சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களை ஆர்பிஐ கேட்டுக் கொள்கிறது.
சில குறிப்பிட்ட முதலீட்டு திட்டங்களை ஆர்பிஐ அறிமுகப்படுத்துவதாக அல்லது அவற்றிற்கு ஆதரவளிப்பதாக கூறும் ஆர்பிஐ கவர்னரின் போலி காணொலிகள் சமூக ஊடங்களில் வலம் வருவதாக இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரிய வந்துள்ளது.
இந்த காணொலிகள், தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, பணத்தை இவ்வாறன திட்டங்களில் மக்களை முதலீடு செய்ய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
ஆர்பிஐ இவ்வாறன நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ அல்லது ஆதரவளிப்பதோ இல்லை என்றும் இந்தக் காணொலிகள் போலியானவை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்பிஐ இவ்வாறான நிதி ஆலோசனைகள் எதையும் வழங்குவதில்லை.
எனவே சமூக ஊடகங்களில் வரும் இவ்வாறான போலி காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.
ஆர்பிஐ இணையதளத்திற்கு செல்ல ஸ்கேன் செய்யவும்.
பொதுநலன் கருதி வெளியிடுவோர்
இந்திய ரிசர்வ் வங்கி - RESERVE BANK OF INDIA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக