கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை செயலாக்க அதிகாரி திரு. B. ரமேஷ் பாபு
2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான
கரூர் வைஸ்யா வங்கியின் நிதிசார் முடிவுகள் அறிவிப்பு
முக்கிய அம்சங்கள்
v மொத்த வர்த்தகம் முந்தைய ஆண்டைவிட 14.93% மற்றும் முந்தைய காலாண்டை விட 3.32% உயர்வு.
v டெபாசிட்கள் முந்தைய ஆண்டை விட 15.75% மற்றும் முந்தைய காலாண்டை விட 3.46% அதிகரிப்பு
v கடன் பதிவேடு, முந்தைய ஆண்டைவிட 13.96% மற்றும் முந்தைய காலாண்டை விட 3.16% அதிகரிப்பு.
v CASA, முந்தைய ஆண்டில் இதே காலஅளவை விட 4.28% அதிகரித்திருக்கிறது; CASA விகிதம் 28.41% என்ற அளவில் இருக்கிறது.
v PPOP, முந்தைய ஆண்டை விட 21.15% வளர்ச்சியடைந்திருக்கிறது.
v NIM, முந்தைய ஆண்டை விட 11 bps குறைந்து, 4.09% என்ற அளவில் இருக்கிறது.
v பிற வருவாய் முந்தைய ஆண்டை விட 29% வளர்ச்சி கண்டிருக்கிறது.
v இந்த காலஅளவில் வருவாய்க்கு ஆகும் செலவு விகிதம் 47.06% ஆக இருக்கிறது.
v இக்காலாண்டுக்கான ROA 1.74% என பதிவாகியிருக்கிறது.
v இக்காலாண்டிற்கான ROE 17.42% என்ற அளவில் இருக்கிறது.
v 0.83% என்ற அளவில் GNPA மற்றும் 0.20% என்ற அளவில் NNPA உள்ளன.
v மூலதன போதுமான நிலை விகிதம் (CRAR) 15.91% என்ற அளவிலும் மற்றும் CET 1 விகிதம் 15.03% என்ற அளவிலும் இருக்கின்றன.
கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை செயலாக்க அதிகாரி திரு. B. ரமேஷ் பாபு இது தொடர்பாக கூறியதாவது: "வளர்ச்சி லாபமீட்டல் நிலை மற்றும் சொத்தின் தரம் ஆகிய எனது மூன்று முக்கிய அளவு முறைகளினால் வழிநடத்தப்படும் நாங்கள், சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய மற்றுமொரு வலுவான காலாண்டை தொடர்ச்சியாகப் பெற்றிருக்கிறோம். எமது வங்கியின் செயல்பாடுக்கான சுட்டிக்காட்டல் அம்சங்கள், எமது வழிகாட்டல் குறிக்கோள்களுக்கு இணக்கமானவையாக இருக்கின்றன; தொடர்ச்சியான மற்றும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தொடர்ச்சியான வளர்ச்சியை இவை வெளிப்படுத்துகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் சாதித்த வலுவான தொடக்கத்தை தொடர்ச்சியாக, ரீடெய்ல், விவசாயம் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய, RAM பிரிவுகளில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, வளர்ச்சியை நாங்கள் முன்னெடுத்துச் சென்றிருக்கிறோம். இனி வரவிருக்கும் காலத்திலும் இதே வளர்ச்சியும், முன்னேற்றமும் பேணப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்
மொத்த வர்த்தகம் ₹1,81,993 கோடியை கடந்திருக்கிறது. அனைத்து பிசினஸ் பிரிவுகளிலும் பதிவாகியிருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஒன்பது மாதங்கள் என்ற இக்காலஅளவின்போது ₹1,428 கோடி என்ற நிகர இலாபத்தை எட்டுவதற்கு வலுவான ஆதரவளித்திருக்கிறது.
2024 டிசம்பர் 31, அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாத கால அளவிற்கு தனது நிதிசார் முடிவுகளை கரூர் வைஸ்யா வங்கி (வங்கி) 2025 ஜனவரி 20 அன்று அறிவித்திருக்கிறது. பிசினஸ் வளர்ச்சி, லாபமீட்டும் நிலை ஆகியவற்றுடன் சொத்தின் தரம் என்பதிலும், அதன் ஆரோக்கியமான செயல்திறனை இவ்வங்கி தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதை இது காட்டுகிறது.
இருப்புநிலை குறிப்பு (பேலன்ஸ் ஷீட்):
2024 டிசம்பர் 31 அன்று பேலன்ஸ் ஷீட்டின் அளவு ₹1,16,373 கோடியாக பதிவாகியிருக்கிறது. 2023 டிசம்பர் 31 அன்று இருந்த ₹41,02,868 கோடி என்பதுடன் ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி விகிதம் 13.13% ஆகும்.
