திரு. ச.ஶ்ரீதரன், நிறுவனர், https://www.wealthladder.co.in
2 ஆண்டுகளில் தங்கம் விலை ரூ.15,000 உயர்வு: லாபகரமாக முதலீடு செய்வது எப்படி?
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.60,000-ஐ தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பவுனுக்கு ரூ.15,000 வரை உயர்ந்து உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு..!
தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கடந்த 2024 –ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50,000-ஐ தொட்டது. அதன்பின்னர், அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.55,000 என்ற நிலையையும் கடந்தது. தொடர்ந்து விலை அதிகரித்துவந்தநிலையில், 2024 ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை மளமளவென சரிந்து, ஒரு பவுன் ரூ.51,000-க்கும் கீழ் வந்தது.
மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதன் பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. எந்த வேகத்தில் விலை குறைந்ததோ, அதை விட அசுர வேகத்தில் விலை அதிகரித்தது. 2024 செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஒரு பவுன் ரூ.56,000-க்கு உயர்ந்து, விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்தது.
ஒரு பவுன் ரூ.60,000
அதனைத்
தொடர்ந்தும் விலை உயர்ந்து 2024 அக்டோபர் மாதத்தில் ஒரு பவுன் ரூ.57,000, ரூ.58,000,
ரூ.59,000 என்ற நிலையையும் கடந்தது. 2024 அக்டோபர் மாதம் 31-ந் தேதி ஒரு கிராம் ரூ.7,455-க்கும்.
ஒரு பவுன் ரூ.59,640-க்கும் விற்பனை ஆனது. இது தான் கடந்த 2024-ம் ஆண்டின் உச்சபட்ச
விலையாக இருந்தது.
மேலும் விலை அதிகரித்து ரூ.60,000 -த்தையும் தொட்டு விடும் என சொல்லப்பட்டது. ஆனால் விலை ஏற்ற, இறக்கத்தால், ரூ.60,000-த்தை தொடாமலேயே இருந்தது.'
வரலாறு காணாத உச்சம்..!
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே வந்ததை பார்க்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாக 2025 ஜனவரி 22-ம் தேதி அதன் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு பவுன் ரூ.60,000 என்ற நிலையையும் தாண்டியது.. ஒரு பவுன் ரூ.60,200-க்க் விற் பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில், உச்சத்தை தொட்டு புதிய வரலாறு படைத்து இருக்கிறது.
கடந்த 2023- ஆஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு பவுன் ரூ.45,000 -த்தை கடந்தது. அதன் பின்னர் 2 ஆண்டுகளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.15,000 வரை உயர்ந்து தற் போது ஒரு பவுன் ரூ.60,000-ஐ தாண்டி உள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணம்..!
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டு, அவர் 2025 ஜனவரி 20-ந் தேதி பதவியேற்றார். அவர் பதவி ஏற்றதும் பல்வேறு அறிவிப் புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் அதற்கு முன் னதாகவே தங்கம் விலை அதிகரித்தது.
அதேபோல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க. இறக் குமதி வரி அதிகரிப்பு உள் ளிட்ட பல்வேறு அறிவிப்பு களை டிரம்ப் வெளியிட்டார். மேலும் சீனா, இந்தியாவுக்கு எதிராக சில வரிகளையும் விதிக்க இருக்கிறார். இதனால் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என் பதால், அவர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கி உள்ளார்கள்.
டிஜிட்டல் வழி முதலீடு..!
தங்கத்தின் விலை உயர்வால், தங்க நகையாக வாங்கி இருந்தால் லாபம் இருக்காது. காரணம், செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி மற்றும் பழைய நகை என்கிற வகையில் 15-20% கழிவு போய் விடும்.
எனவே, தங்கத்தை டிஜிட்டல் வழியில் கோல்டு இ.டி.எஃப் மற்றும் கோல்டு
சேவிங்ஸ் ஃபண்ட் ஆக வாங்கினால் மேற்கண்ட செலவுகள் மற்றும் லாக்கர் செலவு கிடையாது.
இந்த இரு முறைகளிலும் குறைந்தபட்சம்
ரூ.100 இருந்தால் கூட முதலீட்டை ஆரம்பித்து விட முடியும்.
கடந்த ஓராண்டில் இந்த
ஃபண்டுகள் 28 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளன.
கூடுதல் விவரங்கள், முதலீட்டு ஆலோசனைக்கு..!
திரு. ச.ஶ்ரீதரன், நிறுவனர், https://www.wealthladder.co.in
If you need any advice on investments, do call us at
9940116967.
Team Wealth Ladder,
AMFI Registered Mutual Fund Distributor
2nd Floor, No.8A, 2nd Main
Road, Nanganallur,
Chennai – 600 061
Cell
+91 9940 11 6967
Ph: 044-48612114
https://www.wealthladder.co.in
Email
id : sridharan@wealthladder.co.in
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு
உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன்
–ல் திரு.ச.ஶ்ரீதரன்
எழுதிய கட்டுரைகளை படிக்க..
https://www.vikatan.com/author/855-sridharan-s
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.