திரு. ச.ஶ்ரீதரன், நிறுவனர் & சி.இ.ஓ, , https://www.walletwealth.co.in/
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி 500 இண்டெக்ஸ் ஃபண்ட்!
சிறப்பம்சங்கள்:
- புதிய ஃபண்ட் வெளியீடு டிசம்பர் 10, 2024 அன்று ஆரம்பிக்கிறது. டிசம்பர் 17, 2024 அன்று நிறைவு பெறுகிறது.
- பங்குச் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் முதல் 500 நிறுவனங்களுக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது
- குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை: ₹100 (கூடுதல் ₹1 இன் மடங்குகளில்)
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 500 இண்டெக்ஸைப் பிரதிபலிக்கும் ஓப்பன் எண்டெட் இண்டெக்ஸ் ஃபண்ட் திட்டத்தை ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி 500 இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Nifty 500 Index Fund) என்கிற பெயரில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் நிஃப்டி 500 குறியீட்டின் வருமான செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஃபண்ட் வெளியீடு (NFO) மூலம் இந்தியாவின் முன்னணி 500 நிறுவனங்களின் வளர்ச்சியில் முதலீட்டாளர்களை பங்கேற்க அனுமதிக்கிறது, இது நாட்டின் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் கிட்டத்தட்ட 94% (ஆதாரம்: நிஃடி இண்டெக்ஸ்கள் 31 அக்டோபர் 2024 இல் உள்ள நுவாமா ஆராய்ச்சி தரவு). பங்களிப்பை கொண்டுள்ளது.
நிஃப்டி 500 இண்டெக்ஸ் என்பது அனைத்து துறைகள் மற்றும் பங்குச் சந்தை முழுவதும் பல்வகைப்படுத்தலை வழங்குகிறது, லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை உள்ளடக்கியது ஆகும். இந்த விரிவான அணுகுமுறை முதலீட்டாளர்கள் மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப வளர்ச்சி வாய்ப்புகளைப் பெற முடியும் என்பதை உறுதி செய்கிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி 500 இண்டெக்ஸ் ஃபண்ட் நன்கு பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்குவதற்கான வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஃபண்ட் ஒட்டுமொத்த இந்தியப் பங்குச் சந்தையின் செயல்திறனை பிரதிபலிக்கிறது. நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்க குறைந்த செலவில், பாஸிவ் (Passive) முதலீட்டு உத்தியை தேடுபவர்களுக்கு ஏற்ப இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறியீட்டு ஆறு மாதத்துக்கு ஒரு முறை மறுசீரமைக்கப்படுகிறது, எனவே முற்றிலும் பங்குச் சந்தை போக்குகள் மற்றும் மதிப்பீட்டுகளுடன் ஒத்துப்போகும் எனலாம்.
முதலீட்டாளர்கள் ஏன் நிஃப்டி 500 இண்டெக்ஸ்-ல் முதலீடு செய்ய வேண்டும்?
- பரந்த பங்குச் சந்தை கவரேஜ்: பங்குச் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் முதல் 500 நிறுவனங்களில் முதலீடு
- வலுவான பல்வகைப்படுத்தல்: 50- க்கும் மேற்பட்ட தொழில் துறைகளை உள்ளடக்கிய வலுவான பல்வகைப்படுத்தல்.
- டைனமிக் மார்க்கெட் கேப் முதலீடு: மாறிவரும் சந்தைப் போக்குகளுக்கு ஏற்ப, பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவப் பங்குகளில் கலந்து முதலீடு
- செலவு - திறன்: ஒரு பாஸிவ் முதலீட்டு உத்தியாக, குறைந்தபட்ச செலவுகள் மற்றும் குறைவான கண்காணிப்பு பிழைகளுடன் (Tracking Errors) வருமானத்தை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பரந்த இந்தியப் பொருளாதாரத்தின் பலன்: இந்தியாவின் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் 94% பரந்த கவரேஜை வழங்குகிறது
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு:
இந்தியாவின் பொருளாதாரம் விரைவாகவும், சீராகவும் வளர்ந்து, முதலீட்டுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. வரவிருக்கும் ஆண்டுகளில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலக சந்தையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த வளர்ச்சியானது, நாட்டின் விரிவடைந்து வரும் தொழில்கள் மற்றும் பங்கு சந்தைகளில் இருந்து பயனடையக்கூடிய முதலீட்டாளர்களுக்கு ஒரு வலுவான வாய்ப்பை உருவாக்குகிறது, இது நீண்ட காலத்தில் செல்வம் (Wealth) சேர்ப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.
