சுபமுகூர்த்த தினத்தையொட்டி
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
2025, ஜன.16– பதிவுத்துறை ஏற்பாடு பொங்கல் சன்னை, ஜனயை யொட்டி அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை ஆகும்.
தை மாதத்தின் முதல் வேலை நாளான 2025 ஜனவரி 20-ந்தேதி அன்று சுபமுகூர்த்த தினம் ஆகும்.
அன்றைய தினம் அதிக அளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும். இதனால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று, 20-ந்தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்கள் வழங் கப்படுகிறது.
அதேபோல் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும். 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடு தலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற் கண்ட தகவல்களை பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.