RxT - A Financial Health Clinic நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, "தொழில் பழகுவோம்" புத்தகம் வெளியிடப்பட்டது.
புத்தகத்தை தமிழர் பன்னாட்டு வணிகப் பேரவை தலைவர் திரு. சரவண இராஜா வெளியீட, StartUp TN Mission Director திரு. சிவராஜா இராமநாதன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிக்கை வெளியீட்டாளர் சங்கத் தலைவர் திரு. சக்திவேல் இராமகிருஷ்ணன், தமிழ் கம்ப்யூட்டர் இதழ் நிறுவனர் திரு. க. ஜெயகிருஷ்ணன், Business Network Tamil நிறுவனர் திரு. சதாசிவம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் திரு. காசு நாகராசன், ஆழி பதிப்பகம் நிறுவனர் திரு. ஆழி . செந்தில்நாதன், Blaze Systems நிறுவனர் திரு. திலீப் குமார், மற்றும் RxT நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக