பணம், சேமிப்பு என்பது வகுப்பதில் இல்லை, பெருக்குவதில் இருக்கிறது..! நிதி ஆலோசகர் எஸ். கார்த்திகேயன்
பணம் எனும் மாய கருவியை பயன்படுத்தும் உத்திகளை, பயன்படுத்தும் முறையை, பண சார் உளவியலை பகிர்ந்து கொள்கிறார்…
நிதி ஆலோசகர் எஸ். கார்த்திகேயன்
சில வருடங்கள் முன்பு 'பிளாங்க் செக்' என்ற புத்தகத்தின் வழியே நம் வாசகர்களுக்கு அறிமுகமானவர் நிதி ஆலோசகர் திரு. எஸ். கார்த்திகேயன். நிதி ஆலோசனை துறையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து, அந்தத் துறையின் உச்சங்களை அநாயசமாக தொட்டு கொண்டிருக்கும் சாதனையாளர். சென்னையில் தொடங்கிய தனது சேவைகளை இன்று சர்வதேச அளவில் விரிவுப்படுத்தியிருக்கிறார். முன்னனி பத்திரிக்கைகளில், குறிப்பாக நாணயம் விகடன் இதழில் நிதி ஆலோசனை தொடர்பாக எழுதி வருபவர், சமூக ஊடகங்களில் பிரபலத்துவம் பெற்றவர், 'ப்ளாங்க் செக்'-கை தொடர்ந்து இன்னும் பல புத்தகங்களின் ஆசிரியர் என பன்முகத்தோடு மிளிர்ந்து வரும் எஸ். கார்த்திகேயன் அவர்களுடனான நேர்காணல்….
சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி..உங்கள் நிறுவனமும் நீங்களும் கண்டிருக்கும் புதிய சாதனைகள் குறித்து சொல்லுங்கள்..
சென்னையில் தொடங்கி இன்று துபாய் வரை எங்கள் சேவை நீண்டு உள்ளது. துபாயில் எங்கள் புதிய அலுவலகம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. 'டைம்ஸ் ஆப் இந்தியா' மற்றும் 'எக்கனாமிக் டைம்ஸ்' உள்ளிட்ட முன்னனி பத்திரிக்கைகளிடமிருந்து 'பிசினஸ் விருதுகள் கிடைத்துள்ளன. என் கட்டுரைகள் முன்னனி பத்திரிக்கையாக நாணயம் விகடன் இதழில் 80-ஆவது வாரமாக தொடர்ந்து பிரசூரிக்கப்பட்டு வருகிறது.
'பிளாங்க் செக்கை' தொடர்ந்து 'பணப்பழக்கம்' என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. 'செக்கன்ட் இன்னிங்க்ஸ்' என்ற அடுத்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது வாழ்வின் இரண்டாம் பகுதி பற்றியது. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வின் பிற்பகுதியை எப்படி வாழ வேண்டும்? அதற்கு செய்ய வேண்டிய ஆயத்தங்கள் என்னென்ன என்பவை குறித்து எழுதி வருகிறேன்.
உழைப்பு என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. ஆனாலும் எளிமையானவர், நடுத்தரம் மற்றும் பணக்காரர்கள் என்ற வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இந்த வேறுபாட்டிற்கு பணத்தின் அளவும், பணத்தின் இருப்பும் மட்டுமே காரணமா….?
நாம் ஏற்கனவே சேர்த்து வைத்த பணத்தை வைத்து இந்த வேறுபாடு ஏற்படுவதில்லை. இன்று அனைத்து தரப்பு மக்களும் உழைப்பையும் திறனையும் சரிசமமாக வெளிப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இந்த வேறுபாடு என்பது எவ்வளவு சீக்கிரம் நமக்கான தளம் கிடைக்கிறது என்பதில் தான் உள்ளது. உதாரணமாக சிவகார்த்திகேயன் என்ற திரைக்கலைஞர் இருக்கிறார் அவருக்கு ஒரு முதல் பட வாய்ப்பு என்பது பல நீண்ட கால போராட்டங்களுக்கு பிறகு, பல முறை அவரது திறமையை அவர் வெளிப்படுத்திய பின் அவருக்கு கிடைக்கிறது. மாறாக மற்ற சில திரைக் கலைஞர்கள் ஒரு சினிமா நடிகரின் வாரிசு என்ற காரணத்தால் அவர்களின் வாய்ப்பு மிக எளிதாக கிடைத்து விடுகிறது. ஆனால் அந்த வாய்ப்பு வந்த பிறகு இருவரும் சரிசமமான உழைப்பை, திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். கிடைத்த வெற்றியை தக்க வைக்க முடியும். எனவே வேறுபாடு என்பது எத்தனை விரைவில் நமக்கு சூழலும் வாய்ப்பும் கிடைக்கிறது என்பதில் தான் இருக்கிறதே தவிர வேறெதிலும் இல்லை. மேலும் பணம் சார்ந்த வேறுபாடு என்பது என்பது ஒருவர் வளர்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கையில், அனுபவத்தில், பணத்தை கையாளும் பழக்கத்தில் இருக்கிறது.
