2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த 9 மாத கால அளவில் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமாக (PAT) ரூ.2007 கோடியை பதிவு செய்திருக்கும் எல் & டி ஃபைனான்ஸ் லிமிடெட்
முந்தைய ஆண்டின் இதே காலஅளவை விட 14% வளர்ச்சி இது மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த PAT ரூ.626 கோடியாகும்.
ரூ.92.224 கோடி என்ற ரீடெய்ல் பதிவேட்டுடன் வலுவான ரீடெய்ல் ஃபிரான்சைஸ்; YoY
அடிப்படையில் 23% வளர்ச்சி பதிவு
2024 டிசம்பர் 31 – ல் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரீடெய்ல் நிதி வினியோகம், முந்தைய ஆண்டை விட 5% உயர்ந்து, ரூ.15,210 கோடியாக இருக்கிறது.
இக்காலாண்டின் இறுதியில் இதன் பிளானெட் (PLANET) செயலியின் பதிவிறக்கம் 1.5 கோடிக்கும் அதிகமாகும்.
2024 டிசம்பர் 31-ல் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு துறையில் இந்தியாவின் முதன்மை செயற்கை நுண்ணறிவு நிகழ்வான RAISE – ஐ எல் & டி ஃபைனான்ஸ் நடத்தியது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மெய்நிகர் வீட்டுக்கடன் ஆலோசகரான நாலெட்ஜபிள் ஏஐ (KAI) என்பதன் அறிமுகம் மற்றும் நுகர்வோர் கடன் வழங்கலை மேம்படுத்த அமேசான் பே உடன் கூட்டாண்மை மற்றும் வேளாண் சாதன நிதியுதவிக்காக ப்ராஜெக்ட் சைக்ளோப்ஸ் – ன் விரிவாக்கம் ஆகியவையும் இதில் இடம்பெற்றன.
ஜனவரி 21, 2025, மும்பை / சென்னை: இந்தியாவில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையில் முதன்மை வகிக்கும் எல் & டி ஃபைனான்ஸ் லிமிடெட் (LTF), 2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த ஒன்பது மாதங்கள் கால அளவில், முந்தைய ஆண்டின் இதே காலஅளவை விட 14% வளர்ச்சியுடன், ஒருங்கிணைக்கப்பட்ட வரிக்குப் பிந்தைய லாபமாக, ரூ.2007 கோடியை பதிவு செய்திருக்கிறது. 2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த மூன்றாவது காலாண்டுக்கான PAT ரூ.626 கோடியாக பதிவாகியிருக்கிறது.
2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த மூன்றாவது காலாண்டின்போது, ரூ.15,210 கோடியை ரீடெய்ல் துறைக்கான நிதியாக, இந்நிறுவனம் வினியோகித்திருக்கிறது. YoY அடிப்படையில் இது 5% உயர்வாகும். இக்காலாண்டின்போது, ரீடெய்ல் பதிவேட்டின் அளவானது, YoY அடிப்படையில் 23% வளர்ச்சியுடன் ரூ.92,224 கோடியை எட்டியிருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு சக்தி வாய்ந்த டிஜிட்டல் சேனலாக உருவெடுத்திருக்கும் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் PLANET செயலி (ஆப்), 2024 டிசம்பர் 31 அன்று 1.5 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கண்டிருக்கிறது. இதில் கிராமப்புற பகுதிகளிலிருந்து 13.8 இலட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்கள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தேதி வரை ரூ.3100 கோடிக்கும் அதிகமான கடன் வசூலை (கலெக்ஷனை) இந்த சேனல் செய்திருக்கிறது. ரூ.10,500 கோடிக்கும் அதிகமான (வலைதளம் உட்பட), சோர்ஸிங்கையும் இந்த சேனல் செய்திருக்கிறது.
