கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, டிச.19- கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-
360 சதுரடி வீடு
தமிழ்நாட்டின் ஊரகப் பகு திகளில் வருகிற 2030-ம் ஆண் டிற்குள், அதாவது 6 ஆண்டு களில் 8 லட்சம் வீடுகள் புதிதாக கட்டித்தர கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை அரசு அறி வித்தது. இந்த திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு லட்சம் வீடுகள் கட்டுவ தற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்
மு.க.ஸ்டாலின்
படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உள்ளிட்டவை சேர்ந்து 360 சதுர அடியாக இருக்கும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இந்த திட்டத்தின் கீழ் டான்செம் சிமெண்ட் மற் றும் இரும்பு கம்பிகள் குறைந்த
விட விலையில் கொள்முதல் செய் யப்பட்டு வழங்கப்படுகிறது.
ரூ.400 கோடி
வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன் னல் மட்ட நிலை, கூரை வேயப் பட்ட நிலை மற்றும் பணி முடி வுற்ற பின் என நான்கு தவணை களில் வங்கி கணக்கின் மூலம் தொகைநேரடியாகபயனாளிக ளுக்கு விடுவிக்கப்பட்டு வரு கிறது. இதுவரை தமிழக அர சால் ரூ.1,051 கோடியே 34 லட் சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860 கோடியே 31 லட்சம் விடு
விக்கப்பட்டுள்ளது. மேலும், சிமெண்ட் மற்றும் இரும்பு இரும்பு கம்பிகளுக்கு என ரூ.135 கோடியே 30 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.995 கோடியே 61 லட்சம் இது வரை கலைஞரின் கனவு இல் லம் திட்டத்தின் கீழ் செலவி
கலைஞர் கனவு இல்லம்
னம் மேற்கொள்ளப்பட்டுள் ளது. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் கட்டு மான பணிகளை துரிதப்படுத் தும்பொருட்டு முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் மேலும் ரூ.400 கோடி விடுவித்து உத்தர விட்டுள்ளார். இந்த ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம்
ரூ.1,451 கோடியே 34 லட்சம் பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக . தொகை விடுவிக்கப்பட்டு வரு
கிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.