கடன்: தீதும் நன்றும் - அள்ள அள்ளப் பணம் (பாகம் - 9)
சோம.வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாக கையாண்டால் மிகுந்த பயன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாக இருக்கிறது.
அதே சமயம் கவனமின்றி பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும். செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது 'அள்ள அள்ளப் பணம்' தொடர் நூல் வரிசை மூலம் தொடர்ந்து பதிவு செய்து வரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பன் எழுதியுள்ள
இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன் என்பது பெரிய சப்ஜெக்ட். அடமான கடன், செக்குகள், பிராமிசரி நோட், செக் பவுன்ஸ், வங்கி கடன்கள், NBFC நிறுவனங்களில் இருந்து கடன்கள், லோன் ஆப்கள், வியாபாரக் கடன், தங்கத்தின் மீதான கடன், விவசாய கடன், வாகன, வீட்டுக் கடன் அதற்குரிய வரி விலக்குகள், கடனை திருப்பி தராவிட்டால் எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள், சர்பாசி சட்டம் என பலவற்றை பற்றியும் ஒரு எளிமையான, அதே சமயம் விரிவான புத்தகம். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
'அள்ள அள்ளப்பணம்' வரிசையில் முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் மிகுந்த கவனம் பெறும் என்பது உறுதி.
Other Books from this series:
1. பங்குச்சந்தை அடிப்படைகள்
2. பங்குச்சந்தை அனாலிசிஸ்
3. ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்
4. போர்ட்ஃபோலியோ முதலீடுகள்
5. பங்குச்சந்தை டிரேடிங்
6. மியூச்சுவல் ஃபண்ட்
7. தங்கம், வெள்ளி, பிட்காயின்
8. இன்சூரன்ஸ்
9. கடன்: தீதும் நன்றும்
10 SIP நிச்சய லாபத்துக்கு வழி