கிரெடாய் சென்னை பேர்ப்ரோ 2025’ல் ரூ.363 கோடி மதிப்பிலான சொத்துகள் விற்பனை செய்து வரலாற்று சாதனை
சென்னை, பிப். 20- 2025:சென்னையில் நடைபெற்ற பேர்ப்ரோ 2025 கண்காட்சியில் அதிக எண்ணிக்கையிலான வீட்டு மனைகள் மற்றும் குடியிருப்புகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கிரெடாய் சென்னை சார்பில் 2025 பிப்ரவரி 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் 17வது பேர்ப்பரோ 2025 கண்காட்சி நடைபெற்றது.
இதற்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்ததோடு, வீட்டு மனை மற்றும்
குடியிருப்புகளுக்கான முன்பதிவு முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிவாகி சாதனை
படைத்துள்ளது. வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் கிடைத்த அமோக
வரவேற்பு, இதை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட்
கண்காட்சியாக மாற்றியுள்ளது.
3 நாள் நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு மொத்தம் 44,712 பார்வையாளர்கள் வந்ததோடு, ரூ.363 கோடி மதிப்பிலான 385 சொத்துகளை வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். இங்கு வந்த பலர் தாங்கள் வாங்கும் சொத்திற்கான முதலீட்டை இறுதி செய்வதற்கு முன்பாக வந்த காரணத்தால், உடனடியாக அவர்களால் முன் பதிவு செய்ய முடியவில்லை. அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு வாங்க இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிக அளவிலான விற்பனை என்பது வாடிக்கையாளர்கள்
இடையே வீட்டு வசதிக்கான தேவை அதிகரித்துள்ளதை காட்டுவதாக கிரெடாய்
தெரிவித்துள்ளது.
கண்காட்சியில்
80க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் தங்களின் 500க்கும் மேற்பட்ட
திட்டங்களைக் காட்சிப்படுத்தினர், இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகள், வில்லாக்கள் மற்றும் வணிக இடங்கள்
உள்ளிட்ட பல்வேறு வகையான சொத்துக்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் 5 முன்னணி
வங்கிகள் பங்கேற்று இங்கு சொத்துகளை முன் பதிவு செய்தவர்களுக்கு உடனடி கடன்
வசதியையும் வழங்கின. இதில் அதிக அளவிலான கடன் வசதிகளை அளித்து எஸ்பிஐ வங்கி
முதலிடத்தில் உள்ளது.
இது குறித்து
கிரெடாய் சென்னை தலைவர் முகமது அலி கூறுகையில், பேர்ப்ரோ 2025-க்கு கிடைத்த அற்புதமான வரவேற்பை
பார்க்கையில் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கண்காட்சி ரியல் எஸ்டேட்
துறையில் புதிய சாதனை படைத்துள்ளது. இது கிரெடாய் சென்னை மீது மக்கள் வைத்திருக்கும்
நம்பிக்கையை காட்டும் வகையில் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க சாதனையுடன்,
கிரெடாய் சென்னை, வெளிப்படையான மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் சுற்றுச்சூழல் அமைப்பை
வளர்ப்பதில் தனது பங்கை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதோடு, வீடு வாங்குபவர்கள் தங்கள் கனவு வீடுகளை நம்பிக்கையுடன் வாங்க உறுதுணையாக
இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.