குளோபல் இந்தியர்களுக்காக உலகத்தரத்தில் சர்வதேச வங்கிச்சேவை மையமாக தென்னிந்தியாவில் தனது மிகப்பெரிய கிளையைத் தொடங்கும் ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி
சென்னை மாநகரின் பாந்தியன் சாலையில் இடம் மாற்றப்பட்ட கிளை வளாகத்திற்குள் இந்த சர்வதேச வங்கிச்சேவை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது
மும்பைக்குப் பிறகு, சென்னையில் இரண்டாவது சர்வதேச மையமாக நிறுவப்படும் இது, பிரத்யேகமான பல்வேறு சந்தைகளுக்குரிய சொத்துவள தீர்வுகளை வழங்கும்
குளோபல் இந்தியர்களுக்கான பிரிவின் மீது வங்கியின் கூர்நோக்கத்தை மேலும் முன்னெடுக்கும் இம்மையம், சொத்து மற்றும் அதிக வசதி கொண்ட பிரிவின் வளர்ச்சியை துரிதமாக்கும்.
சென்னை: நவம்பர் 11: 2024: ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி, இந்தியாவின் சென்னை மாநகரின் பாந்தியன் சாலை கிளையில் 'குளோபல் இந்தியர்களுக்காக' அதன் இரண்டாவது சர்வதேச வங்கிச்சேவை மையம் தொடங்கப்பட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது. பணக்கார மற்றும் அதிக நிகர சொத்து மதிப்பைக் கொண்டிருக்கும் நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் உலகெங்கிலும் அவர்களின் சொத்து வளம் மற்றும் வங்கி சார்ந்த தேவைகளை திருப்திகரமாக நிர்வகிப்பதும் இந்த சர்வதேச வங்கிச்சேவை மையத்தின் நோக்கமாகும். முன்பு ஹாடோஸ் சாலையில் இயங்கி வந்த வங்கிக்கிளை சமீபத்தில் பாந்தியன் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வளாகத்தில் இம்மையம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு தென்னிந்தியாவின் மிகப்பெரிய கிளையாக பாந்தியன் சாலை கிளை செயல்படும்.
சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் இம்மையமானது, இரண்டாவது சர்வதேச மையமாக செயல்படும். கடந்த மாதம் மும்பையில் தனது முதல் மையத்தை ஸ்டான்டர்டு சார்ட்டர்டு தொடங்கியிருந்தது. இம்மையங்கள், ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி கிளைகள் வளாகத்திற்குள் பிரத்யேக அமைவிடங்களில் செயல்படும். நாடுகளின் எல்லைகளைக் கடந்து, சொத்து வள தீர்வுகளை வழங்குவது மீது சிறப்பு கவனம் செலுத்தும்.
Nitin Chengappa, Managing Director, Head of Affluent Banking and Distribution Network, Standard Chartered Bank, India and Aditya Mandloi, Managing Director, Head of Wealth and Retail Banking, India and South Asia, Standard Chartered Bank.
இன்றைய காலகட்டத்தில் உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவழியினர் மற்றும் இந்தியாவில் குடியிருக்கும் அதிக வசதி உள்ள தனிநபர்களும், அவர்களின் தனிப்பட்ட, பிசினஸ் மற்றும் சொத்துவள தேவைகளுக்கு ஒரு உலகளாவிய (குளோபல்) கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவது அதிகரித்து வருகிறது, நிகழ்ந்து வரும் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டிருக்கும் இந்த வங்கி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங் காங், ஜெர்சி (யுகே) ஆகியவற்றில் இயங்கி வரும் அதன் சர்வதேச சொத்துவள மையங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பல சந்தைகளுக்கான வாயிலை வழங்குவதன் மூலம் இந்நபர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும்.
