மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

 

முகமது அலி, தலைவர் – கிரெடாய், சென்னை

 

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

 

 

நடப்பு ஆண்டின் துவக்கத்தில் குடியிருப்பு வீடுகளுக்கான ரியல் எஸ்டேட் சந்தை சற்று பின்னடைவை சந்தித்த போதும், இதில் உள்ள பல்வேறு சவால்களை சமாளித்து ஆண்டு இறுதியில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. துவக்கத்தில் இது மந்தகதியில் இருந்தபோதிலும், செப்டம்பர் மாதம் இந்த துறைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதன் காரணமாக 4வது காலாண்டு மிகச் சிறப்பாக துவங்கி உள்ளது என்று கிரெடாய், சென்னை மண்டல தலைவர் முகமது அலி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

 

கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் கட்டி முடித்து விற்பனையாகாத வீடுகளை விற்பதிலும், புதிய கொள்கைகளுடன், நிலையான சந்தை வளர்ச்சியில் பங்களிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நேர்மறையான போக்கு 4வது காலாண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

3வது காலாண்டில் சந்தை வளர்ச்சி

 

நடப்பு ஆண்டில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் சென்னை நகர் முழுவதும் மொத்தம் 182 குடியிருப்புத் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 19,109 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதில் மொத்தம் 9,396 வீடுகள் விற்பனையாகி உள்ளது. தரமான வாழ்வாதார இடங்கள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புடன் எளிதான போக்குவரத்து வசதிகள் கொண்ட இடங்களையே வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

 

4வது காலாண்டின் எதிர்பார்ப்பு

 

இந்த ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை குடியிருப்பு சந்தை நல்ல வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. பண்டிகை காலம் வர உள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் வீடு வாங்கும் எண்ணம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேகமானது, சந்தையின் திறனை மீண்டும் உயர்த்தி, இந்த ஆண்டை ஒரு நேர்மறையான வளர்ச்சியில் முடிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

 

கட்டுமான நிறுவனங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்ட வீடுகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள்.  இதன் காரணமாக 4வது காலாண்டின் விற்பனையானது 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றும் புதிய திட்டங்களைப் பொறுத்தவரை 3வது காலாண்டுடன் ஒப்பிடும்போது தற்போது அது 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியானது, இந்த துறையில் உற்சாகத்தையும், வீடு வாங்குபவர்கள் இடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

 

2025க்கான கணிப்புகள்

 

முன்னோக்கிப் பார்க்கும்போது, குடியிருப்புச் சந்தையானது 2025ம் ஆண்டில் 20 முதல் 25 சதவீதம் விற்பனை வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. நகர்ப்புற விரிவாக்கத்தின் காரணமாக புதிய கட்டுமான திட்டங்களும் 15 முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த ஆண்டில், மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி மற்றும் போரூர் போன்ற பகுதிகள் மேம்பட்ட உள்கட்டமைப்பு காரணமாக சிறப்பான வளர்ச்சி கண்டுள்ள நிலையில், வீடு வாங்குவோர் இந்த பகுதிகளை அதிகம் விரும்புகிறார்கள்.

 

இதேபோல மணலி, கொருக்குப்பேட்டை போன்ற புதிய வளர்ச்சித் திட்டங்களால் வடசென்னை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. மத்திய சென்னை தொடர்ந்து வீடு வாங்குபவர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்ற பகுதியாகும். குறிப்பாக தி.நகர், நுங்கம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு போன்ற பகுதிகள், வணிக மையங்களுக்கு அருகாமையிலும், அனைத்து போக்குவரத்து வசதிகளையும் கொண்டு இருப்பதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேற்கு சென்னையைப் பொறுத்தவரை, குறிப்பாக அம்பத்தூர் மற்றும் ஆவடி போன்ற பகுதிகளில்

குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக நடுத்தர மக்களின் விருப்பமான இடமாக அவை மாறி வருகின்றன.

 

அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்புகள்

 

நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை இந்தத் துறை எதிர்நோக்குகிறது.

·         ஒப்புதல் செயல்முறையை எளிதாக்குவதும் விரைவுபடுத்துவதும் டெலிவரி காலத்தை கணிசமாக குறைப்பதோடு, வீடு வாங்குபவர்களுக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.

·         புதிய திட்டங்களுக்கு மின்மாற்றிகள் மற்றும் அத்தியாவசிய மின் உள்கட்டமைப்புகள் சரியான நேரத்தில் அமைத்து தருவதில் டான்ஜெட்கோவின் ஆதரவு மிகவும் முக்கியமானது.

·         கிரிட் ஆப் ரோட்ஸ் என்னும் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டமானது, நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், புறநகர் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதன் மூலம் முதலீடுகளை ஊக்குவிக்கும் மற்றும் வீட்டு கட்டுமான சந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

·         வீட்டு உரிமையை ஊக்குவிக்கும் கொள்கை நடவடிக்கைகள் இத்துறையின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். உதாரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள கொள்கையைப் போலவே, வீடு வாங்கும் பெண்களுக்கு முத்திரைத் தீர்வைத் தள்ளுபடி செய்வது, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு வீடு வாங்கும் உணர்வையும் அதிகரிக்கும். இத்தகைய முற்போக்கான நடவடிக்கைகள் இந்த துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும்.

·         சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளுக்கான உலகளாவிய நிலைத்தன்மை இலக்குகள் மற்றும் பசுமை கட்டிட திட்டங்களுக்கான அரசாங்க ஆதரவு ஆகியவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வரிச்சலுகைகள் அல்லது மானியங்கள் மூலம் நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, அது கட்டுமான நிறுவனங்களுக்கும் மற்றும் வீடு வாங்குபவர்களுக்கும் பயனளிக்கும்.

 

சென்னை நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக நடப்பு ஆண்டில் சென்னையின் அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவையைப் பொறுத்தவரை ஓஎம்ஆர், மேடவாக்கம் மற்றும் பல்லாவரம் போன்ற புறநகர் பகுதிகளில் குறைந்த விலை மற்றும் நடுத்தர பிரிவு வீடுகளுக்கான தேவை நன்றாக இருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால், கட்டி முடித்து குடியேறத் தயாராக இருக்கும் வீடுகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதும் தெரிய வந்துள்ளது.

 

முடிவுரை

 

2024-ம் ஆண்டில் சென்னை குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. வீடு வாங்குபவர்களின் ஆர்வம், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் மாநில அரசின் நேர்மறையான முன்னோக்கு திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக நடப்பு ஆண்டின் 4வது காலாண்டில் இந்த துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனை மற்றும் புதிய திட்டங்களுக்கு சிறப்பானதொரு அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

 

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

  முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை   சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024     நடப்பு ஆண்டின் து...