ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட அறிவிப்பு வெளியீடு
தேசிய ஓய்வூதிய திட்டத் தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்காக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (Unified Pension Scheme or UPS) மத்திய அரசு உருவாக்கியது. இந்ததிட்டத்துக்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இந்ததிட்டத்துக்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
அதில் முக்கியமாக குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபு ரிந்த அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் வாங்கிய அடிப்படை ஊதியத்தின் சராசரியில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக பெறமுடியும்.
குறைந்த ஆண்டுகள் பணிபுரிந்தால் விகிதாசார ஊதியம் அனுமதிக்கப்படும். அதேநேரம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 உத்தரவாதமான ஊதியம் உறுதி செய்யப்படும்.
இந்த ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு 14 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக அதிகரிக்கிறது.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரம் அரசு ஊழியர் கள் புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் இதில் ஒன்றை தேர்வு செய்யலாம் எனவும் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.