மொத்தப் பக்கக்காட்சிகள்

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI


திறமைமிக்க ஊழியர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதரவு,

சிறந்த தொழில் கொள்கைகளுடன் உலகளாவிய தகவல் தொழில்நுட்பம்செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம்

–––––––

சிஐஐ கனெக்ட் 2024 மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

–––––

சென்னை, டிச. 18– திறமைமிக்க ஊழியர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆதரவு,  சிறந்த தொழில் கொள்கைகளுடன் உலகளாவிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று சிஐஐ கனெக்ட் 2024 மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'சிஐஐ கனெக்ட் 2024' மாநாட்டின் 22வது பதிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இந்தியா இயக்குனர் மகாதேஷா, சிஐஐ கனெக்ட் நிறுவனத் தலைவர் எஸ். மகாலிங்கம், சிஐஐ கனெக்ட் 2024 தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், காக்னிசன்ட் இந்தியா செயல் துணைத் தலைவர் ராஜேஷ் வாரியர், சிஐஐ தென் பிராந்திய தலைவர் நந்தினி உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

 

இந்த மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழ்நாட்டின் பலம் என்பது அதன் இணையற்ற தொழில்நுட்ப திறமையில் உள்ளது என்றும், இந்தியாவின் 20 சதவீத தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த திறமைமிக்க பணியாளர்களில் 80 சதவீதம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனங்களின் வணிக செயல்பாடுகளை எளிதாக்கும் விதமாக பல்வேறு ஆதரவை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதே நேரம் மாநிலத்தை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அதிகார மையமாக மாற்றும் நடவடிக்கையிலும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

 

மேலும் அவர் பேசுகையில்,  தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பாரம்பரிய டெண்டர் செயல்முறையின் மூலம் இல்லாமல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க அனுமதித்துள்ளது, புதிய கண்டுபிடிப்புகளுக்கு அவர்களை ஊக்குவிக்கிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் புதுமை மற்றும் வளர்ச்சியை தூண்டும் வகையில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு, திறமையான பட்டதாரிகள் மற்றும் ஐசிடி அகாடமி மூலம் பணியாளர்களுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவுக்கான வழிகாட்டுதல்களுக்கான கொள்கைகளை உருவாக்குதல், திறமையான மற்றும் நிலையான உள்ளூர் பணியாளர்களை உருவாக்குதல், தேய்மானத்தை குறைத்தல் மற்றும் ஆதரவு திட்டங்களை வழங்குதல் ஆகிய பகுதிகளில் முன்னுரிமை அளிக்க உள்ளது என்று தெரிவித்தார்.

 

இம்மாநாட்டில் சிஐஐ கனெக்ட் நிறுவனத் தலைவர் மற்றும் டிசிஎஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மற்றும் செயல் இயக்குனர் மகாலிங்கம் பேசுகையில், தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் ஒத்துழைப்போடு, வளர்ச்சியின் உச்சத்தில் தமிழ்நாடு இருக்கிறது. எதிர்கால வளர்ச்சிக்கான தொழில்களை உருவாக்குதல், புதுமைகளை வளர்ப்பது மற்றும் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் மாநிலத்தை உலக அளவில் முன்னிலைப்படுத்துவது உள்ளிட்ட கொள்கைகளை ஆதரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

 

சிஐஐ கனெக்ட் 2024 தலைவர் மற்றும் வீல்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத்ஸ் ராம் பேசுகையில், 1 ஜிபிபிஎஸ் அதிவேக இணையத்தை வழங்கும் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் வசதியானது தமிழகத்தில் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் உள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னதாரணமாக திகழ்கிறது. மேலும், நாட்டிலேயே தமிழகம் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி மாநிலமாக உள்ளது, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையானது குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது என்று பேசினார்.

 

சிஐஐ தென் பிராந்திய தலைவர் மற்றும் சந்திரா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் நந்தினி பேசுகையில், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தொழில்துறையானது 2030–ம் ஆண்டுக்குள் 826.7 பில்லியன் டாலர் சந்தையாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, அதன் செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்புடன், இந்த மாற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

 

இரண்டு நாள் மாநாட்டில் உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அமர்வுகள் இடம் பெற்றிருந்தன. இதில் ஸ்மார்ட்டர், திறமையான மற்றும் எதிர்கால செயல்பாடுகளை உருவாக்குதல், விநியோகச் சங்கிலியில் செயற்கை நுண்ணறிவின் மேஜிக் மற்றும் குழு விவாதங்களுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தரவுகளை நிர்வகித்தல் மற்றும் உருவாக்குதல் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தன.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI திறமைமிக்க ஊழியர்கள் , ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதரவு , சிறந்த தொழ...