LTF - ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி திரு, சுதிப்தா ராய் இந்த நிதிசார் முடிவுகள் குறித்து கூறியதாவது: "நுண் நிதி பிரிவிற்குள் குறிப்பிட்ட சில பெரிய சவால்கள் இருந்த போதிலும், இச்சூழ்நிலையை நாங்கள் திறம்பட சமாளித்திருக்கிறோம். அடுத்த சில காலாண்டுகள் காலஅளவின்போது இச்சூழல் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
உலகத்தரம் வாய்ந்த கிரெடிட் அன்டர்ரைட்டிங்கை உருவாக்குவதற்கும் மற்றும் உட்கட்டமைப்பை கண்காணிப்பதற்கும் எமது முதலீடுகளும், முயற்சிகளும் தளர்வின்றி தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, எமது அடுத்த தலைமுறைக்கான முப்பரிமாண கிரெடிட் அன்டர்ரைட்டிங் இன்ஜின் ப்ராஜெக்ட் சைக்ளோப்ஸ், இருசக்கர வாகன நிதியில் 100% டீலர்ஷிப்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது; வேளாண் சாதன நிதி பிசினஸ் பிரிவிற்கும் புராஜெக்ட் சைக்ளோப்ஸ் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
கடன் வழங்கல் தளத்திற்குள் புத்தாக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சியாக, அமேசான் பே தளத்தின் வழியாக மிக நவீன கடன் தீர்வுகளை உருவாக்கவும், வழங்கவும் ஒரு முக்கிய கூட்டாண்மையை அமேசான் பே உடன் LTF தொடங்கியிருக்கிறது. எமது நுகர்வோர்களுக்கு சிரமமற்ற டிஜிட்டல் கடன் வழங்கல் அனுபவத்தை வழங்குவதற்காக தனிநபர் (பெர்சனல்) கடன்களுக்கும், போன் பே கூட்டாண்மையை நாங்கள் விரிவுபடுத்தியிருக்கிறோம்.
கூடுதலாக, வீட்டுக்கடன் அனுபவத்தை புரட்சிகரமாக மாற்றுவதற்காக செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சாட்பாட் சாதனமான நானலட்ஜபிள் ஏஐ (KAI) என்பதையும் நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம். செயற்கை நுண்ணறிவின் நிஜ உலக செயல்பாடுகள் மீது சிறப்பு கவனம் செலுத்துகின்ற இந்தியாவின் முதன்மை செயற்கை நுண்ணறிவு கருத்தாக்க நிகழ்வான RAISE 24 என்பதையும் வங்கி, நிதிசார் சேவைகள் மற்றும் காப்பீடு துறைக்காக நடத்தியதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இனிவரும் காலங்களில், புத்தாக்கத்தை மேலும் முன்னெடுப்பதிலும், எமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையாற்ற எமது செயல்திட்டங்களை மேம்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம்."
2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் போது ஆரோக்கியமான ரீடெய்ல் கடன் வழங்கல் மற்றும் பதிவேடு:
· கிராமப்புற பிசினஸ் நிதி:
o கடன் பதிவேட்டின் அளவு, முந்தைய ஆண்டின் ரூ.23,110 கோடியை விட, 14% அதிகரித்து, ரூ.26,231 கோடியாக பதிவாகியிருக்கிறது.
o கடன் விநியோக தொகையானது, முந்தைய ஆண்டின் அளவான ரூ.5476 கோடியிலிருந்து, 16% குறைந்து ரூ.4599 கோடியாக பதிவாகியிருக்கிறது.
o சவால்மிக்க மேக்ரோ சூழலின் காரணமாக, இடர்வாய்ப்பை கருத்தில் கொண்ட கடன் விநியோக உத்தி பின்பற்றப்பட்டது.
· விவசாயிகளுக்கான நிதி:
o கடன் பதிவேட்டின் அளவு, முந்தைய ஆண்டின் ரூ.13,845 கோடியை விட, 9% அதிகரித்து, ரூ.15,075 கோடியாக பதிவாகியிருக்கிறது
o கடன் விநியோக தொகையானது, முந்தைய ஆண்டின் அளவான ரூ.2,027 கோடியிலிருந்து, 23% உயர்ந்து ரூ.2,495 கோடியாக பதிவாகியிருக்கிறது.
o சராசரியை விட சிறப்பான பருவமழை மற்றும் பண்டிகைக்கால தேவையின் காரணமாக இப்பிரிவில் சிறப்பான வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது.
