மாபெரும் கிரெடாய் ‘பேர்ப்ரோ 2025’ ரியல் எஸ்டேட் கண்காட்சி: முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்'
கிரெடாய் சென்னையின் தொலைநோக்கு திட்டமான ‘சூப்பர் சென்னை’ திட்டத்தை அறிமுகம் செய்தார்
சென்னை, 14 பிப் 2025: கிரெடாய்
சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் 17வது ‘பேர்ப்ரோ 2025’ மாபெரும் ரியல்
எஸ்டேட் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை
அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் தமிழக அரசின் பிற முக்கிய பிரதிநிதிகள்
உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி
துவக்க விழாவின் போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னையை வருங்காலத்திற்கு தயாராக
உலகளாவிய நகரமாக, இந்தியாவில் முதலீட்டிற்கு சிறந்த நகரமாக மாற்றும்
கிரெடாய் சென்னையின் தொலைநோக்கு திட்டமான ‘சூப்பர் சென்னை’ திட்டத்தையும் துவக்கி வைத்தார். ‘சூப்பர் சென்னை’ என்பது வெறும் ஒரு முன்முயற்சி மட்டுமல்ல, புதுமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சென்னையின் பாரம்பரியம் மற்றும்
வளமையை உலக அளவில் கொண்டும் செல்வதோடு, தொழில்நுட்பம், வணிகம், கலாச்சாரம் மற்றும் நவீன வாழ்க்கை
முறைக்கான மையமாகவும் மாற்றும் திட்டம் ஆகும். சென்னை நகரின் சிறப்பை வெளிப்படுத்துவதன்
மூலம், உலகளாவிய கவனத்தையும் முதலீட்டையும் ஈர்க்கும் ஒரு துடிப்பான திட்டம் ஆகும்.
இந்த ஆண்டு கண்காட்சியானது பிரமாண்டமாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கும் என்று கிரெடாய் உறுதி அளித்துள்ளது. ஏனெனில், வீடு வாங்குபவர்களுக்கு 32.5 மில்லியன் சதுர அடி குடியிருப்புகள், 0.25 மில்லியன் சதுர அடி வணிக இடம் மற்றும் 325 ஏக்கர் வீட்டு மனைகள் என 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளது.
பேர்ப்ரோ கண்காட்சியில், இதன் முதன்மை வங்கியாளரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வீடு வாங்குபவர்களுக்கு பிரத்யேக கடன் சலுகைகளை வழங்க உள்ளது. மேலும் இதனுடன், எச்டிஎப்சி பேங்க், சென்ட்ரல் பேங்க், கனரா பேங்க் மற்றும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட ஐந்து முக்கிய வங்கிகள்
கண்காட்சியில் பங்கேற்கின்றன. வீடு வாங்க ஆர்வமுடன் இந்த கண்காட்சிக்கு
வருபவர்களுக்கு இந்த வங்கிகள் வீட்டு கடன் தொடர்பாக பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளன.
உள்கட்டமைப்பு
மேம்பாடு, மெட்ரோ விரிவாக்கம் மற்றும் சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தையில்
முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக, பிரீமியம் அடுக்குமாடி
குடியிருப்புகள், வில்லாக்கள், மனைகள் மற்றும் வணிக இடங்களுக்கான தேவை
அதிகரித்து வருகிறது. ரூ.15 லட்சம் முதல் ரூ15 கோடி வரையிலான சொத்துக்கள், இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
இந்த திட்டங்கள் அனைத்தும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.
நிகழ்ச்சியில் தேசிய கிரெடாய் அமைப்பின் தென் மண்டல துணைத் தலைவர் ஸ்ரீதரன்
பேசுகையில், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மெட்ரோ விரிவாக்கம் ஆகியவற்றின்
காரணமாக சென்னை நகரின் சொத்து மதிப்பு அதிகரித்து வருவதால், சென்னை முதலீட்டுக்கு சிறந்த இடமாக வளர்ந்து வருகிறது. இந்த
கண்காட்சியானது வீடு வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சிறந்த வாய்ப்பை
வழங்குகிறது என்று தெரிவித்தார்.
கிரெடாய் சென்னை தலைவர் முகமது அலி பேசுகையில், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும்
அதிகரித்து வரும் முதலீட்டாளர் நம்பிக்கையால் சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை நல்ல
வளர்ச்சி கண்டு வருகிறுது. வீடு வாங்குபவர்களுக்கு ‘பேர்ப்ரோ 2025’ கண்காட்சி, அரசின் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை
ஆராய்ந்து, அவர்களின் கனவு வீடுகள் குறித்து சரியான
முடிவுகளை எடுப்பதற்கான சிறந்த இடமாகும்.
‘பேர்ப்ரோ 2025’ கண்காட்சி ஆலோசகர் எஸ்.
சிவகுருநாதன் பேசுகையில், கடந்த 16 ஆண்டுகளாக சென்னையின்
மிகவும் நம்பகமான சொத்து கண்காட்சியாக பேர்ப்ரோ இருந்து வருகிறது, இது வீடு வாங்குபவர்களுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த மதிப்பை வழங்கி
வருகிறது. இந்த ஆண்டு அதிக அளவிலான மக்கள் இந்த கண்காட்சிக்கு வருவார்கள் என்று
நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்
கிருதிவாஸ் பேசுகையில், “சென்னையின் நகர்ப்புற பகுதிகள் வேகமாக
வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்தக் கண்காட்சியானது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குபவர்களுக்கு இடையே
பாலமாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் இந்த
கண்காட்சி மிகுந்த பலன் அளிக்கும் என்று தெரிவித்தார்.
For Further Information please contact: Udaya
Kumar @ 9940637802 / Raja Subramani@9940291904