இன்று நாம் பணக்காரர் என்று அழைப்பவர்கள் பலரிடமும் பணத்தை கையாளூம் லாவகம் இருக்கிறது. அவர்களுக்கு பணத்தை கையாள தெரிந்திருக்கிறது. அந்த பணம் சார்ந்து ஏற்படக் கூடிய லாபத்தையும் நஷ்டத்தையும் நேர்மறையாக எதிர்கொள்ளும் தன்மையிருக்கிறது. நஷ்டம் வந்தால் அதிலிருந்து மீளூம் மனோதிடம் இருக்கிறது. பணத்தை பெருக்கும் ஊக்கம் இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை ஏற்றி விட இந்த சமூகமும் தயாராக இருக்கிறது. இந்த கண்ணோட்டமும், மனவோட்டமும் தான் வேறுபாடே தவிர, பணத்தின் அளவை வைத்து யாரொருவரையும் பணக்காரர், எளிமையானவர் என பிரித்து விட முடியாது.
உதாரணமாக, பணம் படைத்தவர் இந்த சமூகத்தின் தேவையற்ற விமர்சனங்கள் பற்றி கவலைப்படுவதில்லை. தன்னுடைய பாதையில் முழு கவனத்துடன் வண்டியை செலுத்துகிறார், இடையில் வரும் இடையூறுகள் அவருக்கு ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. இந்த அணுகுமுறையால் அவர் முன்னேறி செல்கிறார். எனவே இது போன்ற பண்புகள் தான் பணக்காரர், நடுத்தரத்தினர் என்கிற வேறுபாட்டை உருவாக்குகிறதே தவிர நிச்சயமாக பணம் இல்லை. எனவே யாராக இருந்தாலும் சரி அவர்களின் கடுமையான உழைப்போடு இந்த பண்புகளை தக்க வைத்து கொண்டால் பணம் மீதான நல்முறையிலான ஆர்வம் பிறாக்கும். அந்த பணத்தை எப்படி சேர்ப்பது என்கிற சிந்தனை பிறக்கும். என பணத்தை கையாளும் கலாச்சாரம் தெரிந்திருப்பது அவசியம்.
இன்று நாம் பணக்காரார் என்று சொல்கிற பலரின் பணியாளர்களும் கூட செல்வம் படைத்தவராக இருக்கிறார்கள். காரணம் அந்த பணக்காரர் ஒரு தலைவராகவும் இருக்கிறார். அவருடைய தலைமைபண்பு அவரையும் அவரை சார்ந்தவர்களையும் சேர்த்தே முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறாது. எனவே சரியான பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பணக்காரர் என்று சொல்லப்படுபவர்களும் தவறிழைக்கிறார்கள். ஆனால் அந்த தப்பை, அந்த தோல்வியை சரி செய்து கொள்ளும் உத்தி அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இந்த தெளிவை தான் வெற்றியாளர்களின் தன்மை மற்றும் பண்பு என்கிறேன். எனவே பணத்தை கையாளும் பண்புகளை வளர்த்து கொள்வது அவசியம். அந்த பண்புகள் மட்டும் வேறுபடுகின்றதே தவிர பணத்தின் இருப்போ அல்லது அளவோ அல்ல. அளவுகள் மாறுபட்டாலும் அவரவர் சூழலுக்கு ஏற்ப அவை நிறைவானதாகவே இருக்கும்.
தொடர்ந்து பணம் என்கிற வார்த்தையை, அதன் கருத்துருவாக்கத்தை தொடர்ந்து பேசி வரும் நிதி ஆலோசகரான உங்களுக்கு, பணம் என்பது என்ன? பணம் என்பது ஒரு தனிமனித வாழ்வில் என்னவாக இருக்கிறாது என்று நினைக்கிறீர்கள்?
பணம் என்பது ஒரு மூலதனம். பணத்தை வைத்து தான் பணத்தை பெருக்க முடியும். அதுமட்டுமல்ல பணமென்பது ஒரு கருவி. உங்கள் திறமைகளை வெளிகொண்டு வரும் கருவி. உங்களுக்குள் நீங்கள் கண்டடைந்த தனித்திறமைகளை செயல்படுத்துவதற்கான கருவி. நீங்கள் செயல்படுத்திய திறமையை இந்த உலகமெங்கும் வெளிச்சமிட்டு காட்டுவதற்கான ஒரு கருவி. நீங்கள் சார்ந்த துறையில் உங்களை உச்சத்திற்கு அழைத்து செல்வதற்கான ஒரு கருவி. அந்த கருவியை பயன்படுத்தவும், கையாளவும் தெரிந்தவர்கள் வெல்கிறார்கள்.
விரிவான கட்டுரையை நமது நம்பிக்கை 2025 ஜனவரி இதழில் முழுமையாக படிக்கலாம். புத்தகம் தேவைப்படுவோர்
நமது நம்பிக்கை திரு மரபின் மைந்தன் முத்தையா
2/3, இராமகிருஷ்ணா நகர்,
சித்தாபுதூர், கோவை- 641 044.
போன்: +91 422 4379502
அலைபேசி: +91 99655 77020, +91 98651 77030,
மின்னஞ்சல்: marabinmaindan@gmail.com
https://www.marabinmaindan.com/ தொடர்பு கொள்ளவும்.
நிதி ஆலோசகர். எஸ். கார்த்திகேயன், https://winworthwealth.com/
ஆயுள் காப்பீடு & மருத்துவக் காப்பீடு எடுக்கவும் திரு. எஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.
திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan) வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம் அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்.
நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com
யூடிப்
https://www.youtube.com/channel/UCGNt...
Facebook : https://www.facebook.com/KarthikeyanS...
LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...
Twitter : https://twitter.com/Winworth_Wealth
தலைமை அலுவலம்:
10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042
இ மெயில்: winworth2020@gmail.com
தொலைபேசி : 98409 36032, அலுவலகம்; 044- 4218 0009