ஆர்பிஐ CRR குறைப்பை அறிவித்துள்ளது
ஆனால் CRR என்றால் என்ன?
இருப்பு விகிதங்களை பற்றிய ஒரு விளக்கத்தை பார்க்கலாம் (CRR மற்றும் SLR)
CRR – Cash Reserve Ratio
(பண இருப்பு விகிதம்)
SLR – Statutory Liquidity Ratio
(சட்டப்பூர்வ பண புழக்க விகிதம்)
நாம் ஒரு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்போது, அதில் சில பகுதிகளை வங்கி கட்டாயமாக ஒதுக்கி வைக்க வேண்டும்.
CRR என்பது ரிசர்வ் வங்கியுடன் ரொக்க இருப்பு வடிவத்தில் பராமரிக்கப்பட வேண்டும், மேலும் இரண்டு வார அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.
CRR இல் வங்கி எந்த வட்டியையும் பெறாது.
SLR என்பது எளிதாக மாற்றக்கூடிய அரசுப் பத்திரங்கள் மற்றும் தங்கம் வடிவில் பராமரிக்கப்பட வேண்டும். பணத்திற்காக எளிதில் மாற்றக்கூடிய ஒன்று.
இந்தியாவில் தற்போது 4.5% உள்ள CRR 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் SLR 18% உள்ளது. எனவே நாம் டெபாசிட் செய்யும் 100 ரூபாயில், 22 ரூபாய் இந்த இருப்புக்களுக்கு செல்லும்.
ஏன் என்று ஒருவர் கேட்கலாம்.
வங்கி என்பது மற்றவர்களின் பணத்தில் வேலை செய்கிறது. டெபாசிட் செய்தவர்கள் தங்கள் பணத்தைக் கேட்டு திரும்பி வந்தால், வங்கி அவர்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் பலர் பணம் கேட்டு வந்தால், வங்கிக்கு சிரமம், ஏனெனில் பணம் அவர்களிடம் இல்லை அதை வங்கி மக்களுக்கு கடனாக கொடுத்துள்ளனர்.
அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், இது பேங்க் ரன் என்ற சொல்லுக்கு வழிவகுக்கும்.
பொதுவாக கடன்கள் நீண்ட காலங்களை கொண்டிருக்கலாம் - உதாரணமாக வீட்டு கடன்கள் போன்றவை.
எனவே இருப்பு விகிதங்கள் (CRR & SLR) உருவாக்கபட்டு
பராமரிக்க படுகின்றன.
டெபாசிட் செய்பவர்கள் திரும்பி வந்தால் அவர்களுக்குப் பணம் கொடுக்க இந்தப் பணத்தை பயன்படுத்தலாம் என்பது யோசனை
அங்கு கூட ஒரு குறிப்பிட்ட சதவிகித டெபாசிட்டர்ஸ் மட்டுமே திரும்பப் பெற வருவார்கள் என்று கருதப்படுகிறது.
எனவே ரிசர்வ் வங்கி கையிருப்பு விகிதங்களை குறைத்தால், வங்கி குறைவான பணத்தை CRR மற்றும் SLRக்கு ஒதுக்க வேண்டும். இதனால் வங்கிகள் அதிக கடன் கொடுக்க முடியும், இது பண விநியோகத்தை அதிகரிக்கிறது.
மத்திய ரிசர்வ் வங்கி தற்போது
CRR விகிதத்தை 4.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது.
CRR குறைப்பால் வங்கி அமைப்புக்கு சுமார் 1.10 லட்சம் கோடி ரூபாய் சேரும் என்று RBI மதிப்பிட்டுள்ளது.
இந்த பதிவு CRR இன் தேவை, CRR குறைப்பின் தாக்கம் மற்றும் அதற்குப் பின்னால் உள்ள காரணங்களை எளிதாக விளக்கியுள்ளது என்று நம்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக