இந்தியாவில் ஆடம்பர வீடுகள் விற்பனை 53 சதவீதம் அதிகரிப்பு
டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை ஆகிய 7 பெருநகரங்களில் கடந்த ஆண்டு ஆடம்பர வீடுகள் விற்பனை 53 சதவீதம் அதிகரித்துள்ளதாக முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 90 சதவீத வீடுகள், டெல்லி, மும்பை, ஐதராபாத்தில் மட்டும் விற்பனை ஆகியுள்ளன.
ரூ.4 கோடிக்கு மேற்பட்ட மதிப்புடைய வீடுகள், ஆடம்பர வீடுகளாக கருதப்படுகின்றன.
கடந்த 2024 -ம் ஆண்டு , 7 நகரங்களிலும் 19,700 ஆடம்பர வீடுகள் விற்பனை ஆகியுள்ளன. இது, 2023-ம் ஆண்டு விற்ப னையுடன் ஒப்பிடுகையில் 53% அதிகம்.
உயர்-நடுத்தர வகுப்பினர், தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப உயர் வசதிகளுடன் விசாலமான வீடுகளை எதிர்பார்ப்பதால், இத்தகைய வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.