· இரு – சக்கர வாகன நிதி:
o கடன் பதிவேட்டின் அளவு, முந்தைய ஆண்டின் ரூ.10,447 கோடியை விட, 21% அதிகரித்து, ரூ.12,676 கோடியாக பதிவாகியிருக்கிறது
o கடன் விநியோக தொகையானது, முந்தைய ஆண்டின் அளவான ரூ.2,540 கோடியிலிருந்து, 5% குறைந்து ரூ.2,414 கோடியாக பதிவாகியிருக்கிறது
o ஆவணமாக்கலை வலுப்படுத்துவது மற்றும் சிறந்த தரமுள்ள நல்ல மற்றும் முதன்மை வாடிக்கையாளர்களை தேர்வு செய்வதற்காக பாதுகாப்பு அம்சங்களை செயல்டுத்துவது உட்பட, கடன் வினியோக செயல்முறை கவனமாக மேற்கொள்ளப்பட்டது.
· தனிநபர் கடன்கள்:
o கடன் பதிவேட்டின் அளவு, முந்தைய ஆண்டின் ரூ.6,427 கோடியை விட, 22% அதிகரித்து, ரூ.7,820 கோடியாக பதிவாகியிருக்கிறது
o கடன் விநியோக தொகையானது, முந்தைய ஆண்டின் அளவான ரூ.847 கோடியிலிருந்து, 94% அதிகரித்து ரூ.1,642 கோடியாக பதிவாகியிருக்கிறது
o டிஜிட்டல் கூட்டாண்மைகள மற்றும் முதன்மை பிரிவுகளில் வளர்ச்சியினை கண்டறிதலின் மூலம் இந்த முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கிறது.
· வீட்டுக்கடன்கள் மற்றும் சொத்துக்களின் மீது கடன்கள் :
o கடன் பதிவேட்டின் அளவு, முந்தைய ஆண்டின் ரூ.16,654 கோடியை விட, 41% அதிகரித்து, ரூ.23,461 கோடியாக பதிவாகியிருக்கிறது
o கடன் விநியோக தொகையானது, முந்தைய ஆண்டின் அளவான ரூ.1,998 கோடியிலிருந்து, 24% அதிகரித்து ரூ.2,475 கோடியாக பதிவாகியிருக்கிறது
o விநியோக சேனல்கள் மற்றும் கூட்டாண்மைகள் மீது சிறப்பு கவனத்தினால் சிறப்பான வளர்ச்சி இதன் மூலம் சிறப்பான பாதுகாக்கப்பட்ட போர்ட்போலியோ செயல்திறன் வெளிப்படுத்தப்பட்டது.
· SME நிதி:
o கடன் பதிவேட்டின் அளவு, முந்தைய ஆண்டின் ரூ.3,078 கோடியை விட, 89% அதிகரித்து, ரூ.5,817 கோடியாக பதிவாகியிருக்கிறது
o கடன் விநியோக தொகையானது, முந்தைய ஆண்டின் அளவான ரூ.965 கோடியிலிருந்து, 29% அதிகரித்து ரூ.1,249 கோடியாக பதிவாகியிருக்கிறது.
About L&T Finance Ltd (LTF):
L&T Finance Ltd. (LTF) (https://www.ltfs.com), formerly known as L&T Finance Holdings Ltd., (LTFH) is a leading Non-Banking Financial Company (NBFC), offering a range of financial products and services. Headquartered in Mumbai, the Company has been rated 'AAA' — the highest credit rating for NBFCs — by four leading rating agencies. It has also received leadership scores and ratings by global and national Environmental, Social, and Governance (ESG) rating providers for its sustainability performance. The Company has been certified as a Great Place To Work® and has also won many prestigious awards for its flagship CSR project – "Digital Sakhi"- which focuses on women's empowerment and digital and financial inclusion. Under Right to Win, being in the 'right businesses' has helped the Company become one of the leading financiers in key Retail products. The Company is focused on creating a top-class, digitally enabled, Retail finance company as part of the Lakshya 2026 plan. The goal is to move the emphasis from product focus to customer focus and establish a robust Retail portfolio with quality assets, thus creating a Fintech@Scale while keeping ESG at the core. Fintech@Scale is one of the pillars of the Company's strategic roadmap - Lakshya 2026. The Company has around 2.5 Crore customer database, which is being leveraged to cross-sell, up-sell, and identify new customers.