மொத்தப் பக்கக்காட்சிகள்

மூன்று மாதங்களுக்குள் 18 புதிய ஏஜென்சி கிளைகள் - இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்

மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள்ளேயே
18 புதிய ஏஜென்சி கிளைகளை தொடங்கியிருக்கும் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்

 

சென்னை: 10 டிசம்பர் 2024: இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்), 18 ஏஜென்சி (முகவாண்மை) கிளைகள் தொடங்கப்பட்டிருப்பதை பெருமிதத்துடன் இன்று அறிவித்திருக்கிறது.  #AgencyNirmaan என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த உத்தி வாய்ந்த விரிவாக்க நடவடிக்கை, இந்தியாவெங்கிலும் இந்நிறுவனத்தின் செயலிருப்பை மேம்படுத்தும்; இந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சமூகங்களுக்கு விரிவான ஆயுள் காப்பீடு தீர்வுகளை வழங்குவதற்கு இந்நிறுவனத்தை இந்நடவடிக்கை இன்னும் நெருக்கமாக எடுத்துச்செல்லும். 

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் – ன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தீரு. ருஷாப் காந்தி இது குறித்து கூறியதாவது: "நாட்டின் நான்கு திசைகளிலும் எமது ஏஜென்சி சேனலின் விரிவாக்கமானது, இந்தியாவில் எமது செயலிருப்பை மேலும் வலுவாக்குவதற்கான ஒரு மிக முக்கிய நடவடிக்கையாகும்.  நன்கு நிலைநாட்டப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் எமது பேங்க்அஸ்யூரன்ஸ் பிசினஸ் பிரிவிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், எமது வினியோக வலையமைப்பை பன்முகப்படுத்தி பரவலாக்கும் எமது செயல்உத்திக்கு இணக்கமானதாக இந்நடவடிக்கை இருக்கிறது,  இதன்மூலம் பல்வேறு சேனல்களை கொண்ட ஒரு மிகப்பெரிய வினியோக நிறுவனமாக இது எங்களை நிலைமாற்றத்திற்கு இட்டுச்செல்லும். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் காலஅளவிற்குள் நாடு முழுவதிலும் ~100 ஏஜென்சி கிளைகளை நிறுவ நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்."


இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் – ன் ஏஜென்சி சேனல் பிரிவின் பிரசிடென்ட் திரு. சுமீத் சாஹ்னி பேசுகையில், "
இந்தியா முழுவதற்குமான எமது விரிவாக்கம், ஒரு வலுவான ஏஜென்சி சேனலை உருவாக்குவது மீதான எமது கூர்நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,  இறுதிநிலை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய இந்தியாவெங்கிலும் ஒரு வலுவான கிளை வலையமைப்பை உருவாக்க #AgencyNirmaan திட்டமானது, எங்களை சரியான இடத்தில் நிலைநிறுத்தும்.  எமது வினியோக வலையமைப்பை திறம்பட பயன்படுத்துவதன் வழியாக, வாடிக்கையாளர்களுக்கு தேவை அடிப்படையிலான காப்பீடு தீர்வுகளை வழங்குவதும் மற்றும் நிதிசார் பாதுகாப்பை மேம்படுத்துவதும் எமது நோக்கமாகும்.  எமது புதிய ஏஜென்சி கிளைகள் அமைக்கப்படும் பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை அவைகள் உருவாக்கும்; மேலும் அப்பிராந்தியங்களில் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்கும் நல்ல பங்களிப்பை வழங்கும்."

 

 '#வாடிக்கையாளர் நலனுக்கே முதல் முன்னுரிமை' என்ற கோட்பாட்டின் மீது இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் உறுதி கொண்டுள்ளது.  புதிதாக நிறுவப்பட்டுள்ள  ஏஜென்சி கிளைகள் மிக நவீன வசதிகள் மற்றும் சாதனங்களோடு தனிப்பயனாக்கப்பட்ட காப்பீடு தீர்வுகளை வழங்குவதற்கு சிறந்த தொழில்முறை பயிற்சிபெற்ற பணியாளர்களை கொண்டிருக்கிறது.  இந்த கிளைகளின் வழியாக, "2047-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் இலக்கை அடைவதற்கு காப்பீடு மற்றும் நிதிசார் திட்டமிடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்த களப்பணி மூலமாக பொதுமக்களை சென்றடையும் நடவடிக்கைகளை இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் மேற்கொள்ளும். 

 

வலுவான விநியோக வலையமைப்பு, புத்தாக்கமான திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர் நலனை மையமாக கொண்ட அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் காப்பீடு தொழில்துறையில் ஒரு தனித்துவமான முத்திரையை உருவாக்க இந்தியா ஃபர்ஸ்ட்லைஃப் தயாராக இருக்கிறது. 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI

செயற்கை நுண்ணுறிவு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழகம் AI திறமைமிக்க ஊழியர்கள் , ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதரவு , சிறந்த தொழ...