2024 டிசம்பர் 31 அன்று மொத்த வர்த்தகம் ₹1,81,993 கோடி என்ற அளவில் பதிவாகி, 31.12.2023 அன்று இருந்த ₹1,58,357 கோடி என்பதை விட, ₹23,636 கோடிகள் உயர்ந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிகையில், 14.93% என்ற வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
2024 டிசம்பர் 31 அன்று மொத்த டெபாசிட்கள் ₹99,155 கோடி என்ற அளவில் இருந்தன. 31.12.2023 – லிருந்த ₹85,665 கோடி என்பதுடன் ஒப்பிடுகையில், ₹13,490 கோடி உயர்ந்து, முந்தைய ஆண்டின் இதே காலஅளவை விட 15.75% வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.
வழங்கப்பட்ட மொத்த கடன்கள், ₹82,838 கோடி என்ற அளவில் 2024 டிசம்பர் 31 அன்று இருந்தன. 31.12.2023 – ல் பதிவான ₹72,692 கோடி என்பதுடன் ஒப்பிடுகையில், ₹10,146 கோடி உயர்ந்து, முந்தைய ஆண்டை விட 13.96% வளர்ச்சியை இது பதிவு செய்திருக்கிறது.
2025 நிதியாண்டின் ஒன்பது மாத காலஅளவிற்கான நிதிசார் செயல்பாடு
இந்த ஒன்பது மாத காலஅளவிற்கான நிகரலாபம் 24.28% என்ற வலுவான வளர்ச்சியுடன், முந்தைய ஆண்டின் இதே காலஅளவில் இருந்த ₹1,149 கோடி என்பதிலிருந்து, ₹1,428 கோடியாக உயர்ந்திருக்கிறது.
முந்தைய ஆண்டின் ஒன்பது மாத காலஅளவில் பதிவான ₹1,962 கோடி என்ற அளவுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான PPOP, 21.15% உயர்ந்து, ₹ 2377 கோடியாக பதிவாகியிருக்கிறது.
நிகர வட்டி வருவாய், முந்தைய ஆண்டின் ஒன்பது மாத காலஅளவில் பதிவான ₹2,814 கோடியிலிருந்து, 12.40% அதிகரித்து ₹ 3,163 கோடியாக பதிவாகியிருக்கிறது.
முந்தைய ஆண்டின் இதே காலஅளவின்போதும் பதிவாகியிருந்த 4.09% உடன் ஒப்பிடுகையில், நிகர வட்டி லாப வரம்பு 11 bps குறைந்து, 4.20% ஆக இந்த ஒன்பது மாத காலஅளவில் பதிவாகியிருக்கிறது.
டெபாசிட்களுக்கான செலவு 44 bps அதிகரித்து, இந்த அரையாண்டில் 5.57% ஆக பதிவாகியிருக்கிறது. முந்தைய ஆண்டின் ஒன்பது மாத காலஅளவின்போது, இது 5.13% ஆக இருந்தது.
முந்தைய ஆண்டின் இதே ஒன்பது மாத காலஅளவின்போது இருந்த 9.88% உடன் ஒப்பிடுகையில், கடன்கள் மீதான ஈட்டம் 24 bps அதிகரித்து, 10.12% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
முந்தைய ஆண்டின் இதே ஒன்பது மாத காலஅளவில் இருந்த ₹627 கோடி என்பதிலிருந்து, Y-o-Y அடிப்படையில் கமிஷன் மற்றும் கட்டணம் சார்ந்த வருவாய் 12.92% உயர்ந்து, ₹708 கோடியாக ஒன்பது மாதங்கள் காலஅளவில் பதிவாகியிருக்கிறது.
முந்தைய ஆண்டின் இதே ஒன்பது மாத காலஅளவின்போது ₹1882 கோடியாக இருந்த இயக்க செலவுகள், ₹2,114 கோடியாக அதிகரித்திருக்கின்றன.
வருவாய்க்கான செலவு விகிதம், (முந்தைய ஆண்டின் ஒன்பது மாத காலஅளவின்போது 48.95% ஆக இருந்த நிலையில்) 47.06% ஆக தற்போது குறைந்திருக்கிறது.
நிதிசார் செயல்பாடு – Q3 நிதியாண்டு 2025 எதிர் Q3 நிதியாண்டு 2024:
முந்தைய ஆண்டில் இதே காலாண்டின்போது ₹412 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த ஆண்டில் 20.39% என்ற வலுவான வளர்ச்சியை பதிவு செய்து, ₹496 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இந்த காலாண்டுக்கான PPOP, 20.56% அதிகரித்து ₹815 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே ஒப்பீட்டுக் காலாண்டின்போது இது ₹676 கோடியாக இருந்தது.
