டி.சி.எஸ்: பரிந்துரைக்கும் 3 பங்கு தரகு நிறுவனங்கள் TCS
டி.சி.எஸ் - டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services - TCS)
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி) துறை சார்ந்த டி.சி.எஸ் நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற டிசம்பர் காலாண்டில் (2024 அக்டோபர், நவம்பர், டிசம்பர்) ஆண்டு அடிப்படையில் 5.6% அதிகரித்து ரூ. 63,973 கோடியாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 12% உயர்ந்து ரூ. 12,380 கோடியாக உள்ளது.
காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 8% அதிகரித்துள்ளது.
காலாண்டு நிதிநிலை முடிவுகளுக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க 3 பங்கு தரகு பரிந்துரை செய்துள்ளன
மோதிலால் ஆஸ்வால் - இலக்கு விலை ₹5,000
பிஎன்பி பரி பாஸ் -இலக்கு விலை ₹4,850
ஜெஃப்ரிஸ் -இலக்கு விலை ₹4,775
.தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு ₹4,300 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
டி.சி.எஸ் நிறுவனம் இடைக்கால டிவிடெண்ட் ₹10 மற்றும் சிறப்பு டிவிடெண்ட் ஆக ரூ.66 வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் ரெகார்ட் தேதியாக 2025 ஜனவரி 17 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.