இந்த சர்வதேச வங்கிச்சேவை மையம், பன்னாட்டு தீர்வுகள் மற்றும் அனுபவங்களின் சிறப்பான தொகுப்பை தனது சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். தனது முத்திரை பதித்த முதலீடு வாய்ப்புகளுக்கு அணுகுவசதி, சிரமமற்ற எளிதான சர்வதேச வங்கிச்சேவை திறன்கள், நாட்டின் எல்லைகளைக் கடந்த சொத்துவள மற்றும் கடன் வழங்கல் தீர்வுகள் ஆகியவை இதில் உள்ளடங்கும். வாடிக்கையாளர்களின் அமைவிடத்திற்கு மிக அருகில் இருக்கும் அதிக அனுபவம் மிக்க INSEAD பயிற்சி பெற்ற வாடிக்கையாளர் நல்லுறவு மேலாளர்கள் இச்சேவைகளை வழங்குவார்கள். நாட்டின் எல்லைகளைக் கடந்தும், பல்வேறு நாடுகளில் அவர்களது சொத்து மற்றும் முதலீடு செயல்பாடுகளை நிர்வகிக்க எமது உலகளாவிய வலையமைப்பில் இடம்பெற்றுள்ள சொத்துவள சிறப்பு நிபுணர்களும், பார்ட்னர்களும் மேலதிக ஆதரவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.
இந்நிகழ்வின்போது பேசிய ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கியின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான சொத்து வளம் மற்றும் ரீடெய்ல் வங்கிச்சேவையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான திரு. ஆதித்யா மாண்ட்லோய், "உலகளாவிய இந்திய வாடிக்கையாளர்கள் இவ்வங்கிக்கான முக்கிய கூர்நோக்க நபர்களாக இருக்கின்ற நிலையில், கடந்த மாதத்தில் எமது முதல் சர்வதேச வங்கிச்சேவை மையத்தை நாங்கள் தொடங்கினோம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முதலீடு மற்றும் சொத்துவள கடன் வழங்கல் தீர்வுகளை எல்லைகளைக் கடந்து, வழங்குவதன் மூலம் உலகளாவிய செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் இந்தியர்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்வதன் நோக்கத்தோடு, எமது வலையமைப்பில் அத்தகைய இரண்டாவது மையமாக சென்னையில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளில் முதலீடு வாய்ப்புகளுக்கான பிரத்யேக அணுகுவசதியை இம்மையங்கள் வழங்கும். ஸ்டான்டர்டு சார்ட்டர்டு – ன் பரந்து விரிந்த சர்வதேச வலையமைப்பு மற்றும் ஆழமான நிபுணத்துவத்தை திறம்பட பயன்படுத்துவதன் வழியாக, உலகளாவிய சந்தைகள் அனைத்திலும் அவர்களது செயல்பாடுகளை மேற்கொள்ளவும், விரிவாக்கவும் வாடிக்கையாளர்களுக்கு இம்மையங்கள் திறனதிகாரத்தை வழங்கும். எமது தனிப்பட்ட மற்றும் முன்னுரிமை வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான, உலகத்தர தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்திய ஃபிரான்சைஸ் செயல்பாடுகளை மேலும் வளர்ப்பதில் எமது தொடர்ச்சியான பொறுப்புறுதியை இந்த மையத்தின் தொடக்கம் எடுத்துக்காட்டுகிறது." என்று கூறினார்.
இந்தியாவிற்கான ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கியின்அஃப்ளுயென்ட் பேங்கிங் மற்றும் வினியோக வலையமைப்பு – ன் நிர்வாக இயக்குனர் திரு. நிதின் செங்கப்பா பேசுகையில், "வாடிக்கையாளர்களின் மாறுபட்ட சொத்துவள மேலாண்மை தேவைகளை ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி நன்கு உணர்ந்திருக்கிறது; ஆகவே தான், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் பிசினஸ் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் தொடக்கம் முதல், இறுதி வரையிலான நிதிசார் தீர்வுகளின் முழு தொகுப்பிற்கும் அணுகுவசதியை இம்மையங்களின் மூலம் கொண்டு வருகிறது.
சென்னையில் இடமாற்றம் செய்யப்பட்டு, பாந்தியன் சாலையில் தற்போது அமைந்திருக்கும் கிளையானது, எமது பிரதான முதன்மை கிளைகளுள் ஒன்றாகும்; தென்னிந்தியாவில் மிகப்பெரிய கிளை என்ற பெருமையையும் இது கொண்டிருக்கிறது, எமது உலகளாவிய வலையமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான பயிற்சி பெற்ற நல்லுறவு மேலாளர்களின் ஆதரவு பலத்தோடு எமது வாடிக்கையாளர்களின் பல்வேறு சந்தைகளுக்கான நிதிசார் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற எமது இரண்டாவது சர்வதேச வங்கிச்சேவை மையத்தை எமது பாந்தியன் சாலை கிளை கொண்டிருக்கும்." என்று கூறினார்.