எல்.ஐ.சி.யில் உரிமை கோரப்படாத ரூ.880 கோடி
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யில் பாலிசிதாரர்களின் பாலிசி முதிர்வடைந் தும் உரிமை கோரப்படாமல் மொத்தம் ரூ.880 கோடியே 93 லட்சம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 3 லட்சத்து 72 ஆயிரத்து 282 பாலிசிதாரர்களுக்கு இந்த பணம் சொந்த மானது. பாலிசி முடிவடைந்து 3 ஆண்டுக ளுக்கு பிறகும் முதிர்வு பணத்தை பெறாவிட்டால், அது உரிமை கோரப்படாத தொகையாக கருதப்படும். 10 ஆண்டுகளுக்கு பிறகும் அதை பெறாவிட்டால், அத்தொகை மத்திய அரசின் மூத்த குடி மக்கள் நல நிதியில் சேர்க்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக