பிரயாக்ராஜ் மகா கும்பமேளா: ரூ.59 பிரீமியத்தில் மருத்துவக் காப்பீடு…! Health Insurance
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா 2025 பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு இந்தியா முழுக்க இருந்து பல லட்சம் பக்தர்கள் குவிவது வழக்கம்.
இந்தப் பக்தர்களுக்கு குறைந்த பிரீமியத்தில் காப்பீடு வழங்கும் வகையில் இந்தத் திட்டத்தை போன் பே மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.
பேருந்து, ரயில் மூலம் வருபவர்களுக்கு ரூ.59 பிரீமியம், விமானங்களில் மூலம் வருகை செய்பவர்களுக்கு ரூ.99 பிரீமியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டின் மூலம் பயண தேதிகளில் ரூ.50,000 மருத்துவ காப்பீடு (Health Insurance) கிடைக்கும்.
விபத்துகள் காரணமாக மரணம் அல்லது நிரந்தர / பகுதி உடல் ஊனம் ஏற்படும்பட்சத்தில் ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
விமான மூலம் பயணம் செய்பவர்களுக்கு பயணத்தில் உடைமைகள் எதுவும் தவறும்பட்சத்தில் ரூ.5,000 வரை காப்பீடு கிடைக்கும்.