நிகர வட்டி வருவாய் 7.79% உயர்ந்து, ₹1,079 கோடி என்ற அளவில் இருக்கிறது. இதுவே முந்தைய ஆண்டின் இதே ஒப்பீட்டு காலாண்டின்போது ₹1,001 கோடியாக இருந்தது.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 4.32% ஆக பதிவான நிகர வட்டி இலாப வரம்பு இப்போது உடன் ஒப்பிடுகையில், இக்காலாண்டில் 4.03% ஆக இருக்கிறது.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டின்போது, 5.25% ஆக இருந்த டெபாசிட்களுக்கான செலவு 41 bps அதிகரித்து, இந்த காலாண்டில் 5.66% ஆக பதிவாகியிருக்கிறது.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டின்போது கடன்கள் மீதான ஈட்டம், 10.16% ஆக இருந்த நிலையில், இந்த காலாண்டிலும் அதே அளவான 10.16% ஆக பதிவாகியிருக்கிறது.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டின்போது இருந்த ₹226 கோடி என்பதிலிருந்து, Q-o-Q அடிப்படையில் கமிஷன் மற்றும் கட்டணம் சார்ந்த வருவாய் 3.54% உயர்ந்து, ₹234 கோடியாக இக்காலாண்டில் பதிவாகியிருக்கிறது.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டின்போது ₹683 கோடியாக இருந்த இயக்க செலவுகள், ₹731 கோடியாக இக்காலாண்டில் அதிகரித்திருக்கிறது.
வருவாய்க்கான செலவு விகிதம், 47.27% ஆக தற்போது பதிவாகியிருக்கிறது (முந்தைய ஆண்டின் Q3-ன் போது இது 50.27% ஆக இருந்தது.
மூலதன போதுமான நிலை:
மூலதன போதுமான விகிதமானது (CRAR), பேசல் III வழிகாட்டல்களின் படி, 2024 டிசம்பர் 31 அன்று இதற்கான ஒழுங்குமுறை தேவைப்பாடான 11.50% என்பதற்கு எதிராக, 15.91% ஆக இருந்தது (31 டிசம்பர் 2023 அன்று 15.03%). 2023 டிசம்பர் 31அன்று இருந்த 13.87% என்பதுடன் ஒப்பிடுகையில், 2024 டிசம்பர் 31 அன்று அடுக்கு 1-ல் இது 15.03% ஆக பதிவாகியிருக்கிறது. 2024 டிசம்பர் 31 அன்று இடர் ஆபத்தைக் குறிக்கும் கடன் சொத்துகளின் மதிப்பு ₹64,756 கோடியாக இருக்கிறது. (2023 டிசம்பர் 31 அன்று இது ₹ 59,531 கோடியாக இருந்தது).
சொத்தின் தரம்:
மொத்த வராக்கடன்கள் (GNPA) 75 bps முன்னேற்றம் பெற்று 2024 டிசம்பர் 31 அன்று மொத்த கடன்களில் 0.83% என்ற அளவில் (₹691 கோடி) இருந்தது. இதுவே 2023 டிசம்பர் 31 அன்று 1.58% என்ற விகிதத்தில் (₹ 1,152கோடி) பதிவாகியிருந்தது.
நிகர வராக்கடன்கள் (NNPA) தொகையானது 2024 செப்டம்பர் 30 அன்று நிகர கடன்களில் 1% -க்கும் குறைவாக, அதாவது 0.20% (₹167 கோடி) என்ற அளவில் இருந்தது. இதுவே 2023 டிசம்பர் 31 அன்று 0.42% என்ற அளவில் (₹305 கோடி) பதிவாகியிருந்தது.
2023 டிசம்பர் 31 அன்று இருந்த 94.81%-க்கு எதிராக வராக்கடன்களில் இழப்பை ஈடுசெய்யும் விகிதம் (PCR) 2024 டிசம்பர் 31 அன்று 96.87% என முன்னேற்றம் கண்டிருக்கிறது.
சேவை வலையமைப்பு:
2024 டிசம்பர் 31 அன்று இவ்வங்கியின் சேவை வினியோக வலையமைப்பு, 866 கிளைகள், 1 டிஜிட்டல் பேங்கிங் பிரிவு மற்றும் 2,197 ஏடிஎம்கள் / கேஷ் ரீசைக்கிளர்கள் என்ற அளவில் இருக்கிறது. 2023 டிசம்பர் 31 அன்று 831 கிளைகள் மற்றும் 2,251 ஏடிஎம்கள் / ரீசைக்கிளர்கள் என்ற அளவில் இந்த வலையமைப்பு இருந்தது. இவ்வங்கியின் கிளைகளில் 55%, சிறுநகரங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் செயல்படுகின்றன. கூடுதலாக, 378 வர்த்தக முகவர்களும் செயலாற்றுகின்றனர்.
B. ரமேஷ் பாபு
நிர்வாக இயக்குனர் & தலைமை செயலாக்க அதிகாரி
ஊடக தொடர்பிற்கு: கிறிஸ்டோபர் சார்லஸ் | பிரெடிக்ட் பிஆர் | 98424 75706 | charles@predictpr.com