திரு. ச.ஶ்ரீதரன், நிறுவனர் & சி.இ.ஓ, , https://www.walletwealth.co.in/
அதிக இறப்பு இழப்பீடு வழங்கிய
ஆயுள் காப்பீட்டு கம்பெனிகள்..!
ஆயுள் காப்பீட்டு பாலிசியில் க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் (Claim Settlement Ratio) என்பது, காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு கோரிக்கைகளுக்கு எவ்வளவு
இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது என்பதைத்
தீர்மானிக்கும் ஓர் அளவீடு.
க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம்..!
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority
of India - IRDAI) கடந்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான ஆயுள் காப்பீடு நிறுவனங்களின்
க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதங்களை வெளியிட்டுள்ளது; சராசரி இறப்பு க்ளெய்ம்
விகிதம் எண்ணிக்கையின் அடிப்படையில் 98.45% ஆகும். இது 2021-2022-ல் 98.64% என
சிறிது அதிகமாக இருந்தது. 2022-2023 –ம் ஆண்டில் 99%க்கும் அதிகமான க்ளெய்ம்களுக்கு
ஒன்பது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கி உள்ளன.
2022-2023 –ம் ஆண்டில் மொத்தம் ரூ.30,200 கோடி இறப்பு க்ளெய்ம் செய்யப்பட்ட
நிலையில் ரூ.28,611 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூபாய் மதிப்பில்
94.69% இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் மேக்ஸ் லைஃப்..!
2022-23=ல் ஆக்சிஸ் மேக்ஸ் லைஃப் 99.51% என்ற அதிகபட்ச க்ளெய்ம்
செட்டில்மென்ட் விகிதத்தைக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஹெச்.டி.எஃப்.சி லைஃப்
மற்றும் ஏகான் லைஃப் முறையே
99.41% மற்றும் 99.37% என உள்ளது.
99.20% உடன் எடில்வைஸ் டோக்கியோ லைஃப், 99.10% உடன் கனரா ஹெச்.எஸ்.பி.சி
லைஃப் மற்றும் 99.10% உடன் பார்தி ஆக்சா லைஃப் ஆகியவை 99% க்கும் அதிகமான க்ளெய்ம்
செட்டில்மென்ட் விகிதத்தைக் கொண்ட பிற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகும்.
.முதல் 10 பட்டியலில் பி.என்.பி மெட் லைஃப், பஜாஜ் அலையன்ஸ் லைஃப், டாடா
ஏ.ஐ.ஏ லைஃப் மற்றும் ஸ்டார் யூனியன் டாய்-இச்சி லைஃப் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இறப்பு இழப்பீடு
வழங்கிய விவரம்:
காப்பீடு நிறுவனம் |
2022-2023 இறப்பு உரிமைகோரல் தீர்வு (எண்ணிக்கையில்). |
ஆக்சிஸ் மேக்ஸ் லைஃப் |
99.51% |
ஹெச்.டி.எஃப்சி லைஃப் |
99.41% |
ஏகான் லைஃப் |
99.37% |
எடெல்வைஸ் டோக்கியோ லைஃப் |
99.20% |
கனரா ஹெச்எஸ்பிசி லைஃப் |
99.10% |
பாரதி ஆக்சா லைஃப் |
99.10% |
பி.என்.பி மெட் லைஃப் |
99.07% |
பஜாஜ் அலையன்ஸ் லைஃப் |
99.06% |
டாடா ஏ.ஐ.ஏ லைஃப் |
99.01% |
ஸ்டார் யூனியன் டாய்-இச்சி லைஃப் |
98.83% |
பிரமெரிகா லைஃப் |
98.80% |
அவிவா லைஃப் |
98.75% |
ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் |
98.60% |
எல்ஐசி இந்தியா லைஃப் |
98.59% |
கோட்டக் மஹிந்திரா லைஃப் |
98.23% |
ஆதித்ய பிர்லா சன் லைஃப் |
98.12% |
ஸ்ரீராம் லைஃப் |
97.52% |
எஸ்பிஐ லைஃப் |
97.14% |
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் |
97.35% |
ஏஜஸ் ஃபெடரல் லைஃப் |
96.86% |
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் |
95.41% |
ஃப்யூச்சர் ஜெனரலி லைஃப் |
95.04% |
பொறுப்புத் துறப்பு: காப்பீடு என்பது கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். .
கூடுதல் விவரங்கள், ஆலோசனைக்கு..!
திரு. ச.ஶ்ரீதரன், நிறுவனர்
& சி.இ.ஓ, , https://www.walletwealth.co.in/
S.Sridharan, Founder & CEO, https://www.walletwealth.co.in/
If you need any advice on investments, do call us at
9940116967.
Team Wallet Wealth,
AMFI Registered Mutual Fund Distributor
2nd Floor, No.8A, 2nd Main
Road, Nanganallur,
Chennai – 600 061
Ph: 044-48612114
https://www.walletwealth.co.in/
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு
உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன்
–ல் திரு.ச.ஶ்ரீதரன்
எழுதிய கட்டுரைகளை படிக்க..
https://www.vikatan.com/author/855-sridharan-s