வீடுகள் விற்பனை 4 சதவீதம் குறைந்தது Flats
தற்போதைய 2024-ம் ஆண்டில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 7 முக்கிய நகரங்களில் வீடுகள் Flats விற்பனை 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக 'அனராக்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில், இந்நகரங்களில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 530 வீடுகள் விற்பனை ஆகின. ஆனால் நடப்பாண்டில் 4 லட்சத்து 59 ஆயிரத்து 650 வீடுகள் மட்டுமே விற்பனை ஆகின.
நிலம், வீடுகளின் விலை அதிக ரித்ததும், நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களும்தான் விற்பனை சரி வுக்கு காரணம் என்று 'அனராக்' தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், வீடுகளின் மதிப்பு அடிப்படையில் பார்த்தால், கடந்த ஆண்டை விட 16 சதவீதம் அதிக தொகைக்கு வீடுகள் விற்பனை ஆகியுள்ளன.
கடந்த ஆண்டு விற்ற வீடுகளின் மதிப்பு ரூ. ரூ.4 லட்சத்து 88 ஆயி ரம் கோடி. இந்த ஆண்டு விற்ற வீடுகளின் மதிப்பு ரூ. 5 லட்சத்து 68 ஆயிரம் கோடி.
சென்னையில் 2024 ஆண்டு 19 ஆயிரத்து 220 வீடுகள் விற்றுள் ளன. இது, கடந்த ஆண்டை விட 11 சதவீதம் குறைவு ஆகும்.