ரூ. 250 முதலீடு செய்யும் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்: ஜன் நிவேஷ் எஸ்ஐபி திட்டம் Jan Nivesh SIP Scheme
- யாசீன் சாஹர், நிதி நிபுணர்
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் இணைந்து எளிய முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய உதவும் வசதியை ஜன் நிவேஷ் எஸ்ஐபி திட்டம் (Jan Nivesh SIP Scheme) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியை SBI Yono ஆஃப் மூலம் டிஜிட்டல் முறையில் சுலபமாக பெற முடியும். கிராமத்தினர்
கூட சுலபமாக முதலீட்டை மேற்கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச
முதலீடு ரூ. 250 என எஸ்ஐபி -ஐ தொடங்கலாம். தினம், வாரம் மற்றும் மாதம் என குறிப்பிட்ட
இடைவெளிகளில் எஸ்ஐபி திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
இந்தத் திட்டம்
மற்றும் வசதி மூலம் பல லட்சம் பேர் புதிதாகமியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை தொடங்க வாய்ப்புள்ளது.
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
Mr. Yaseen Sahar has been reached at rahas84@gmail.com and 98433 13512