவும் மற்றும் வழங்கப்பட்ட கடன் தொகை ரூ. 82,838 கோடி ஆகவும் உள்ளது. கேவிபி, இதுவரை இல்லாத அதிகபட்ச நிகர லாபமான ரூ. 1,605 கோடியை கடந்த நிதியாண்டில் பெற்றுள்ளது மற்றும் வங்கியின் நிகர NPA
0.20% ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல்
ஒன்பது மாதங்களுக்கான வங்கியின் லாபம் ரூ.1,428 கோடி ஆகும்.
ஊடக தொடர்பிற்கு:
கிறிஸ்டோபர் சார்லஸ் | பிரெடிக்ட் பிஆர் | 98424 75706 | charles@predictpr.com
*****