பொறுப்புத் துறப்பு (Disclaimer) – இங்கே குறிப்பிடப்பட்டுள்ள துறை(கள்)/பங்கு(கள்) பரிந்துரைகளை கொண்டிருக்கவில்லை மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இந்தத் துறை(கள்)/பங்கு(கள்) ஆகியவற்றில் எதிர்காலத்தில் முதலீடு செய்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.
டைனமிக் சந்தை கவரேஜ்:
நிஃப்டி 500 இண்டெக்ஸ் என்பது பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்கிறது. இது மாறிவரும் பங்குச் சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு சமநிலையான மற்றும் நெகிழ்வான (Balanced and Flexible) முதலீட்டு அணுகுமுறையை உறுதி செய்கிறது.
வருமானச் செயல்பாடு:
காலண்டர் ஆண்டு வருமானத்தைப் பார்க்கும்போது, லார்ஜ் கேப் பங்குகளின் ஏற்றத்தில் பங்கேற்பதன் மூலமும், மிட் மற்றும் ஸ்மால் கேப் சரிவுகளின் போது ஏற்ற இறக்கத்தைத் (Volatility) தணிப்பதன் மூலமும் இண்டெக்ஸ் எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதை இங்கே காணலாம்.
இந்த நிஃப்டி 500 இண்டெக்ஸ் தொடர்ந்து பல ஆண்டுகளாக சீராக வளர்ச்சியடைந்து, லார்ஜ் கேப் ஃபண்ட்களின் வருமானத்தை விஞ்சியுள்ளது. நிஃப்டி 500 டிஆர்ஐ (Nifty 500 TRI)-ஐ 10 ஆண்டுகளில் (2014 முதல் 2024 வரை) லார் கேப் சார்ந்த நிஃப்டி 100 டிஆர்ஐ உடன் ஒப்பிடும் போது, பரந்த நிஃப்டி 500 இண்டெக்ஸ் சிறந்த செயல்திறனை வழங்கியதைக் காட்டுகிறது.
எஸ்.ஐ.பி (SIP) செயல்திறன் நிஃப்டி 500 டி.ஆர்.ஐ-ஐ விட காலப்போக்கில் லார்ஜ் கேப் இண்டெக்ஸை விட தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளதை காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, 5 ஆண்டுகளில் (நவம்பர் 11, 2024 வரை), நிஃப்டி 500 டிஆர்ஐ 22% வருமானத்தை வழங்கி உள்ளது. இதேகாலக் கட்டத்தில், நிஃப்டி 100 டிஆர்ஐ 19% வருமானம் வழங்கி உள்ளது.
நவம்பர் 11, 2024 நிலவரபப்டி, கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நிலைத்திருக்கக் கூடும் அல்லது இல்லாமல் இருக்கலாம்.
* கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ரூ.1,000 எஸ்ஐபி முதலீடு
கூடுதல் விவரங்கள், முதலீட்டு ஆலோசனைக்கு..!
திரு. ச.ஶ்ரீதரன், நிறுவனர் & சி.இ.ஓ, , https://www.walletwealth.co.in/
S.Sridharan, Founder & CEO, https://www.walletwealth.co.in/
If you need any advice on investments, do call us at 9940116967.
Team Wallet Wealth,
AMFI Registered Mutual Fund Distributor
2nd Floor, No.8A, 2nd Main Road, Nanganallur,
Chennai – 600 061
Ph: 044-48612114
https://www.walletwealth.co.in/
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.ச.ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..
https://www.vikatan.com/author/855-sridharan-s
Disclaimer
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக