24 மணி நேரத்தில் கோரிக்கை ஏற்பு:
பத்திரிகையாளர் மரணமடைந்தால் குடும்ப உதவி நிதி ரூ.10 லட்சமாக உயர்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, டிச.19- 2024
தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசி ரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக் காரர்கள், பிழைத்திருத்துபவர் ஆகியோர் பணியில் இருக்கும் போது இயற்கை எய்தினால் அவர்களுடைய குடும்பத்திற்குமுதல்- அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து குடும்ப உதவி நிதி வழங்கப்படுகிறது.
அதன்படி பத்திரிகையாளராக 20 ஆண்டுகள் பணிபுரிந்து மரணம் அடைந்திருந்தால் ரூ.5 லட்சமும், 15 ஆண்டுக ளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரமும், 10 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் வழங் கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள், பத்திரிகையாளர் கள் மரணமடைந்தால் வழங்கப்படும் குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று கொண்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று அதற்கான அரசாணையை வெளியிட்டார். அதாவது 24 மணி நேரத்தில் அந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
அதன்படி இனி 20 ஆண்டுகள் பணிபுரிந்து மரணம் அடைந் தால் ரூ.10 லட்சம் குடும்ப உதவி நிதி வழங்கப்படும். 15 ஆண்டுக ளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், 10 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சமும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து மரணம் அடைந்தால் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் குடும்ப உதவி நிதி உயர்த்தி வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக