மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு
மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டம்
3 ஆண்டுகளில் நிர்வாகத்தின் கீழ் 1 பில்லியன் டாலர் சொத்துக்களை அடைய இலக்கு
சென்னை, டிச. 21 - மொரிஷியஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட மற்றும் செபியில் பதிவு செய்யப்பட்டுள்ள அர்தா குளோபல் ஆப்பர்சூனிட்டீஸ் பண்ட், குஜராத்தின் கிஃப்ட் நகரை உலகத் தரம் வாய்ந்த சர்வதேச நிதிச் சேவை மையமாக மாற்ற விரும்பும் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத் திட்டத்தில் பங்கேற்கும் விதமாக மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிப்ட் சிட்டிக்கு மாறி உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளது.
சச்சின் சவுரிகர்
இது குறித்து அர்தா பாரத் இன்வெஸ்ட்மெண்ட் மானேஜர்ஸ் ஐஎப்எஸ்சி எல்எல்பி நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் சச்சின் சவுரிகர் கூறுகையில், பங்குகளை மீட்டெடுக்கும் கட்டமைப்பின் கீழ் கடந்த ஆண்டு மொரிஷியஸ் நாட்டில் எங்கள் ரேடியன்ட் கேபிடல் குளோபல் ஆப்பர்ச்சூனிட்டீஸ் இன்கார்ப்பரேட்டட் விசிசி சப் ஃபண்ட் 1 துவங்கப்பட்டது. இது செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் வகை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர் நிறுவனம் ஆகும். அது தற்போது கிப்ட் சிட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் நிறுவனத்தை சீரமைக்கும் விதமாக, கிப்ட் சிட்டியை உலகளாவிய நிதி மையமாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது.
இந்த இடமாற்றத்தின் ஒரு பகுதியாக, ரேடியன்ட் கேபிடல் குளோபல் ஆப்பர்ச்சூனிட்டீஸ் இன்கார்ப்பரேட்டட் விசிசி சப் ஃபண்ட் 1, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, அர்தா குளோபல் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் உடன் இணைக்கப்படுகிறது. இந்த நிலையில், மாற்றத்தை இறுதி செய்ய கடன் வழங்குவோரின் தடையில்லாச் சான்றிதழ்களுக்காக இந்நிறுவனம் காத்திருக்கிறது. 7 ஆண்டுகள் திட்டமிடப்பட்ட ஆயுட்காலம் கொண்ட இந்த நிதி, இந்தியாவில் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களால் வழங்கப்பட்ட பாதுகாப்பு ரசீதுகளில் முதலீடு செய்ய உள்ளது என்று சச்சின் சவுரிகர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எங்களின் அர்தா குளோபல் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்டில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5 மடங்கு வருமானம் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்கான சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தர்.
இந்த நிதியானது, தனியார் சமபங்கு துறையில் அனுபவம் வாய்ந்தவரும் முன்னாள் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட் மேலாளருமான சச்சின் சவுரிகரால் அர்தா பாரத் இன்வெஸ்ட்மெண்ட் மானேஜர்ஸ் ஐஎப்எஸ்சி எல்எல்பி மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது,
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களை ரூ.1,100 கோடியில் இருந்து 1 பில்லியன் டாலராக உயர்த்த அர்தா பாரத், தனது உலகத் தரம் வாய்ந்த சர்வதேச நிதிச் சேவை செயல்பாடுகளை உருவாக்கவும், அதன் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படையாக 3 புதிய நிதி திட்டங்களையும் அறிமுகப்படுத்தவும் உள்ளது.
இந்த நிதி வெளிநாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், உலகளாவிய பன்முகத்தன்மையை விரும்பும் இந்தியாவில் உள்ள அல்ட்ரா ஹை நெட் வொர்த் தனிநபர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.
கிப்ட் சிட்டியில் ஒரு முன்னோடியாக, தொடங்கத் திட்டமிட்டுள்ள புதிய நிதி திட்டங்கள் இதன் போர்ட்போலியோவை மேலும் விரிவுபடுத்துவதோடு, உலகளாவிய முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
2025 ல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிதி திட்டங்கள்
தங்களது சாதனையை பிரதிபலிக்கும் விதமாக அர்தா பாரத், 2025-ம் ஆண்டில் மூன்று புதுமையான நிதி திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது:
1. ஹெட்ஜ் பண்ட் (அமெரிக்க சில்லறை விற்பனைத் துறை): இந்த ஃபண்ட் ஆல்பா, அமெரிக்க சில்லறை விற்பனைத் துறையில் நீண்ட மற்றும் குறுகிய கால நிலைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், காலாண்டு சந்தை வருமானத்தை விட 3% முதல் 5% வரை அதிகமாக உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
2. குளோபல் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்: நடுநிலைமை உத்திகளைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 8% முதல் 10% வரை நிலையான, குறைந்த ஆபத்துள்ள அமெரிக்க டாலர் வருமானத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது..
3. நிலையான முதிர்வு திட்டம்: 3 முதல் 4 ஆண்டு கால இடைவெளியில் 9 முதல் 10 சதவீத அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுவதை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிப்ட் சிட்டி இடமாற்றத்தின் நன்மைகள்
மொரீஷியஸ் நாட்டில் இருந்து கிப்ட் சிட்டிக்கு நிரந்தரமாக மாறுவதன் மூலம் பல நன்மைகளை கிடைக்கும். சவுரிகர் கருத்துப்படி இங்கு இதற்கான எதிர்காலம் சிறப்பாக உள்ளது. விதிமுறைகள் ஆரம்பத்தில் மைக்ரோ மேனேஜ்மென்ட் உள்ளடக்கிய உள்நாட்டு மாதிரியைப் பின்பற்றினாலும், அவை சர்வதேச நிதி சேவை மையத்துக்கு மிகவும் உகந்த கட்டமைப்பாக உருவெடுத்துள்ளன. இதன் காரணமாக எங்கள் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும்.
மொரீஷியஸ் போன்ற சிறிய நாட்டில் இருப்பதை விட, காந்திநகர் சர்வதேச நிதி சேவை மையத்தில் இருப்பது என்பது தங்களது சிறந்த செயல்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று அர்தா பாரத் கருதுகிறது. இதன் காரணமாக இங்குள்ள திறமையாளர் குழு இந்திய சந்தைக்கான மதிப்புமிக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறது. இது எதிர்காலத்தில் நிதியின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சவுரிகர் தெரிவித்தார்.
About Artha Bharat
Artha Bharat Investment Managers IFSC LLP (an associate firm of Radiant Capital) is licensed by International Financial Services Centres Authority, Gift City as a Fund Management Entity. It's the manager of the US $132.5 million (Rs 1,100 crore) special situations/distressed assets Artha Global Opportunities Fund. The firm has been promoted by Sachin Sawrikar, an MBA from XLRI Jamshedpur and Chartered Financial Analyst from CFA Institute USA. Sawrikar who also holds a Masters in Real estate Investments and Finance from Henley Business School has over 29 years of experience in fund management in India and global markets.