வரி செலுத்துவோர் கவனத்திற்கு
வருமான வரித்துறை கீழ்கண்ட திட்டத்தின் முக்கிய தேதிகளை நீட்டித்துள்ளது
விவாட் சே விஸ்வாஸ் திட்டம் 2024
31 ஜனவரி 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
முக்கிய தேதிகள்
மேல்முறையீட்டுத் தீர்வுக்காக குறைந்த தொகையைச் செலுத்த 31.01.2025 அன்று அல்லது அதற்கு முன் திட்டத்தின் கீழ் உங்கள் அறிக்கையை தாக்கல் செய்யுங்கள். 01.02.2025 அன்று அல்லது அதற்குப் பிறகு அறிக்கையை தாக்கல் செய்யும் போது, தீர்வுத் தொகை அதிகமாகும்.
சர்ச்சைக்குரிய வரி
சர்ச்சைக்குரிய கட்டணம்
சர்ச்சைக்குரிய அபராதம்
சர்ச்சைக்குரிய வட்டி
சர்ச்சைக்குரிய TDS அல்லது TCS
TRUST
திட்டத்தில் அடங்கும் சர்ச்சைகள்
பின்வருபவை தொடர்பாக அனைத்து சர்ச்சைகளும் (சில விலக்குகளுக்கு உட்பட்டு):
அபராதம்
வட்டி
கட்டணம்
TDS அல்லது TCS
தகுதி
• 22.07.2024 அன்று அல்லது அதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு/ரிட் மனு மற்றும் 22.07.2024 அன்றுள்ளபடி நிலுவையில் உள்ள இத்தகைய மேல்முறையீடு/ரிட் மனு.
• தகராறு தீர்வு குழு (DRP) முன்பு ஆட்சேபனைகளை தாக்கல் செய்த மற்றும் 22.07.2024 அன்று அல்லது அதற்கு முன்பு DRP எந்த உத்தரவுகளையும் வழங்காத நிலையில் உள்ள வரி செலுத்துவோர்
• DRP ஆனது அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தாலும், மதிப்பீட்டு அதிகாரி 22.07.2024 அன்று அல்லது அதற்கு முன்பு மதிப்பீட்டை முடித்திருக்காத நிலையில் உள்ள வரி செலுத்துவோர்.
• சட்டத்தின் பிரிவு 264 இன் கீழ் திருத்தத்திற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ள மற்றும் அத்தகைய விண்ணப்பம் 22.07.2024 அன்றுள்ளபடி நிலுவையில் உள்ள வரி செலுத்துவோர்.
திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.incometax.gov.in-ஐ பார்வையிட்டு துறையால் வழங்கப்படும் FAQs-ஐ பார்க்கவும்.
வருமான வரித்துறை மத்திய நேரடி வரிகள் வாரியம்
@Income Taxindia