முதலீட்டாளர்களுக்கு சரியாக முதலீடு செய்ய உதவி.. டிஎஸ்பி பிசினஸ் சைக்கிள் ஃபண்ட்..! DSP Business Cycle Fund
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், டிஎஸ்பி பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (DSP Business Cycle Fund) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது வணிகச் சுழற்சிகள் அடிப்படையிலான முதலீட்டைக் கொண்ட ஓப்பன் எண்டெட் ஈக்விட்டி ஃபண்ட் ஆகும்.
இந்த ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் உட்பட பல்வேறு பங்குச் சந்தை மூலதனத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த முதலீட்டு உத்தி வலுவான வளர்ச்சி, அடிப்படை மேம்பாடு மற்றும் கவர்ச்சிகரமான மதிப்பீடுகளை வழங்கும் தொழில் மற்றும் துறைகளுக்கு மாறும் வகையில் சொத்து பிரிவுகளை ஒதுக்கீடு செய்வதில் கவனம் செலுத்துகிறது,
டிஎஸ்பி பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் ஆனது அதிக வளர்ச்சி மற்றும் கணிசமான வருவாயை ஈட்டும் தொழில்துறை மற்றும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.
மேலும், பங்குச் சந்தை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் போது, ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் (REITகள்) அல்லது உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளில் (InvITs) அதன் போர்ட்ஃபோலியோவில் 10% வரை முதலீடு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை இது பின்பற்றுகிறது.
தீம்களில் சரியான நேரத்தில் தாமாக நுழைவதும் வெளியேறுவதும் முதலீட்டாளர்களுக்கு கடினமானதாக இருக்கலாம் மற்றும் சில நேரங்களில் தவறுகளுக்கு வழிவகுக்கும். டிஎஸ்பி பிசினஸ் சைக்கிள் ஃபண்ட், ரிஸ்க்களை திறம்பட நிர்வகிக்கும் அதே வேளையில், வணிகச் சுழற்சிகளின் பல்வேறு கட்டங்களைக் கடந்து செல்ல உத்தி ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மாறிவரும் பங்குச் சந்தை பயன்படுத்திக் கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
இந்த ஃபண்டில் டிசம்பர் 11, 2024 வரை முதலீடு செய்யலாம். அப்போது யூனிட் ஒன்றின் மதிப்பு ரூ.10 ஆக இருக்கும். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி. வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை படிக்க https://bit.ly/3TVQAHJ
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது