யாசீன் சாஹர், நிதி நிபுணர்
புதிய மியூச்சுவல் முதலீட்டாளர்கள் ரூ.250 எஸ்ஐபி: ஃபண்ட் முகவர்களுக்கு ரூ.500 ஊக்கத்தொகை: செபி MFDs Incentive
யாசீன்
சாஹர், நிதி நிபுணர்
மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு
செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.250 மைக்ரோ-எஸ்ஐபி (மைக்ரோ - சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) அறிமுகம் செய்ய இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) பரிந்துரைத்துள்ளது.
கூடுதலாக, செபி, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களுக்கு (எம்எஃப்டிகள் Mutual Fund
Distributors - MFDs) ரூ.500 ஊக்கத் தொகையை அறிமுகப்படுத்தி
உள்ளது. ரூ.250
எஸ்ஐபி
முதலீட்டை கொண்டு
வருவதற்கான செயல்திட்டங்களை வழங்கவும் முன்மொழிந்துள்ளது. 24 தவணைகள் SIP- முடித்த பிறகு MFDகளுக்கு ரூ. 500 ஊக்கத்
தொகை வழங்கப்படுகிறது.
மேலும், இந்த ஊக்கத் தொகையை பெற MFDகள் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டுவர வேண்டும். AMFI & AMCகளுடன் IAP பட்ஜெட்டில் இருந்து AMCகள் இந்த ஊக்கத்தொகையை வழங்கலாம் என்று SEBI கூறியுள்ளது.
இந்த SIP-ஐ ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் (வளர்ச்சி ஆப்ஷன்) திட்டங்களில் மட்டுமே செய்ய முடியும். புதிய
முதலீட்டாளர்கள் என்பதால் கடன் ஃப்ண்டுகள், துறைசார் / கருப்பொருள் ஃபண்டுகள், மிட் கேப் ஃபண்டுகள் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் மைக்ரோ-எஸ்ஐபியைத் தொடங்க முடியாது.
இந்த இணைப்பிற்கு link சென்று பிப்ரவரி 6, 2025க்குள் இந்த ஆலோசனைத் தாள் குறித்த உங்கள் கருத்தைப் பகிரலாம்.
Mr. Yaseen Sahar has been reached at rahas84@gmail.com and 98433 13512
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.