ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியின் நிதி உள்ளடக்கத்திற்கான அர்ப்பணிப்பு 1.45 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது
EDIT மூலம், Equitas அனைவருக்கும் சுகாதாரம், கல்வி, திறன் பயிற்சி மையங்கள் மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சிகளை மேற்கொண்டுள்ளது
சென்னை, டிசம்பர் 23, 2024: இந்தியாவின் மிகப்பெரிய SFB-களில் ஒன்றான ஈக்விடாஸ் சிறு வணிக வங்கி (Equitas Small Finance Bank,) ஆனது நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மாற்றத்தை உறுதி செய்வதற்கான அவர்களின் பல ஆண்டுகால அர்ப்பணிப்பை பெருமையுடன் நினைவுகூர்கிறது. தொடக்கத்திலிருந்தே ஈக்விடாஸ் ஆனது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மூலம் பாரம்பரிய வங்கி சேவைகளுக்கு அப்பால் சென்று தனிநபர்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது.
"வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் நிலையான சமூகத்தை கட்டமைத்தல் என்ற கூரிய நோக்கத்துடன் Equitas எப்போதும் இயக்கப்படுகிறது," என்று Equitas SFB இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. P N வாசுதேவன் கூறினார். "இந்த ஆண்டுகளில் Equitas Development Initiatives Trust (EDIT) ஏற்படுத்திய மாற்றத்தக்க செயல்பாட்டினால் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். அதன்படி ஈக்விடாஸ் ஆனது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பார்வையை அளித்துள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு தரமான கல்வியை வழங்கி, பெண்களுக்கு திறன்களை மேம்படுத்தி வரும் EDIT க்கு ஆண்டுதோறும் எங்கள் லாபத்தில் 5% பங்களிப்பை அளிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த முயற்சிகள் மூலம், வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்ய நாங்கள் பாடுபட்டுள்ளோம். நாம் எதிர்நோக்கும்போது, புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் எங்கள் பணியைத் தொடரவும், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் நாங்கள் உத்வேகம் பெறுகிறோம்."
கடந்த ஆண்டுகளில், ஈக்விடாஸ் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்து சமூகத்தை மேம்படுத்தியுள்ளது:
● 31 லட்சத்திற்கும் மேற்பட்ட கண் பராமரிப்பு பயனாளிகள்
● வேலைவாய்ப்பு கண்காட்சிகள் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம்
● எக்விடாஸ் குருகுல பள்ளிகளில் 7000+ மாணவர்களுக்கு கல்வி
● திறன் பயிற்சி திட்டங்களால் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
● 5000+ நடைபாதை குடியிருப்பாளர்களுக்கு மறுவாழ்வு சேவை
காணொளியை இங்கே பாருங்கள்: 17 Years of Financial Inclusion: Our CSR Journey & Impact on 1.45 Crore Lives
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக